சீனா இராணுவத்திற்கு இரகசியமாக உதவும் கூகுள் : டொனால்ட் டிரம்ப் காட்டம்.!

டிரம்ப் மட்டுமின்றி அவருடைய முதன்மை அதிகாரிகளில் ஒருவரான அமெரிக்க மேஜர் ஜெனரல் ஜோன்சன் டன்போர்ட் அவர்களும் குற்றஞ்சாட்டியுள்ளார்

|

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே பெரிய நிறுவனங்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனத்திடம் மோதிய டிரம்ப் தற்போது கூகுள் சீனாவுக்கு அதன் இராணுவத்திற்கும் உதவி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீனா  இராணுவத்திற்கு இரகசியமாக உதவும் கூகுள்.!

மார்ச் 17ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியபோது, 'கூகுள் அமெரிக்காவுக்கு உதவாமல், சீனாவுக்கும் அதன் ராணுவத்திற்கும் உதவி செய்து வருகிறது. மேலும் ஒரு நல்ல செய்தி என்னவெனில் எனக்கு உதவாமல், ஹிலாரி கிளிண்டனுக்கு அந்நிறுவனம் உதவி செய்து வருவதுதான். இதில் இருந்து எப்படி வெளியே வருவது? என்று பதிவு செய்துள்ளார்.

டிரம்ப்

டிரம்ப்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு கூகுள் உதவி செய்தது போல் அவருடைய டுவீட் அர்த்தம் கொள்கிறது. டிரம்ப் மட்டுமின்றி அவருடைய முதன்மை அதிகாரிகளில் ஒருவரான அமெரிக்க மேஜர் ஜெனரல் ஜோன்சன் டன்போர்ட் அவர்களும், "சீனாவுக்கும் சீன ராணுவத்திற்கும் கூகுள் மறைமுகமாக பயன் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இதுகுறித்து கூகுள் நிறுவனம் உடனடியாக ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டு தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தது. "நாங்கள் சீன இராணுவத்துடன் வேலை செய்யவில்லை. நாங்கள் அமெரிக்க அரசு ஒத்துழைத்து பணிபுரிந்து வருகிறோம். குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. அதேபோல் சைபர் பிரிவு, ஆட்சேர்ப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு ஆகியவற்றுடன் நாங்கள் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்' என கூறியுள்ளது.

சீனா

சீனா

சீனாவின் ஊடுருவலுக்காக கூகுள் சில நேரங்களில் ஸ்கேனரின் கீழ் உதவி செய்வதாக கூறுவதுண்டு. குறிப்பாக, சீனாவின் தேடுபொறியை மேம்படுத்துவதில் கூகிள் ஒரு வழிகாட்டியாக உள்ளதாகவும், இது நாட்டின் வழிகாட்டுதலின் படி தணிக்கை செய்யப்படும் என்றும் கூறப்படுகிஅது. மேலும் டிசம்பர் மாதத்தில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சீனாவில் கூகுள் நிறுவனத்தை எதிர்காலத்தில் தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது

வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது

அமெரிக்காவும் சீனாவும் கடந்த சில மாதங்களாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இருநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனத்தின் ஹவாய் பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஆப்பிள் பொருட்களை சீனா விற்பதற்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Donald Trump says Google is not helping US but China and its military : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X