Home
News

Nothing போனை தூக்கி சாப்பிட்ட DOOGEE Blade GT.. 32GB RAM.. 2TB ஸ்டோரேஜுடன் மாஸ் பவர்.. ரக்டு லுக்.. என்ன விலை?

டூஜி (DOOGEE) நிறுவனம் அதன் அடுத்த ரக்டு ஸ்மார்ட்போன் மாடலான டூஜி பிளேடு ஜிடி (DOOGEE Blade GT) என்ற பவர்புல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு நத்திங் போன் 2 (Nothing Phone 2) போல காட்சியளித்தாலும், இது நத்திங் போன் 2 சாதனத்தை விட அதிக சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய DOOGEE Blade GT போனின் விலை மற்றும் முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.

தரமான ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged smartphone) சாதனங்களை உருவாக்கி விற்பனை செய்து வரும் மிகவும் பிரபலமான டூஜி (DOOGEE) ஸ்மார்ட்போன் பிராண்டில் இருந்து லேட்டஸ்ட் அறிமுகமாக வெளிவந்துள்ள சாதனம் தான் இந்த புதிய DOOGEE Blade GT சாதனம். இது 10.5mm அளவு கொண்ட அல்ட்ரா தின் ரக்டு ஸ்மார்ட்போன் (ultra thin rugged smartphone) மாடலாக வெளிவந்துள்ளது.

Nothing போனை தூக்கி சாப்பிட்ட DOOGEE Blade GT.. 32GB RAM.. 2TB மெமரி..

Nothing போனை தூக்கி சாப்பிட்ட DOOGEE Blade GT:

இந்த ஸ்மார்ட்போன் பல மிரட்டலான அம்சங்களை பேக் செய்துள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளதென்று தகவலை பார்க்கலாம் வாங்க. DOOGEE Blade GT ஸ்மார்ட்போன் சாதனம் 6.72" இன்ச் அளவு கொண்ட முழு எச்டி டிஸ்பிளே (Full HD display) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவை கொண்டுள்ளது.

நத்திங் ஸ்மார்ட்போன்களை போல, இந்த DOOGEE Blade GT ஸ்மார்ட்போன் சாதனங்களும் கண்ணாடி போன்ற டிரான்ஸ்பரென்ட் தோற்றத்தை கொண்டுள்ளது. அதேபோல், பின்பக்கத்தில் நத்திங் போனில் இருப்பது போன்ற க்லிப் அம்சத்தை போன்ற லைட் எல்ப் (Light Elf) அம்சத்தை இந்த சாதனம் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கிறது. இது பிளாக் (black) மற்றும் சில்வர் (silver) நிறத்தில் வருகிறது.

டூஜி பிளேடு ஜிடி (DOOGEE Blade GT):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050) உடன் வருகிறது. இது 12GB ரேம் (RAM) அம்சத்துடன் 20GB விரிவாக்கக்கூடிய ரேம் (expandable RAM) ஆதரவு அம்சத்துடனும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ரேம் அம்சம் 256GB ஸ்டோரேஜ் (internal storage) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெமரியை (external memory) TF கார்டு உதவி மூலம் 2TB வரை விரிவாக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் IP68, IP69K மற்றும் MIL-STD-810H மிலிட்டரி கிரேட் தரத்தில் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த DOOGEE Blade GT ஸ்மார்ட்போன் சாதனம் 48MP மெயின் கேமராவுடன் 5MP + 2MP சென்சார்களை கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை இந்த சாதனம் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த போன் 20MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5500mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

டூஜி பிளேடு ஜிடி விலை (DOOGEE Blade GT Price):

DOOGEE Blade GT ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது $399 அமெரிக்க டாலர் என்ற சலுகை விலையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 34,654 ஆகும். இதன் அசல் விலை $499 டாலர் என்பது குறிப்பித்தக்கது. இந்திய மதிப்பில் இதன் அசல் விலை தோராயமாக ரூ. 43,340 வரை செல்கிறது. தற்போது அமேசான் தளம் வழியாக அமெரிக்காவில் வாங்க கிடைக்கிறது. விரைவில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
DOOGEE Blade GT Rugged Smartphone With 32GB RAM 256GB Storage 2TB Memory Launched Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X