இந்தியாவை பின்பற்றும் அமெரிக்கா: டிக்டாக்குக்கு குட்பை- அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
கடந்து சில தினங்களுக்கு முன்பு சீன செயலியான டிக்டாக்குக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அமெரிக்காவிலும் தடை விதிக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிடத் தொடங்கினார். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

59 சீன செயலிகளுக்கு தடை
இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது, மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் இதில் இடம்பெற்றது.

46 மில்லியன் பயனாளர்கள்
அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்கள் இந்தியாவில் மட்டுமின்றி இந்த செயலி அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டிக் டாக் உட்பட சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சீன ஆப்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சமீபத்தில் தெரிவித்தார்.

மைக் பாம்பியோ அளித்த பேட்டி
இது தொடர்பாக மைக் பாம்பியோ அளித்த பேட்டியில், டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கான தடை குறித்து திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து நிச்சயம் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறினார். அதோடு டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளால் பயனர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பயனர்களின் தகவலை பயன்படுத்தி உளவு வேலை பார்ப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை
இந்நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து பிளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அவர், டிக்டாக்தடை தொடர்பான ஆணையில் நாளை கையெழுத்திட போவதாக தெரிவித்தார்.

வதந்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை
இதற்கிடையே , டிக் டாக் செயலியை வாங்குவதற்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.இருப்பினும் டிக்டாக் செயலி குறித்து வெளியாகும் செய்திகள், வதந்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என டிக்டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அமெரிக்கா இடையே தொடர்ந்து முரண்பாடுகள்
கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீன தான் என அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு, இரு நாடுகளும் இடையே வர்த்தக போர், ஹாங்காங்கில் சீன எடுக்கும் நடவடிக்கைகள் என பல்வேறு பிரச்சனைகள் சீனா அமெரிக்கா இடையே தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications