Home
News

சீனாவ சிறுசா எடை போடாதீங்க.. இந்தியா இன்னும் 5G-ல இருக்கு.. சீனா 10G-க்கு தாவிடுச்சு.. விழிபிதுங்கும் ஸ்பீட்..

உலக நாடுகளில் உள்ள பல வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளே இன்னும் முழுமையாக 5ஜி (5G) தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத நிலையில், சீனா (China) இப்போது எல்லோரையும் ஓவர் டேக் செய்யும் விதமாக 10ஜி தொழில்நுட்பத்தை (10G network technology) பயன்படுத்த துவங்கியுள்ளது. ஆம், சரியாக தான் படித்தீர்கள். உலகத்தின் முதல் 10ஜி (10G) தொழில்நுட்ப நெட்வொர்க்கை பயன்படுத்திய முதல் நாடாக இப்போது சீனா திகழ்கிறது. இந்த புதிய 10ஜி தொழில்நுட்பத்தின் வேகம் (10G network speed) எத்தகையது? இதன் அப்லோட் மற்றும் டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு ஃபாஸ்ட் ஆனது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

உலகளவில் இணைய சேவையின் (Internet service) தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முக்கியமான நகரங்கள் துவங்கி இப்போது கிராமகாபுரங்களில் கூட இணைய சேவையின் தேவை பெருகிவிட்டது. தொலைத்தொடர்பு (Telecom) சேவையுடன் எப்படி ஒரு தனி மனிதர் இணைந்திருப்பது முக்கியமானதோ, அதேபோல், இப்போது இணைய சேவையுடன் மக்கள் இணைத்திருப்பதும் மிக முக்கியமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. பொழுதுபோக்கு (entertainment), வங்கி சேவை (banking services), ஆன்லைன் ஷாப்பிங் (online shopping), கேமிங் (gaming)என்று பல விஷயங்களுக்கு இணையம் முக்கியமானதாகிவிட்டது.

சீனாவ சிறுசா எடை போடாதீங்க.. இந்தியா 5G-ல இருக்கு.. சீனா 10G ரெடி..

சீனாவ சிறுசா எடை போடாதீங்க.. இந்தியா இன்னும் 5G-ல இருக்கு.. சீனா 10G-க்கு தாவிடுச்சு:

இணைய சேவை இருந்தால் மட்டும் போதுமா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இணைய சேவை இருப்பதை காட்டிலும், அந்த இணைய சேவை எவ்வளவு வேகமாக (Internet speed is important) இருக்கிறது என்பது தான் இந்த காலகட்டத்தில் முக்கியமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. முதலில் மக்கள் 2ஜி இணைய சேவையை (2G internet service) பயன்படுத்தி மகிழ்ந்தனர். அப்போது, அதில் யாருக்கும் குறையில்லை. சிறிது காலத்திற்கு பிறகு, மக்கள் 3ஜி சேவைக்கு அப்கிரேட் (3G service upgrade) செய்யப்பட்டதும். 2ஜி சேவையை வெறுக்க துவங்கிவிட்டனர்.

இதற்கான முக்கியம் காரணம் இணைய வேகம் (internet speed) தான். ஸ்பீடான 3ஜி (3G) சேவையை பயன்படுத்திய பிறகு, யாருக்கும் 2ஜி (2G) நெட்வொர்க்கை பயன்படுத்த விருப்பமில்லாமல் போனது. 3ஜி சேவைக்கு மாறிய சிறிய காலத்தில் 4ஜி (4G) வந்தது, பிறகு அதனை தொடர்ந்து இப்போது 5ஜி (5G) நெட்வொர்க் சேவையை இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் 3ஜி மற்றும் 4ஜி ஸ்பீட் (3G and 4G speed) மேல் மக்களுக்கு அவ்வளவு விருப்பம் இல்லாமல் போனது.

இந்தியா 5ஜி சேவையை முழுமைப்படுத்த தடுமாறும் வேளையில் சீனாவின் 10G சேவை அறிமுகம்:

5ஜி தொழில்நுட்பத்தை (5G technology) இன்னும் இந்தியா முழுமையாக விரிவுபடுத்தவில்லை என்றாலும் கூட, மக்கள் 5ஜி சேவையை (5G service) பயன்படுத்தவே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான பகுதியில் 4ஜி நெட்வொர்க் சேவை பயன்படுத்த கிடைக்கிறது. இப்படி இந்தியா இன்னும் 5ஜி சேவையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா நாடானது அதன் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவையை (10G standard broadband network service) அறிமுகம் செய்துள்ளது.

உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில், சீனா இப்போது 10ஜி தொழில்நுட்ப சேவையை (10G technology) பயன்படுத்த துவங்கியுள்ளது. இந்த புதிய 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவையை சீனா, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒரு நகரமாக செயல்பட்டு வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

புதிய 10G சேவையின் வேகம் எத்தகையது? விழிபிதுங்கும் ஸ்பீட்னா இதானா?

5ஜி வேகத்தை பார்த்து வியந்து வாய்பிளந்த உலக நாடுகள், இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10ஜி நெட்வொர்க்கின் வேகத்தை (10G network speed) பார்த்து, ஆச்சரியத்துடன் விழிபிதுங்கி நிற்கின்றனர். புதிய 10G சேவையின் வேகம் பற்றி பேசுகையில், இதன் டவுன்லோட் ஸ்பீட் (10G download speed) ஆனது 9834 Mbps ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதன் அப்லோட் ஸ்பீட் (10G upload speed) ஆனது 1008 Mbps ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது 1 நொடியில் இந்த புதிய 10G தொழில்நுட்பம் 9.8GB டவுன்லோட் ஸ்பீட் வேகத்தை கொண்டுள்ளது. அதேபோல், 1 நொடிக்கு இது 10GB அப்லோட் ஸ்பீட் வேகத்தை கொண்டுள்ளது. அதாவது, உங்களால் வெறும் 1 நொடியில் 9 முழு எச்டி திரைப்படத்தை பதிவிறக்கம் செய்யக்கூடிய வேகம் இந்த 10G நெட்வொர்க்கிற்கு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Don't underestimate China India is still in 5G Speed But China has jumped to 10G and the speed is amazing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X