TV, Fridgeனு எதையும் வாங்காதீங்க: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடைத்த உண்மை! என்ன தெரியுமா?
அமேசானின் நிர்வாகத் தலைவராக உள்ள ஜெஃப் பெசோஸ், இந்த விடுமுறை காலத்தில் டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எதையும் வாங்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அமேசானின் நிறுவனரே இப்படி குறிப்பிடுவது சற்று வியப்பாக தான் இருக்கும். அதற்கான காரணத்தை பார்க்கலாம்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவுரை
அமேசான் நிறுவனரும் கோடீஸ்வரருமான ஜெஃப் பெசோஸ் நுகர்வோர் மற்றும் வணிகங்களை எச்சரித்து இருக்கிறார். குறிப்பாக விடுமுறை காலத்தில் பெரிய கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டாம் என பெசோஸ் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கார்கள் மற்றும் டிவிகளை வாங்க வேண்டாம்
CNN உடன் பெசோஸ் கூறிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
வணிக அதிபர், நுகர்வோர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், வரும் மாதங்களில் இருக்கும் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தினார்.
அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை எதிர்நோக்கி கொண்டிருப்பதால், புதிய கார்கள் மற்றும் டிவிகள் போன்ற பெரிய விலை கொண்ட பொருட்களை வாங்குவதை அமெரிக்க குடும்பங்கள் தவிர்க்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.

என்ன நடக்கப்போகிறது என்பதை பாருங்கள்
அமெரிக்கர்களின் வீட்டுக் கடன் 16.5 டிரில்லியன் டாலரை எட்டி இருக்கிறது. அமெரிக்கர்கள் கடனை நம்பி இருக்கிறார்கள். அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்கிறது. நீங்கள் ஏதேனும் அதிக விலை கொண்ட பொருளை வாங்க திட்டமிட்டிருந்தால் அதை அப்படியே நிறுத்துங்கள், பணத்தை கையில் வைத்திருங்கள். தேவைப்படும். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என பெசோஸ் குறிப்பிட்டார்.

பணத்தை கையில் வைத்திருங்கள்
மேலும் இதுகுறித்து கூறுகையில், நீங்கள் பெரிய டிஸ்ப்ளே கொண்ட டிவியை வாங்க நினைக்கும் தனிநபராக இருந்தால், அதை செய்ய வேண்டாம், நீங்கள் காத்திருந்து உங்கள் பணத்தை சேமித்து வைக்கவும். புதிய ஆட்டோமொபைல், குளிர்சாதன பெட்டி அல்லது வேறு எதை வாங்கத் திட்டமிட்டிருந்தாலும் அதற்கும் இந்த அறிவுரை பொருந்தும். இதை வாங்காமல் அந்த பணத்தை கையில் வைத்திருங்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.

பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை
"பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை" என பெசோஸ் குறிப்பிட்டுள்ளார். விஷயங்கள் குறைந்து வருகின்றன, பொருளாதாரத்தின் பல துறைகளில் பணிநீக்கங்களை நீங்கள் காண்கிறீர்கள் என அவர் கூறினார். அதே நேர்காணலில் பெசோஸ் ஒரு முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டார்.

செல்வத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க தயார்
உலகப் பணக்காரர்களில் பிரதான ஒருவராக இருக்கும் ஜெஃப் பெசோஸ், தனது $124 பில்லியன் சொத்தில் பெரும் பகுதியை காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் பிளவுகளுக்கு மத்தியில் மனிதகுலத்தை ஒருங்கிணைக்கக்கூடிய மக்களுக்கு ஆதரவளிக்க தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
பெசோஸ் தனது செல்வத்தில் எவ்வளவு கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்பதை குறிப்பிடவில்லை. இருப்பினும் தனது செல்வத்தின் பெரும் பகுதியை வழங்குவாரா என்று கேட்டதற்கு, "ஆம் நான் செய்வேன்" என பதிலளித்தார்.

அமேசான் கதை
கடந்த ஆண்டு பெசோஸ் தனது தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை செயல் அதிகாரி) பதவியில் இருந்து விலகினார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஜெஃப் பெசோஸ் தற்போது அமேசானின் நிர்வாகத் தலைவராக இருக்கிறார். அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

புத்தகம் விற்பனை மையம்
அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. 1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் இதை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார். உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்னணிகளில் ஒன்றாக இருக்கிறது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications