எச்சரிக்கை: தெரியாம கூட இந்த 13 வெப்சைட் ஓபன் பண்ணாதிங்க., விளைவு ரொம்ப பெரிசா இருக்கும்!

|

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

மறுபுறம் பரவும் வதந்திகள்

மறுபுறம் பரவும் வதந்திகள்

கொரோனா அச்சுறுத்தல் ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில், மறுபுறம் வதந்திகள் தொடர்ந்து பரவிக் கொண்டே வருகிறது. நம் தெருவுக்கு அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா வந்துவிட்டது போன்ற வதந்திகள் நீடித்துக் கொண்டே வருகிறது. இதை பல்வேறு இணையதளங்களும் செய்து வருகிறது.

வீட்டில் இருந்தபடியே 1 மணி நேரத்துக்கு ரூ.1000 வரை சம்பாதிக்கலாம்: இதோ எளிய வழிமுறைகள்!வீட்டில் இருந்தபடியே 1 மணி நேரத்துக்கு ரூ.1000 வரை சம்பாதிக்கலாம்: இதோ எளிய வழிமுறைகள்!

தகவல்கள் திருடும் பணி

தகவல்கள் திருடும் பணி

அதேபோல், இதன் மூலமாகவும் தகவல்கள் திருடும் பணியில் ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம் கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரலாம்.

ஏணைய பி.டி.எப்., பைல்கள்

ஏணைய பி.டி.எப்., பைல்கள்

பொதுவாக அந்த நேரத்தில் எந்த நிகழ்வு டிரெண்டாக உள்ளதோ அதன்பேரில் ஹேக்கர்கள் சிந்தித்து செயல்பட தொடங்குவார்கள். அதன்படி தற்போது கொரோனா பேரில் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, கொரோனா தடுப்பு முறைகள், கொரோனா மருந்து என, கொரோனா வைரஸ் போன்ற பல பெயரில் ஏணைய பி.டி.எப்., பைல்களை இணையதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும்

தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும்

இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்தவுடன் சமயத்தில் ஏதாவது விஷயங்களோ, அல்லது ஒன்றும் இல்லாமல் கூட போகலாம். ஆனால் இதுபோன்ற பிடிஎப் பைல்கள் மால்வேர்களை கொண்டது. இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்ததும் மால்வேர்கள் ஊடுருவி தங்களது தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும். எனவே இணையத்தில் தகவலை தேடும் போதும், படிக்கும் போது கவனத்தோடு செயல்படவும்.

சைபர் கிரைம் பிரிவு

சைபர் கிரைம் பிரிவு

டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு பொது மக்களை எச்சரித்து வருகிறது. டெல்லி காவல்துறை "ஆபத்தான இணையதளங்கள்" குறித்த பட்டியல் குறித்து டுவிட் செய்துள்ளது. அவைகளை எக்காரணம் கொண்டும் ஓபன் செய்ய வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்தியா முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்களின் (COVID 19) மொத்த எண்ணிக்கை மார்ச் 26 நிலவரப்படி 727 ஆக இருக்கிறது. பொதுமக்கள் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமாகவே முன்வந்து எடுத்து வருகின்றனர்.

பீதி தேவையில்லை

பீதி தேவையில்லை

பீதி தேவையில்லை என்று அரசாங்கம் உறுதியளித்து, இணைய குற்றவாளிகள் இணைய பயனர்களுக்கு சரியான பாதையை காட்டி வருகிறது. அதேபோல் எந்தெந்த தளங்களை ஓபன் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் ஓபன் செய்ய வேண்டாம்

எக்காரணம் கொண்டும் ஓபன் செய்ய வேண்டாம்

Coronavirus.space, coronavirus-map.com, blogcoronacl.canalcero.digital, vaccine-coronavirus.com. coronavirus.cc,bestcoronavirusprotect.tk, coronavisusupdate.tk, coronavirus.zone போன்ற இணையதளங்களை எக்காரணம் கொண்டும் ஓபன் செய்ய வேண்டாம்.

டாடா ஸ்கை அதிரடி அறிவிப்பு .! இனி இந்த சேவை இலவசம்.!டாடா ஸ்கை அதிரடி அறிவிப்பு .! இனி இந்த சேவை இலவசம்.!

இணையதளங்களை ஓபன் செய்யக் கூடாது

இணையதளங்களை ஓபன் செய்யக் கூடாது

அதேபோல் coronavirus-realtime.com, coronavirus.app, bgvfr.coronavirusaware.xyz, corona-virus.healthcare, survivecoronavirus.org ஆகிய இணையதளங்களை ஓபன் செய்யக் கூடாது என காவல்துறையால் அறிவுறுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Dont open these list of dangerous corona virus related websites: police warning

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X