Home
News

கிழியும் சீனாவின் முகமூடி; ஹூவாய் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை.!

அது ஏன்.? மற்றும் எதனால்.? என்கிற விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.

By Muthuraj

நீங்களொரு ஹூவாய் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்களா.? ஆம் என்றால் அமெரிக்காவின் எப்பிஐ (பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்), சிஐஏ (மத்திய புலனாய்வு முகமை) மற்றும் என்எஸ்ஏ (தேசிய பாதுகாப்பு முகமை) ஆகிய மூன்று பாதுகாப்பு நிறுவனங்களின் தலைவர்கள் கூறுவதை சற்று கருத்தில் கொண்டே ஆக வேண்டும்.

கிழியும் சீனாவின் முகமூடி; ஹூவாய் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம்.!

அவர்கள் நாட்டின் குடிமக்களை ஹூவாய் மற்றும் இசெட்டிஇ (ZTE) நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளாராம். அது ஏன்.? மற்றும் எதனால்.? என்கிற விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.

ஹுவாய் மற்றும் இசெட்டிஇ ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபத்து

ஹுவாய் மற்றும் இசெட்டிஇ ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபத்து

கடந்த புதனன்று எப்பிஐ இயக்குநரான கிறிஸ் வ்ரே, "சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஹுவாய் மற்றும் இசெட்டிஇ ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபத்து காரணிகளைப் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக செனட் புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஆழமாக கவலைகொள்கிறோம்

ஆழமாக கவலைகொள்கிறோம்

கிறிஸ் வ்ரே, "ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு அல்லது அரசாங்கங்களுக்கு நமது தொலைத்தொடர்பு நெட்வொர்க்களின் மீது அதிகாரத்தை அனுமதிப்பதன்கீழ் உள்ள அபாயங்கள் மீது நாங்கள் ஆழமாக கவலைகொள்கிறோம் மற்றும் கவனித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

திறமையற்ற உளவு நடவடிக்கை

திறமையற்ற உளவு நடவடிக்கை

"நமது தொலைதொடர்பு உள்கட்டமைப்பில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என்பது, தீங்குதரும் மாற்றங்களை அல்லது தகவலைத் திருடுவதற்கான திறனை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது மற்றும் திறமையற்ற உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனையும் வழங்குகிறது" கிறிஸ் வ்ரே என்றும் கூறியுள்ளார்.

ஊக்குவிக்க கூடாது

ஊக்குவிக்க கூடாது

இதுபோன்ற காரணங்களால், ஹூவாய் மற்றும் இசெட்டிஇ போன்றே சீன தயாரிப்புகளை பயன்படுத்த அமெரிக்க குடிமக்கள் ஊக்குவிக்க கூடாது என்கிற கருத்தோடு சிஐஏ மற்றும் பாதுகாப்பு புலனாய்வு முகமை அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கொண்ட எதிராக குழு உடன்பட்டுள்ளது.

எந்த நிறுவனத்தையும் விட அபாயகரமானது

எந்த நிறுவனத்தையும் விட அபாயகரமானது

மறுகையில், ஹூவாய் நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்களது தயாரிப்பை உலகெங்கிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் நம்பியிருப்பதாகக் கூறியுள்ளது. உடன் "ஹூவாய் நிறுவனமானது வேறு எந்த நிறுவனத்தையும் விட அபாயகரமானது" என்ற அமெரிக்காவின் கருத்திற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

அரசாங்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது

அரசாங்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது

ஹூவாய் நிறுவனத்தின் நாட்டின் வெளியுறவுத்துறை துணைத் தலைவரான வில்லியன் பிளும்மர் "உலகெங்கிலும் உள்ள மூன்றில் ஒருபங்கு மக்களை இணைக்கும் ஹூவாய் நிறுவனத்தை, 170 நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சிஐஏ : திருட்டு பயலுகளுக்கு ஏற்ற 'திருடன்' தான்..!

அமெரிக்காவின் சிஐஏ : திருட்டு பயலுகளுக்கு ஏற்ற 'திருடன்' தான்..!

சிஐஏ எனப்படும் சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் ஏஜென்சி (Central Intelligence Agency - CIA) என்பது அமெரிக்காவின் முக்கியமான உளவு நிறுவனம் ஆகும். அந்நிறுவனத்தின் கீழ் உளவு வேலை பார்த்த, சிஐஏ வரலாறு முழுக்க பயன்படுத்திய சுமார் 20000 உளவு கருவிகளில் 600 கருவிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவைகளில் மிகவும் தெளிவான சில உளவு கருவிகளை பார்க்கும் போது சிஐஏ உளவு நிறுவனம் ஆனது 'திருடனுக்கு ஏற்ற சரியான திருடன் தான்' என்பது உறுதியாகிறது..!

ஸ்பை #1 : ஸ்மோக் பைப் உள்ளே ரேடியோ :

ஸ்பை #1 : ஸ்மோக் பைப் உள்ளே ரேடியோ :

1960-களில் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஸ்மோக் பைப்களுக்குள் ரேடியோ ரிசீவர் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.

ஸ்பை #2 : சிகெரெட் பாக்கெட்டுக்குள் பொருந்தும் கேமிரா :

ஸ்பை #2 : சிகெரெட் பாக்கெட்டுக்குள் பொருந்தும் கேமிரா :

வெறும் 35 எம்எம் பிலிம் கொண்ட இந்த கேமிரா பார்லியாமென்ட்ஸ் சிகெரெட் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. 1960 களில் இது தான் மிகவும் சிறிய கேமிரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பை #3 : கேரியர் புறா :

ஸ்பை #3 : கேரியர் புறா :

இரண்டாம் உலகப்போரின் போது புறாக்களின் உடலில் லைட் வெயிட் கேமிராக்கள் பொருத்தப்பட்டு பறக்க விடப்பட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. விமானங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டிலும் புறாக்கள் எடுத்தவைகள் மிகவும் தெளிவானதாக இருந்ததாம்.

ஸ்பை #4 : இன்செக்ட்டோதொப்பர் :

ஸ்பை #4 : இன்செக்ட்டோதொப்பர் :

மினி என்ஜின் மூலம் சுமார் 60 நொடிகள், 750 அடி தூரம் வரை பறக்க கூடிய இந்த இன்செக்ட்டோதொப்பர், ஒரு மைக்ரோபோன் உள்ளடக்கிய போலியான தட்டாரப்பூச்சி (Dragon Fly) ஆகும்.

ஸ்பை #5 : டெட் ட்ராப் ஸ்பைக் :

ஸ்பை #5 : டெட் ட்ராப் ஸ்பைக் :

இன்றும் உளவாளிகள் தொடர்பு கொள்வது சிக்கலான ஒன்று தான். 1960-களில் குறிப்பிட்ட இடத்தில் வேறொரு உலவாளிக்காக வீசப்படும் இவ்வகை டெட் ட்ராப்-க்குள் தகவல்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்குமாம்.

ஸ்பை #6 : அழையாது நுழைபவரை கண்டறியும் சாதனம் :

ஸ்பை #6 : அழையாது நுழைபவரை கண்டறியும் சாதனம் :

மண் தரையோடு மறைந்து கிடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கண்டறியும் சாதனம் ஆனது 1000 அடிகளுக்கு அப்பால் வரு எதிரியை கூட சுட்டிக்காட்டும் என்பதும் இவ்வகை உளவு கருவியானது பனிப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பை #7 : குறியீட்டு காம்ப்பேக்டர் :

ஸ்பை #7 : குறியீட்டு காம்ப்பேக்டர் :

முகம் பார்க்கும் சிறிய கண்ணாடியான இதை மிகவும் துல்லியமான கோணத்தில் வைத்து காணும் போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குறியீடு வெளியாகும்..!

ஸ்பை #8 : லென்சாட்டிக் காம்பஸ் :

ஸ்பை #8 : லென்சாட்டிக் காம்பஸ் :

வழக்கமான காம்பஸ் போல் இல்லாது, இதன் பின் புறத்தில் மேக்னிபையிங் லென்ஸ்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளன ஆகையால் மிகவும் துல்லியமான முறையில் இது இயங்கும். 1950-களில் இருந்து அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்பை #9 : சார்லீ - ரோபோட் மீன் :

ஸ்பை #9 : சார்லீ - ரோபோட் மீன் :

1960-களில் உருவாக்கப்பட்ட ரோபோட் மீன் சார்லீ, எதிரி கப்பல்களில் இருந்து வரும் அண்டர் வாட்டர் சிக்னல்களை உளவு பார்த்தது.

ஸ்பை #10 : கையடக்க ட்ரில்லர் :

ஸ்பை #10 : கையடக்க ட்ரில்லர் :

சுவர்களில் எளிமையாக துளையிட்டு அதில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை திணிக்க உதவிய கருவிதான் இந்த ஹாண்ட் க்ரான்க் ட்ரில்லர்..!

ஸ்பை #11 : வெற்று 'வெள்ளி டாலர்' :

ஸ்பை #11 : வெற்று 'வெள்ளி டாலர்' :

பார்க்க சாதாரண வெள்ளி நாணயம் போல் தெரியும், இதற்குள் வெற்று இடம் இருக்கும் அதனுள் தகவல்களை சேமித்து உளவு பார்க்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Don’t Use Huawei Smartphones, Say Heads Of FBI, CIA, and NSA. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X