Home
News

புது போன் வாங்காதீங்க.. ஜனவரியில் சம்பவம் செய்யப் போகும் 5 போன்கள்.. வெயிட் செஞ்சா லாபம் உங்களுக்கு..

இந்த ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம். இன்னும் சில தினங்களில் 2023ம் ஆண்டை நிறைவு செய்து, புது 2024ம் ஆண்டிற்குள் அடியெடுத்து (New Year) வைக்கவிருக்கிறோம். புது ஆண்டை, புது பெஸ்ட் போனுடன் (Best Smartphone) துவங்க ஆசைப்பட்டால், இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

புத்தம் புதிய 2024ம் ஆண்டை வரவேற்கும் விதமான முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதன் பிராண்டின் கீழ் பல புதிய மொபைல் போன் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஆண்டின் துவக்க மாதமான ஜனவரியில் அறிமுகம் செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

புது போன் வாங்காதீங்க.. ஜனவரியில் சம்பவம் செய்யப் போகும் 5 போன்கள்..

உங்களுக்கு புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த பதிவை படித்துவிட்டு, கொஞ்சம் பொறுத்து லேட்டஸ்ட் மாடலை வாங்கிக்கொள்ளலாம். சரி, எந்த ஸ்மார்ட்போன் என்ன தேதியில் அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுகம் செய்யப்படும் போனில் இருக்கும் முதன்மையான சிறப்பம்சம் என்ன விபரங்களை இப்போது பார்க்கலாம் வாங்க.

இந்த ஜனவரி 2024 இல் மொத்தம் 5 போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 ஸ்மார்ட்போன் மாடல்களின் அறிமுகம் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 2024 பட்டியலில் முதலில் இடம்பெற போகும் ஸ்மார்ட்போன் சாதனமாக விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்100 சீரிஸ் போன்கள் இடம்பெற்றுள்ளன.

1. விவோ எக்ஸ்100 சீரிஸ் (Vivo X100 Series):
விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனங்கள் வரும் ஜனவரி 4ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) என இரண்டு மாடல்கள் இடம்பெறும். இந்த போன்கள் ஜியிஸ் டியூனிங் (Zeiss) செய்யப்பட்ட ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வெளிவரும்.

இவை மீடியாடெக் டைமென்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300 SoC) சிப்செட் உடன் 8T LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதனால் இதன் டிஸ்பிளே தரம் வேற லெவெலில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இது வேற ஒரு பக்க பவர்ஃபுல் போனாக வெளிவரப் போகிறது.

புது போன் வாங்காதீங்க.. ஜனவரியில் சம்பவம் செய்யப் போகும் 5 போன்கள்..

2. சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 series):
இந்த சீரிஸின் கீழ் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S24, கேலக்ஸி S24 பிளஸ் மற்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா என்ற 3 மாடல்களை வரும் ஜனவரி 14ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இவை மூன்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் வெளிவரும். இதன் அல்ட்ரா மாடல் 200MP கேமராவை கொண்டிருக்கும். மற்ற மாடல்கள் 50MP கேமராவுடன் வெளிவரும்.

3. ரெட்மி நோட் 13 5ஜி செரிஸ் (Redmi Note 13 5G series):
இதுவும் ஜனவரி 4ம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67" இன்ச் AMOLED (120Hz - 240Hz ரெஃப்ரஷ் ரேட்) டிஸ்பிளேவுடன், மீடியாடெக் டைமென்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் உடன் வெளிவரும். இதில் நிறுவனம் 108MP கேமராவை அடக்கிய ட்ரிபிள் கேமரா அம்சத்தை வழங்கியுள்ளது.

4. ஒன்பிளஸ் 12 (OnePlus 12):
டிசம்பர் 5ம் தேதி இந்த சாதனம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி 23ம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. இது 12ஜிபி ரேம் + 256ஜிபி, 16ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 1 TB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும். ஒன்பிளஸ் 12 சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வெளிவரும்.

5. ஆசஸ் ராஃக் 8 போன் சீரிஸ் (Asus ROG 8 Series):
கேமிங் ஸ்மார்ட்போன் சந்தையை அதகளம் செய்ய இந்த போன் ஜனவரி 9ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த போன் 6.78" இன்ச் கொண்ட முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) அம்சத்துடன் வருகிறது. இந்த 5 போன்களும் புது வருடத்தை குதூகலம் செய்ய வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Don't Buy Any New Smartphone These 5 Mobiles Are Going To Launch In This January 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X