Home
News

மெசஞ்சர் ஆப் யூஸ் பண்றிங்களா? எந்தச் சூழ்நிலையிலும் இதை செய்யாதிங்க- மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் அதிகப் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் பிரதான ஒன்று பேஸ்புக். பேஸ்புக் மூலம் மெசேஜ் செய்யப்படும் பயன்பாட்டு செயலியாக மெசஞ்சர் இருக்கிறது. மெசஞ்சர் செயலியை பேஸ்புக் நண்பர்களுடன் தகவல்களை பரிமாறுவதற்கு ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மெசஞ்சர் செயலி மூலம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் போது அதை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டாம் என பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மெசஞ்சர் செயலி

மெசஞ்சர் செயலி

பல்வேறு காரணங்களுக்கு மெசஞ்சர் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்களது தகவல்களை பரிமாறுவதற்கு தங்களுக்கு நட்பானவர்களிடம் உரையாடுவதற்கு என மெசஞ்சர் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெசஞ்சர் செயலி தங்கள் பயனர்களின் தேவையை அறிந்து பல்வேறு அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. மெசஞ்சர் செயலியில் பல்வேறு காரணங்களுக்காக அதை பயன்படுத்தும் போது ஸ்க்ரீன் ஷாட்களாக பலரும் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒரு சில தகவலை ஆப்-ல் சென்று தேட முடியாத என்ற காரணத்தால் அதை ஸ்க்ரீன்ஷாட்களா எடுத்து கேலரியில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். உண்மைக்கு மாறான தகவல்களையோ, தொடர்ந்து தொந்தரவு செய்யும் வகையில் மெசேஜ்கள் பெறும் பட்சத்தில் அதை ஸ்க்ரீன்ஷாட்களாக எடுத்து பிற சமூகவெளியில் பகிர்ந்துவிடுவார்கள்.

புதிய அம்சம் அறிமுகம்

புதிய அம்சம் அறிமுகம்

ஒருசிலர் நட்பாக பேசி குறிப்பிட்ட விஷயங்கள் பேசும் போது அதை ஸ்க்ரீன் ஷாட்களாக எடுத்து அந்த நபரை மிரட்டுவதற்கு பயன்படுத்துவார்கள். யாரும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டாம் என பேஸ்புக் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இந்த நிலையில் இதை தடுக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட் ஆனது பேஸ்புக் சமீபித்திய புதுப்பிப்பில் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இனி ஒருவருக்கு மெசேஜ் செய்யவும் மறுபுறத்தில் இருக்கும் நபர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் அது உங்களுக்கு நோட்டிபிகேஷனாக காண்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அம்சம் செயல்படும் வழிமுறை

இந்த அம்சம் செயல்படும் வழிமுறை குறித்த விவரத்தை மார்க் ஜூக்கர்பெர்க் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது நீண்டகால பார்ட்னரான பிரிசில்லா ஜானுக்கு மெசேஜ்கள் மூலம் பேசியுள்ளார். அப்போது ஸ்க்ரீன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உடனடியாக நோட்டிபிகேஷனாக மார்க்கிற்கு வந்துவிடுகிறது. இதுகுறித்த உதாரண புகைப்படத்தை அவர் பகிரந்துள்ளார். முன்னதாக பேஸ்புக் நிறுவனம் மறைந்துபோகும் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சமானது பலராலும் பெரிதளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் மெசேஜ்கள் மறைந்து போகும் என்பதால் பலரும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும்பட்சத்திலும் இதுகுறித்த நோட்டிபிகேஷன் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெசஞ்சர் பயனர்களே, ஸ்க்ரீன் ஷாட்கள் எடுப்பது குறித்து எச்சரிக்கை

மெசஞ்சர் பயனர்களே, ஸ்க்ரீன் ஷாட்கள் எடுப்பது குறித்து எச்சரிக்கை

மெசஞ்சர் பயனர்களே, ஸ்க்ரீன் ஷாட்கள் எடுப்பது குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இனி நீங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் பட்சத்தில் அது மறுபுறம் இருக்கும் நபருக்கு எச்சரிக்கப்படும். மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த வழிமுறைகளையும் பகிர்ந்துள்ளார். எண்ட் டு எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசஞ்சர் சேட்டிங்கில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்றும் இதுகுறித்த விவரங்களை பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தயாரிப்புகளுக்கும் இந்த செயல்முறையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் அம்சம்

கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் அம்சம்

முன்னதாக பேஸ்புக் பயனர்களுக்கு கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் டெஸ்க்டாப் வெர்ஷனை ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தை வெளியிட்டது. இதையடுத்து மேக் ஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை மெசஞ்சர் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக இனி இலவச க்ரூப் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என மெசஞ்சர் பிரிவு துணை தலைவர் ஸ்டான் சன்னோவ்ஸ்கி தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Don't Take ScreenShots in Facebook Messenger While Chatting: Mark Zuckerberg Warns
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X