பழைய Mobile போனை தூக்கி போடாதீங்க! பைசா செலவின்றி CCTV கேமராவா மாற்றலாம்! எப்படி தெரியுமா?
உங்கள் வீட்டில் இருக்கும் பீரோ லாக்கர், அலமாரி, டேபிள் டிராயரில் தூசிபடிந்து கிடக்கும் பழைய மொபைல் போன்களை உடனே தூசி தட்டி எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பழைய போன்களை இப்போது நாம் பைசா செலவின்றி CCTV கேமராவாக மாற்றப்போகிறோம். அது எப்படி?
எது பழைய ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போனை சிசிடிவி கேமராவாக மாற்றப்போகிறோமா? உண்மையாவா? என்று சிலர் சந்தேகத்துடன் கேட்கலாம். உங்களிடம் கேமரா வசதியுடன் ஆண்ட்ராய்டு அல்லது iOS தளத்தில் இயங்கும் எந்தவொரு பழைய சாதனம் ஆவது உங்களிடம் இருந்தால், இது சாத்தியமே. இதில் சிறப்பு என்னவென்றால், இதற்காக நீங்கள் பணம் செலவிட வேண்டியதில்லை.

பைசா செலவின்றி வீட்டிற்கு CCTV கேமரா செட்டப் செய்யலாமா? எப்படி?
பொதுவாக, ஒரு வீட்டிற்கு CCTV கேமரா அமைப்பை நிறுவ வேண்டும் என்றால், குறைந்தது ரூ.3000 முதல் ரூ.25,000 வரை செலவாகும். ஆனால், இத்தகைய செலவை எல்லோராலும் செய்ய முடியாது. ஆனால், இந்த செலவை யோசித்து வீட்டின் பாதுகாப்பையும் நாம் அலட்சியப்படுத்த முடியாது. இத்தகைய சூழ்நிலையைக் கையாள ஏதுவான வழி தான் உங்கள் பழைய மொபைல் சாதனத்தை CCTV ஆக மாற்றம் சூப்பர் டிப்ஸ்.
உங்கள் பழைய மொபைல் சாதனத்தை எப்படி பைசா செலவின்றி மிக எளிமையாக சிசிடிவி கேமராவாக மாற்றப் போகிறோம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதைச் செய்வதற்கு உங்களுக்கு மிஞ்சிப்போனால், வெறும் 5 நிமிடங்கள் கூட ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது. Google Play Store மற்றும் Apple Apps Store இல் கிடைக்கும் சில இலவச ஆப்ஸ் உதவியுடன், யாருடைய உதவியும் இல்லாமல் இதை நீங்கள் செய்து முடிக்கலாம்.

பழைய ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போனை எப்படி சிசிடிவி கேமராவாக பயன்படுத்துவது?
சரி, வாருங்கள் இப்போது நாம் என்ன செய்து, உங்கள் பழைய மொபைல் சாதனத்தை புதிய CCTV கேமராவகை மாற்றலாம் என்று பார்க்கலாம்.
- முதலில் உங்களிடம் இருக்கும் பழைய மொபைல் சாதனம் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்று கவனிக்கவும்.
- அது ஆண்ட்ராய்டு சாதனமா? அல்ல ஐபோன் சாதனமா? என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
- Android சாதனம் என்றால், Google Play Store சென்று IP Webcam ஆப்ஸை டவுன்லோட் செய்யுங்கள்.
- iPhone பயனர்கள் ஆப்ஸ் ஸ்டோர் சென்று இந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- இந்த ஆப்ஸை உங்கள் பழைய போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
- பின் ஆப்ஸ் திறந்து, கீழே உள்ள ஸ்டார்ட் சர்வர் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- பிறகு, ஆப்ஸ் கேட்கும் சில அனுமதிகளை நீங்கள் OK செய்து அனுமதி வழங்க வேண்டும்.
- இப்போது உங்கள் பழைய போனின் கேமரா இயங்கப்படும்.

IP அட்ரஸ் விபரங்களை சரியாக நோட் செய்து கொள்ளுங்கள்.!
- உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன் அடிப்பகுதியில் ஒரு ஐபி முகவரி தோன்றும்.
- அந்த IP முகவரியை நோட் செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் பிரவுசர் லிங்க் முகவரியில் IP அட்ரஸை டைப் செய்ய வேண்டும்.
- இறுதியாக IP Webcam வெப்சைட்டில் உங்கள் கேமரா திறந்துவிடும்.
இதன் மூலம் உங்கள் பழைய மொபைல் கேமரா மூலம் உங்கள் வீட்டை நீங்கள் கண்காணிக்க முடியும். உங்கள் பழைய போனை சிசிடிவி கேமராவாக பயன்படுத்த, அதில் கேமரா கோளாறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. போனை அடிக்கடி சார்ஜ் செய்து வைப்பது போன்ற வேலைகளை தவறாமல் செய்வதும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பழைய போன்களை அடிமட்ட விலைக்கு விருப்பம் இல்லாமல் விற்பனை செய்வதை விட, அவற்றை இப்படிப் பாதுகாப்பு சாதனமாக மாற்றிய பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது தானே.! இந்த ஐடியா பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை, கீழே கமெண்டில் பதிவிடுங்கள் மக்களே.!


Click it and Unblock the Notifications








