யாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15-ம் தேதி கடைசி: டிரம்ப் அதிரடி.!

|

டிக்டாக் செயலியை அதிகளவு மக்கள் பயன்படுத்தி வந்தனர், ஆனால் இந்தியா உட்பட சில நாடுகள் இந்த செயலிக்கு தடை விதித்துள்ளது, மேலும் இப்போது வந்த தகவல் என்னவென்றால், டிக்டாக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்ப 15-ம் தேதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அவர்கள் கெடு விதித்துள்ளார்.

தென்சீன கடல் விவகாரம்,

குறிப்பாக தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கி அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது என்றுதான் கூறவேண்டும். பின்பு இந்த வைரஸ் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.

அதிகரிக்கும் வகையில்

பின்பு மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சி செய்வதாக சீன மீது அமெரிக்கா அதிக குற்றச்சாட்டுகளை சுமத்தியது. பின்பு அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருக்கும் சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது.

பட்ஜெட் விலை., 5 ஜி ஆதரவு உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்: அறிமுகமானது ரியல்மி வி5!பட்ஜெட் விலை., 5 ஜி ஆதரவு உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்: அறிமுகமானது ரியல்மி வி5!

மேற்கொண்ட நடவடிக்கை

மேலும் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் அமெரிக்காவில் 80மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள டிக்டாக் செயிலிக்கு தடை விதிக்கப்பட்டால் டிக்டாக்கின் தாய்நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனம் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை

இதனால் டிரம்ப் தடை விதிக்கும் முன்பே டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட்டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளார்.

தொடர்புகொண்டு பேசினேன்,

இதுகுறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியது என்னவென்றால், டிக்டாக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன், இந்த டிக்டாக் செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று.

ல்லை என்று கூறியுள்ளார்.

எனவே டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

30சதவிகித பங்குகளை

இந்த செயலியின் 30சதவிகித பங்குகளை வாங்குவதை விட அந்நிறுவனத்தின் 100சதவிகித பங்குகளையும் வாங்குவது சுலபமான ஒன்றுதான். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Donald Trump says TikTok will be ‘out of business’ in US unless sold by September 15 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X