Google-ல் நீங்கள் தேடவே கூடாதா 5 விஷயங்கள்.. மீறி தேடினால் 7 ஆண்டு சிறை உறுதி.. என்ன தேட கூடாது? லிஸ்ட் இதோ..
கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் சர்ச் என்ஜின் (Google search engine) அம்சத்தை பில்லியன் கணக்கான நபர்கள் உலகம் முழுக்க பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக கூகுள் சர்ச் தளத்தில் (Google search site), பல்வேறு தகவல்களை ஒவ்வொருத்தரும் தேடுகிறார்கள். இருப்பினும், கூகுள் தளத்தில் தேடவே கூடாத சில விஷயங்கள் (Don't ever search these thins on Google) உள்ளன. இந்த விஷயங்களை மீறி தேடுனால், கண்டிப்பாக 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி என்கிறார்கள் நிபுணர்கள். எந்த விஷயங்களை நீங்கள் கூகுளில் தேடவே கூடாது என்பது இங்கே.
கூகுள் சர்ச் என்ஜின் தலத்தை (Google search engine site) பயன்படுத்தி 1 நொடிக்கு சுமார் 99,000 தேடல்கள் தேடப்படுகின்றன (google search per second). அதேபோல், 1 நாளைக்கு சுமார் 8.5 தேடல்கள் GOOGLE சர்ச் தளத்தில் தேடப்படுகிறது (google search per day). ஏறக்குறைய 4.97 பில்லியன் மக்கள் Google தளத்தை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Google-ல் நீங்கள் தேடவே கூடாதா 5 விஷயங்கள்.. மீறி தேடினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை:
உலக மக்களின் 91% தேடல்கள் கூகுள் சர்ச் தளம் வழியாகவே நடைபெறுகிறது. இப்படி ஒவ்வொரு நாலும் ஒரு சராசரி மனிதர், குறைந்தது 3 முறையாவது பல்வேறு காரணங்களுக்காக கூகுள் சர்ச் என்ஜினை பயன்படுத்துவதாக 2024-ல் வெளியான கணக்கெடுப்பு காண்பிக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்வதர்காக மக்கள் தினசரி Google சைட்டை (Google website) பயன்படுத்த வேண்டியதுள்ளது.
சமையல் டிப்ஸ் (cooking tips), தங்க விலை (gold rate today), ஸ்மார்ட்போன் (smartphone), டிவி (TV), ஆன்லைன் பேங்கிங் (online banking), சந்தேகமான கேள்விகளுக்கான விடை (question and answers), அந்தரங்க கேள்விகள் மற்றும் தகவல்கள் என்று பலதரப்பட்ட விஷயங்களை மக்கள் கூகுள் தளத்தில் தேடுகிறார்கள். என்ன தான் பல்வேறு வகையான தகவல்களை மக்கள் தேடினாலும், கூகுள் தளத்தில் ஒரு போதும் விளையாட்டாக கூட தேடவே கூடாத சில தகவல்கள் என்று சில தகவல்கள் உள்ளன.
கூகுள் தளத்தில் விளையாட்டாக கூட இதை தேடிவிடாதீர்கள்:
இவற்றை தேடினால், நீங்கள் நேரடியாக போலீசார் கண்காணிப்பிற்குள் (under police surveillance) கொண்டு செல்லப்படுவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு 5 முதல் 7 வருடம் வரை சிறை தண்டனை (arrest) கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சரி, கூகுள் தளத்தில் எந்த மாதிரியான தகவல்களை தேடவே கூடாது (do not search these things on Google ever) என்பதை பற்றி இப்போது பார்க்கலாமா? வாருங்கள் சொல்கிறோம்.
கீழ் வரும் தகவல்களை விளையாட்டாக கூட Google தளத்தில் தேடி விடாதீர்கள்:
- குழந்தைகள் மற்றும் சிறார் ஆபாச படங்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை ஒரு போதும் Google சர்ச் இல் தேட கூடாது.
- வெடிகுண்டு, வெடிமருந்து தயாரிப்பது எப்படி என்பதை கூகுளில் தேடவே கூடாது.
- துப்பாக்கி செய்வது எப்படி, பீரங்கி செய்வது எப்படி, ராக்கெட் லாஞ்சர் செய்வது எப்படி என்பதை தேட கூடாது.
- தடை செய்யப்பட்ட தளங்கள் மூலம் சட்டவிரோதமான செயல்கள் மட்டும் ஹேக்கிங் கற்றுக்கொள்வது தொடர்பான தகவல்களை தேட கூடாது.
இந்த நான்கு விஷயங்களை மக்கள் ஒரு போதும் கூகுள் சர்ச் மூலம் சர்ச் செய்து தேடி பார்க்கவே கூடாது. சிறார் தொடர்பான ஆபாச தகவல்களை தேடும் நபர்களுக்கு நேரடியாக 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி என்கிறார்கள் சைபர் கிரைம் அதிகாரிகள். Incognito mode மூலம் சர்ச் செய்தாலும், இந்த தகவல்கள் நேரடியாக போலீசாரின் கண்காணிப்பின் கீழ் செல்லும் என்பதை நினைவில்கொள்ளுங்கள் மக்களே.


Click it and Unblock the Notifications








