2016-ல் காணத்தவற விடக்கூடாத 'ஸ்க்கை வாட்சிங்' நிகழ்வு தேதிகள்..!
வானத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஒரு அழகான, அமைதியான, அருமையான தருணம் ஒன்று இருக்கவே முடியாது. அதுவும் தற்செயலாக வானத்தை பார்க்கும் போது ஒரு விண்மீனோ அல்லது ஒரு ஏரி நட்சத்திரத்தையோ பார்த்து விட்டால் நாம் கொள்ளும் இன்பதிற்கு அளவே இல்லை.
அதற்காக 24 மணி நேரமும் வானத்தையே பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதோ உங்களுக்காக மனித கண்களுக்கு புலப்படும் வகையிலான விண்வெளி நிகழ்வுகள் எந்தெந்த தேதியில் நடக்கும் என்ற பட்டியலைத்தான் கீழ்வரும் ஸ்லைடார்களில் தொகுத்துள்ளோம். தவறாமல் கண்டு களிக்ககவும்..!

ஜனவரி 19 :
மிகவும் வண்ணமயமான நட்சத்திரங்களில் ஒன்றான ஆரஞ்ச் அல்டிபறான்க்கு (orange Aldebaran) பின்புறம் நிலவு கடந்து போகும் (Occultation of Aldebaran)

மார்ச் 8-9 :
முழு சூரிய கிரகணம் (Total eclipse of the sun)

மார்ச் 23 :
நிலவின் பெனும்ப்ரல் கிரகணம் (Penumbral eclipse of the moon)

மே 21 :
செவ்வாய் கிரககத்துடன் இணைந்து நிலவு நீல நிறத்தில் காட்சியளிக்கும் (A "blue moon" with Mars).

மே 18 - ஜூன் 3 :
செவ்வாய் கிரகம், மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஒரு நட்சத்திரம் போன்று ஜொலிக்கும்.

ஜூலை 29 :
மீண்டும் மிகவும் வண்ணமயமான நட்சத்திரங்களில் ஒன்றான ஆரஞ்ச் அல்டிபறான்க்கு (orange Aldebaran) பின்புறம் நிலவு கடந்து போகும் (Occultation of Aldebaran) நிகழும்.

ஆகஸ்ட் 11- 12 :
பேற்சேட் விண்கற்கள் பொழிவு (The Perseid meteor shower)

ஆகஸ்ட் 28 :
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, மேற்கு - தென்மேற்கு வானத்தில் இரண்டு பிரகாசமான கிரகங்கள் ஆன வீனஸ் மற்றும் வியாழன் ஒன்றை ஒன்று நெருங்கும் அது பளிச்சென்று தெரியும். (A brilliant double planet).

அக்டோபர் 19 :
மீண்டும் ஒரு முறை வண்ணமயமான நட்சத்திரங்களில் ஒன்றான ஆரஞ்ச் அல்டிபறான்க்கு (orange Aldebaran) பின்புறம் நிலவு கடந்து போகும் (Occultation of Aldebaran) நிகழும்.

நவம்பர் 14 :
பூமி கிரகத்திற்கு மிக அருகாமையில் முழு சந்திர கிரகணம் நிகழும் (Supermoon)

டிசம்பர் 13 - 14 :
ஜெமீனிட் விண்கற்கள் பொழிவு (The Geminid meteor shower)

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications