உங்க வருகைக்கு வெயிட்டிங்: இந்த 14 வெப்சைட்களை தப்பித் தவறி கூட ஓபன் பண்ணாதிங்க!

|

கொரோனா பேரில் ஹேக்கர்கள் எப்படி ஊடுருவுகிறார்கள். அதன்மூலம் எப்படி பயனாளர்கள் ஆபத்து வரும் என்பது குறித்து பார்க்கலாம். அதேபோல் தவறிகூட கீழே குறிப்பிட்டுள்ள 14 இணையதளங்களை ஓபன் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்

கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்

கொரோனா வைரஸ் பீதி பொது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், இதன் மூலமாகவும் தகவல்கள் திருடும் பணியில் ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம் கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரலாம்.

ஏணைய பி.டி.எப்., பைல்கள்

ஏணைய பி.டி.எப்., பைல்கள்

பொதுவாக அந்த நேரத்தில் எந்த நிகழ்வு டிரெண்டாக உள்ளதோ அதன்பேரில் ஹேக்கர்கள் சிந்தித்து செயல்பட தொடங்குவார்கள். அதன்படி தற்போது கொரோனா பேரில் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, கொரோனா தடுப்பு முறைகள், கொரோனா மருந்து என, கொரோனா வைரஸ் போன்ற பல பெயரில் ஏணைய பி.டி.எப்., பைல்களை இணையதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும்

தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும்

இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்தவுடன் சமயத்தில் ஏதாவது விஷயங்களோ, அல்லது ஒன்றும் இல்லாமல் கூட போகலாம். ஆனால் இதுபோன்ற பிடிஎப் பைல்கள் மால்வேர்களை கொண்டது. இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்ததும் மால்வேர்கள் ஊடுருவி தங்களது தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும். எனவே இணையத்தில் தகவலை தேடும் போதும், படிக்கும் போது கவனத்தோடு செயல்படவும்.

ஓபன் செய்யக்கூடாத இணையதளங்கள்

ஓபன் செய்யக்கூடாத இணையதளங்கள்

கொரோனா பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆபத்தான இணையதளங்கள் என தெரிவிக்கப்படும் பட்டியல் குறித்து பார்க்கலாம்.


1. coronavirusstatus.space

2. coronavirus-map.com

3. blogcoronacl.canalcero.digital

4. coronavirus.zone

5. coronavirus-realtime.com

6. coronavirus.app

7. bgvfr.coronavirusaware.xyz

8. coronavirusaware.xyz

9. coronavirus.healthcare

10. survivecoronavirus.org

11. vaccine-coronavirus.com

12. coronavirus.cc

13. bestcoronavirusprotect.tk

14. coronavirusupdate.tk

கொரோனா அதிகாரப்பூர்வ தகவல்

கொரோனா அதிகாரப்பூர்வ தகவல்

இந்தியாவில் கொரோனா தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள +91-11-23978046 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்தியாவில் மின்னஞ்சல் மூலம் கொரோனா தொடர்பான விபரங்களைப் பெற [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Donot open these 14 corona websites as the name of corona virus

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X