பட்ஜெட் போன்னா இப்படி தான் இருக்கனும்! iQOO Z7 5G-வின் அறிமுக சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க!
புது போன் வாங்குறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இன்னம் இரு நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க, நாளைக்கு பட்ஜெட் விலையில ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் விற்பனை வருகிறது. புதிய iQOO Z7 5G சாதனம் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
iQOO இந்தியாவில் Z7 5G இன் முதல் விற்பனை மார்ச் 21 அன்று (நாளை) நடக்கவுள்ளது. விற்பனைக்கு முன்னதாக, நிறுவனம் iQOO Z7 5G இன் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலை மற்றும் சலுகை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. iQOO இன் புதிய Z-சீரிஸ் ஸ்மார்ட்போனில் 64MP OIS கேமரா, 44W பிளாஷ் சார்ஜ் போன்ற மிரட்டலான அம்சங்கள் இடம்பெறுகிறது. இத்துடன் இன்னும் பல சிறப்பை இந்த சாதனம் கொண்டுள்ளது.

iQOO Z7 5G சாதனம் ஆனது இரண்டு வகைகளில் நாளை விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் உடன் ஒரு மாடலாகவும் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் உடன் மற்றொரு மாடலாகவும் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களின் விலை முறையே ரூ.18,999 மற்றும் ரூ.19,999 என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரத்யேக வங்கிச் சலுகைகளுடன், 6ஜிபி + 128ஜிபி மாடல் ரூ.17,499 வரை குறைகிறது. அதேபோல், 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.18,499 வரை குறைகிறது. SBI மற்றும் HDFC வங்கி கார்டு பயனர்களுக்கு இந்த விலையில் சாதனத்தைப் பெற ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் மற்றும் iQOO இ-ஸ்டோர் வழியாக நார்வே ப்ளூ மற்றும் பசிபிக் நைட் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும்.
இந்த போன் மார்ச் 21 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் மற்றும் அதே நாளில் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு விற்பனைக்கு வரும். iQOO Z7 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், புதிய iQOO Z7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.38' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், 360Hz டச் சாம்பிளிங் வீதம் மற்றும் 1300 nits பீக் பிரைட்னஸ் உடன் வழங்குகிறது. இந்த iQOO Z7 5G சாதனம் MediaTek Dimensity 920 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 உடன் Funtouch OS 13 இயங்குதளத்தில் இது இயக்கும். இது 2 வருட OS அப்டேட்களையும் மூன்று வருட மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும்.
கேமரா பற்றி பேசுகையில், இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடன் 64-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்டது. மீதமுள்ள சென்சார்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் அதே வேளையில் பேட்டரி திறன் இன்னும் வெளிவரவில்லை. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வரும் மற்றும் WiFi 6 இணைப்பையும் வழங்கும்.
பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர், நாளை நடக்கும் அறிமுக விற்பனையை தவறவிடாதீர்கள். பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் இந்த சாதனம் வருவதனால் இது வாங்க சிறந்ததே.


Click it and Unblock the Notifications








