மறந்துக்கூட இந்த 5 விஷயத்தை பண்ணாதீங்க.. மீறினால் உங்கள் WhatsApp கணக்கு தடை செய்யப்படும்!

|

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த தளமானது பயனர்கள் தேவை அறிந்து அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேசமயத்தில் வாட்ஸ்அப் தங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. விதிமுறைகளை மீறும் பயனர்களின் கணக்கையும், புகார்கள் பெறும் பயனர்களின் கணக்கையும் வாட்ஸ்அப் ஊர்ஜிதப்படுத்தி தடை செய்கிறது.

குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்

குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்

வாட்ஸ்அப் மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களின் கணக்கை தடை செய்து அதன் எண்ணிக்கையை மாதாந்திர இணக்க அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்அப் இல் உங்களது கணக்கும் தடை செய்யப்படாமல் இருக்க குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது என்பது கட்டாயம். அது என்னென்ன என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் எடுக்கும் நடவடிக்கை

வாட்ஸ்அப் எடுக்கும் நடவடிக்கை

ஸ்பேஸ் செய்திகளை அனுப்புவதாக புகார்கள் பெற்றாலோ அல்லது நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறினாலோ வாட்ஸ்அப் பயனர்களின் கணக்கை தடை செய்கிறது.

உங்களுக்கு வரும் ஆதாரமற்ற தகவலை பகிராமல் இருப்பது நல்லது. தெரியாத தொடர்புகளுக்கு எந்தவொரு தேவையற்ற மெசேஜையும் அனுப்ப வேண்டாம். நிறுவனம் வகுத்துள்ள நடைமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கையும் வாட்ஸ்அப் உடனடியாக தடை செய்யும்.

ஸ்பேம் மெசேஜ்களை பகிரும் கணக்குகள் மீதும் வாட்ஸ்அப் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

ஸ்கேமர்கள் மற்றும் ஹேக்கர்களால் குறி வைக்கப்படும் கணக்கு

ஸ்கேமர்கள் மற்றும் ஹேக்கர்களால் குறி வைக்கப்படும் கணக்கு

மெட்டாவிற்கு சொந்தமான செய்தி பகிர்வு தளமான வாட்ஸ்அப் ஸ்கேமர்கள் மற்றும் ஹேக்கர்களால் அடிக்கடி குறிவைக்கப்படுகிறது. அதேபோல் போலி செய்திகளை எளிதில் பரப்பும் தளமாகவும் புகார் அளிக்கப்படுகிறது.

தீங்கிழைக்கும் செயல்களை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் அடிக்கடி பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் தனியுரிமை சேவைகளை வெளியிடுகிறது.

வாட்ஸ்அப் கணக்கில் பயனர் ஸ்பேமில் ஈடுபட்டாலோ, மோசடி அல்லது சேவை விதிமுறைகளில் ஈடுபட்டாலோ நிறுவனம் பயனர் கணக்கை உடனடியாக தடுக்கிறது.

உடனடி நடவடிக்கை எடுக்கும் வாட்ஸ்அப்

உடனடி நடவடிக்கை எடுக்கும் வாட்ஸ்அப்

சில சமயங்களில் நமக்கே தெரியாமல் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்படும். ஒன்றுமே செய்யவில்லையே ஏன் நமது கணக்கு தடை செய்யப்பட்டது என்ற குழப்பம் ஏற்படும். ஆனால் அதற்கும் காரணத்தை வைத்திருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்.

வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் மற்றும் மீடியாக்களின் உண்மைத் தன்மை அறியாமல் ஷேர் செய்திருக்கக் கூடும். இப்படி செய்தாலும் வாட்ஸ்அப் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்கும்.

வாட்ஸ்அப்பில் தங்களது கணக்குகள் தடை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டாம்

இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டாம்

1. மெசேஜ் இல் உண்மை தன்மை உள்ளதா அல்லது முறையான ஆதாரம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதை அறிவதற்கு முன் எந்த செய்தியையும் பகிர வேண்டாம். இதன் காரணமாகவே வாட்ஸ் அப் ஐந்த நபர்களுக்கு மட்டுமே ஒரு மெசேஜை ஷேர் செய்ய முடியும் என நிபந்தனையை விதித்திருக்கிறது.

2. மெஷின் லேர்னிங் என்ற தொழில்நுட்பத்தை வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது. எனவே லிங்க் உடன் வரும் எந்த தேவையற்ற மெசேஜையும் பகிர வேண்டாம். அது ஸ்பேமிங் மெசேஜ் லிங்க் ஆக கூட இருக்கலாம். இப்படி செய்தால் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் ஸ்பேகராக பில்டர் செய்யப்படுவீர்கள். இதுபோன்ற மெசேஜ்களை நீங்களும் தொட வேண்டாம்.

தகவலை சரிபார்ப்பது அவசியம்

3. பயனர்கள் உங்கள் கணக்குக் குறித்து புகார் அளிக்காமல் இருக்கும்படி நடந்து கொள்ளவும். பலமுறை உங்கள் கணக்கு குறித்து புகாரளிக்கப்பட்டால் வாட்ஸ்அப் உங்கள் கணக்கை தடை செய்யும்.

4. வாட்ஸஅப் இன் தனியுரிமைக் கொள்கைகளை மதிக்கவும். தேவையற்ற குழுக்களில் நீங்கள் சேர்க்கப்பட்டால் உடனே அதில் இருந்து வெளியேறிவிடவும். எந்த ஒரு குரூப்-ம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் ஆரம்பித்த பிறகும் நீங்கள் அதில் அட்மின் ஆக இருக்கும்பட்சத்தில் குரூப்பில் பகிரப்படும் தகவலை சரி பார்த்துக் கொள்ளவும்.

ஆதாரத்தன்மை முக்கியம்

5. வாட்ஸ்அப் இன் சேவை விதிமுறைகளை மீறாதீர்கள். போலியான செய்திகளை பரப்ப வேண்டாம். சட்டவிரோதமான, அவதூறான, அச்சுறுத்தல் தரக்கூடும் செய்திகளை ஒருபோதும் பரப்ப வேண்டாம். இப்படி செய்யும் பட்சத்திலும் உங்கள் கணக்கு முடக்கப்படும். தகவலின் ஆதாரத்தன்மையை சரிபார்த்துவிட்டு அதை பகிரவும்.

கணக்கை மதிப்பாய்வு செய்வது அவசியம்

கணக்கை மதிப்பாய்வு செய்வது அவசியம்

தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ உங்கள் கணக்கு வாட்ஸ்அப்பில் தடை செய்யப்பட்டால் நீங்கள் மின்னஞ்சல் மூலம் வாட்ஸ்அப்பை தொடர்பு கொள்ளலாம். அதில் உங்கள் கணக்கை மதிப்பாய்வு செய்யும்படி கோரலாம்.

Best Mobiles in India

English summary
Dont Do thest 5 Things: If you do this Your Whatsapp Account will be Banned

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X