வாழ்க்கை ஓஹோனு இருக்க ஒரு அரிய வாய்ப்பு.. 2023 இல் இதை செய்யாமல் இருந்தாலே போதும்!

|

2022 இல் 75,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிக்பாஸ்கெட் என்பதை Password ஆக வைத்துள்ளனர். அதேபோல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பொதுவான 10 கடவுச்சொற்கள் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

பொதுவான பாஸ்வேர்ட்கள் பட்டியல்

பொதுவான பாஸ்வேர்ட்கள் பட்டியல்

NordPass ஆனது 2022 ஆம் ஆண்டில் மிகவும் பொதுவான கடவுச்சொற்களின் பட்டியலை பகிர்ந்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் பேர் தங்களது பாஸ்வேர்ட் ஆக "password" என்றே வைத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் ஏராளமானோர் பலவீனமான பாஸ்வேர்ட்களை தான் பயன்படுத்துகின்றனர் என்பது இந்த தகவலின் மூலம் தெரியவந்திருக்கிறது.

வேதனை அளிக்கும் விஷயம்

வேதனை அளிக்கும் விஷயம்

2022 இல் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டு பயன்படுத்தப்படும் பலவீனமான பாஸ்வேர்ட்கள் குறித்த தகவல் வெளியாவது வழக்கம். அதன்படி தான் இந்தாண்டும் இதுகுறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

எவ்வளவு அறிவுறுத்தினாலும் பயனர்கள் தங்களது பாஸ்வேர்ட் போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை என்பதை இந்த தகவல்கள் தெளிவாகக் காட்டுகிறது. இதுபோன்ற பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவது என்பது பெரிய விளைவுகளை சந்திக்க வைக்கும் என பல்வேறு வகைகளில் அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் பயனர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை என்பது சற்று வேதனை அளிக்கும் விஷயமாகத் தான் இருக்கிறது.

பொதுவான 10 கடவுச் சொற்கள்

பொதுவான 10 கடவுச் சொற்கள்

2022 ஆம் ஆண்டுக்கான NordPass 2022 அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் பேர் பாஸ்வேர்ட் ஆக "password" என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பொதுவான 10 கடவுச் சொற்கள் குறித்த விவரத்தை முதலில் பார்க்கலாம்.

உலகமே இப்படி தான்

உலகமே இப்படி தான்

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பொதுவான 10 கடவுச்சொற்களாக 123456, bigbasket, password, 12345678, 123456789, pass@123, 1234567890, anmol123, abcd1234 மற்றும் googledummy என்பவைகள் இருக்கிறது.

ஆயிரக்கணக்கான பயனர்கள் இதே கடவுச்சொல்லை பயன்படுத்துகின்றனர் என அறிக்கை தகவல் கூறுகிறது. இந்தியா மட்டுமின்றி சுமார் 30 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் guest, vip, 123456 மற்றும் more ஆகிய கடவுச்சொற்கள் உலகம் முழுவதும் பரவலா பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் ஆக இருக்கிறது.

ஹேக்கர்களுக்கு உதவும் பாஸ்வேர்ட்கள்

ஹேக்கர்களுக்கு உதவும் பாஸ்வேர்ட்கள்

அதேபோல் விளையாட்டு அணிகள், திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்களின் பெயர்கள் பொதுவான பாஸ்வேர்ட்களாக ஆதிக்கம் செலுத்துகிறது என அறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலானோர் பிரபலமான பெயர்களையே பொதுவான கடவுச் சொல்லாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற கடவுச்சொற்கள் என்பது ஹேக்கர்களின் வேலையை மிகவும் எளிதாக்கும்.

பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்?

பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்?

முன்பெல்லாம் பாஸ்வேர்ட் என்பது மட்டும் தான் மிகவும் பாதுகாப்பான செயல்பாடாக இருந்தது. தற்போது ஓடிபி, ஃபிங்கர் பிரிண்ட், ஃபேஸ்லாக் என பல பாதுகாப்பு அம்சங்கள் வந்துவிட்டது. எனவே பலரும் பாஸ்வேர்ட்-க்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துவிட்டனர். அனைத்துக்கும் அடிப்படை பாஸ்வேர்ட் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதுcd பாஸ்வேர்ட்-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது மிக அவசியம். பாஸ்வேர்ட்கள் கடினமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று. அதாவது "@s1Q0#+Ga@os" போன்ற கடவுச்சொல்லை பயன்படுத்தினால் மிகவும் சௌகரியமாக இருக்கும்.

வெவ்வேறு பாஸ்வேர்ட் அவசியம்

வெவ்வேறு பாஸ்வேர்ட் அவசியம்

பயனர்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு பாஸ்வேர்ட்களை பயன்படுத்த வேண்டும் என்பது அவசியம். பல கணக்குகளுக்கு வெவ்வேறு கடவுச்சொல்லை பயன்படுத்துவது என்பது கட்டாயமான ஒன்றாகும்.

வருமுன் காப்பதே சிறந்தது

வருமுன் காப்பதே சிறந்தது

பொதுவான வார்த்தைகளை பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும். பாஸ்வேர்ட்கள் யாருடைய பெயராகவும் இருக்க வேண்டாம். உங்களை தவிர வேறு யாருக்கும் பாஸ்வேர்ட்களை பகிராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது கடவுச்சொல்லை புதுப்பிப்பது என்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும் அப்படி முடியாத பட்சத்தில் அவ்வப்போதாவது பாஸ்வேர்ட்டை மாற்ற வேண்டும். பயன்படுத்திய கடவுச்சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் புதுப்புது கடவுச்சொல்லை வித்தியாசமாக தேர்ந்தெடுப்பது அவசியம். பணம் சேமிப்பது மட்டும் வாழ்க்கையை பாதுகாக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது டிஜிட்டல் யுகம் எனவே ஸ்மார்ட்போன், லேப்டாப், சமூகவலைதளம் உட்பட அனைத்தையும் பாதுகாப்பாக கையாளுவது அவசியம். டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் குறித்து எத்தனையோ செய்திகளை தினசரி படித்து வருகிறோம். எங்கோ ஒரு பகுதியில் நடக்கிறது நமக்கென்ன என்று இருக்காமல் வருமுன் காப்பதே சிறந்தது.

Best Mobiles in India

English summary
Don't Do this Again! Lakhs of Indians Using Mostly Common Passwords in 2022!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X