விந்தணுவிற்கு ஐபோன் 6எஸ் இலவசம்..!!

Written By:

புதிய ஐபோன் 6எஸ் கருவியை சிறுநீரகத்தை விற்பனை செய்ய வேண்டாம், விந்தணுவை தானம் செய்தாலே போதும் என்கின்றது சீனை சார்ந்த விந்தணு வங்கி.

ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு..!!

விந்தணுவிற்கு ஐபோன் 6எஸ் இலவசம்..!!

சீனாவில் இயங்கி வரும் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் விந்தணு வங்கி ஒன்று தகுதி வாய்ந்தவர்கள் தங்களது விந்தணுவை தானம் செய்து ரோஸ் கோல்டு நிற ஐபோன் 6எஸ் கருவிகளை பெற்று கொள்ள முடியும் என ஷாங்காய்இஸ்ட்.காம் எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுள் இருக்கிறார் : 'அடித்துக்கூறும்' 10 அறிவியல் ஆதாரங்கள்..!

இதன் படி விந்தணு தானம் செய்ய சீனாவின் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும், உடலில் மரபணு நோய் ஏதும் இருக்க கூடாது, கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பதோடு குறைந்தபட்சம் 165 செ.மீ உயரம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் உயிரை கொல்லும் : ஆய்வில் தகவல்..!!

விந்தணுவிற்கு ஐபோன் 6எஸ் இலவசம்..!!

தகுதியானவர்கள் ரூஜின் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் தகுதியானவர்கள் சுமார் 17 மில்லி விந்தணுவிற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.62021.28 பெற்று கொள்ள முடியும். ஒரு முறை விந்தணு கொடுத்தால் அடுத்த முறை தானம் வழங்க குறைந்த பட்சம் 48 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more about:
English summary
Donate sperm to get rose gold iPhone 6S. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot