நாங்கலாம் அப்பவே அப்படி: சொந்தமாக "ட்ரூத் சோஷியல்" என்ற தளத்தை உருவாக்கிய டிரம்ப்- டுவிட்டருக்கு நேரடி போட்டி

|

டிரம்பின் புதிய சமூகவலைதளம் "ட்ரூத் சோஷியல்" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முன்பதிவுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டொனால்ட் டிரம்பின் நிறுவனம் டிஎம்டிஜி ஒரு புதிய சமூகவலைதள பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ட்ரூத் சோஷியல் அதாவது உண்மையான சமூகம் என அழைக்கப்படுகிறது. இந்த வலைதளம் பேஸ்புக் மற்றும் டுவிட்டருக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. ட்ரூத் சோஷியல் அடுத்த ஆண்டு அமெரிக்க அளவிலான பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

ட்ரூத் சோஷியல் என்ற தளம்

ட்ரூத் சோஷியல் என்ற தளம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிர்ம்பின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்கு அந்த நிறுவனங்களால் நீக்கப்பட்டது. இதன் காரணமாக ட்ரூத் சோஷியல் என்ற தளத்தை உருவாக்கி இருக்கிறார். இது பெரிய தொழில்நுட்ப தளங்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. டிரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழுவின் (டிஎம்டிஜி) முதல் திட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. தலிபான்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் செயல்முறையில் இருக்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இதுவரை உங்களுக்கு பிடித்தமான அமெரிக்க ஜனாதிபதி அமைதி காத்துக் கொண்டிருக்கிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இவரது கருத்து டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை குறிவைத்து உள்ளது.

ட்ரம்பின் புதிய சமூக வலைதளம்

ட்ரம்பின் புதிய சமூக வலைதளம்

ட்ரம்பின் புதிய சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முன்பதிவு செய்ய கிடைக்கும் என கூறப்படுகிறது. பீட்டா பதிப்பு நவம்பர் முதல் அழைப்பாளர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு தழுவிய வெளியீடு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனிடன் தோல்வி அடைந்தார்.

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப்

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப்

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து டிரம்ப் வெளியேற்றப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. டிரம்பின் புதிய தகவல் தொடர்பு தளம் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் முதலில் செய்தி வெளியிட்டது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அதிபர் டிரம்பின் ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு போன்ற பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் டிரம்ப் சமூகவலைதளங்களில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக கூறி பல பதிவுகள் பதிவிட்டார்.

சர்ச்சை பதிவு

சர்ச்சை பதிவு

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக தனது டுவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நேரத்தில் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் பதிவு பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

வன்முறையான பதிவு என குறிப்பிட்ட டுவிட்டர்

வன்முறையான பதிவு என குறிப்பிட்ட டுவிட்டர்

டிரம்ப் பதிவிட்ட பதிவானது., போராட்டம் என்ற பெயரில் கருப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு வன்முறையானது என டுவிட்டர் பக்கம் அமெரிக்க அதிபர் டுவிட்டை நீக்கியது. இருப்பினும் பேஸ்புக் இந்த பதிவை நீக்காமல் இருந்தது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மீது கடும் விமர்சனங்களை குவித்தது. பேஸ்புக் எதற்காக பதிவை நீக்கவில்லை என மார்க் சக்கர்பெர்க் பதிலளித்தார்., அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் பதிவு அரசு அறிவிப்பாகவே உள்ளது எனவும் இந்த பதிவு பேஸ்புக் சட்டத்திட்டங்களுக்கு புறம்பானதாக இருக்கிறது என தான் கருதவில்லை எனவும் மார்க் தெரிவித்திருந்தார்.

பேஸ்புக் ஊழியர்களை திருப்தி படுத்தவில்லை

பேஸ்புக் ஊழியர்களை திருப்தி படுத்தவில்லை

மார்க் இந்த கருத்து பேஸ்புக் ஊழியர்களை திருப்தி படுத்தவில்லை. இதையடுத்து டிரம்ப்-ன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் மார்க் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் தங்கள் முடிவை வெளிகாட்டும் விதமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முழுமையாக முடிக்கிய சமூகவலைதள நிறுவனங்கள்

முழுமையாக முடிக்கிய சமூகவலைதள நிறுவனங்கள்

டிரம்ப் பதிவிட்ட பதிவுகள் வன்முறையை தூண்டும்விதமாக இருக்கிறது என அவரது டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் தளங்களை சமூகவலைதள நிறுவனங்கள் முழுமையாக முடிக்கின. இதையடுத்து அப்போதே டிரம்ப் தனக்கென சொந்தமாக சமூகவலைதளத்தை தொடங்குவார் என்ற அறிவிப்பு வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் தனக்கென தளத்தை தொடங்கியுள்ளார்.

Socila Media

Most Read Articles
Best Mobiles in India

English summary
Donald Trump has created his own social networking site, "Truth Social"

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X