அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க: முகேஷ் அம்பானி வரார் வரார் வரார்.! நடுங்கி நிற்கும் நிறுவனங்கள்..

|

இந்தியாவில் இந்திய நிறுவனம் அறிமுகம் செய்யும் 5G போன் என்றால் அதற்கு தனி வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். இந்திய வாடிக்கையாளர்களை நன்கு அறிந்த ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஒரு 5ஜி போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இந்த பட்ஜெட் போன் விரைவில் அறிமுகமாக இருப்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது.

Jio Phone 5G

Jio Phone 5G

ஜியோ போன் 5ஜி ஆனது Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, விரைவில் 5ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது.

ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி

ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி

ஜியோ போன் 5ஜி ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படும் என முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி, 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாக வாய்ப்பிருக்கிறது. இந்த போனில் 13 எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய விவரக்குறிப்புகள்

முக்கிய விவரக்குறிப்புகள்

இதுகுறித்த MySmartPrice இன் அறிக்கைப்படி, மாதிரி எண் LS1654QB5 கொண்ட ஒரு சாதனம் BIS தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பொதுவாக பிஐஎஸ் தளத்தில் தோன்றப்படும் பட்டியலை போன்றே இது காட்டப்படுகிறது. 5ஜி ஆதரவோடு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஜியோ போன் இன் பிற முக்கிய விவரக்குறிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

JioPhone 5G சிறப்பம்சங்கள்

JioPhone 5G சிறப்பம்சங்கள்

JioPhone 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாஸ்க் இல் இயங்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜியோ போன் 5ஜி கேமரா விவரங்கள்

ஜியோ போன் 5ஜி கேமரா விவரங்கள்

ஜியோ போன் 5ஜி இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் செல்பி ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி சென்சார் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகவே ரிலையன்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை கூகுள் உடன் இணைந்து அறிமுகம் செய்வதை உறுதி செய்துள்ளது. இது ஜியோ போன் 5ஜி என அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் LYF உடன் இணைந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சிப்செட் வசதி

புதிய சிப்செட் வசதி

அதேபோல் ஜியோ நிறுவனம் மீண்டும் புதிய சிப்செட் வசதியுடன் ஒரு 4ஜி போனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளியாகியுள்ள தகவலின் விவரங்களை பார்க்கலாம். ஜியோ நிறுவனம் மீண்டும் புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கீக்பெஞ்ச் தளத்தில் வெளிவந்த தகவலின்படி, ஜியோ நிறுவனம் Unisoc SC9863A சிப்செட் வசதியுடன் ஒரு 4ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இந்த போனின் மாடல் எண் LS1602UWAB எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகம்

விரைவில் அறிமுகம்

ஜியோ அறிமுகம் செய்ய உள்ள புதிய 4ஜி போனில் 2ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அம்சங்களும் தெரியவரும். குறிப்பாக ஜியோவின் புதிய 4ஜி போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Don't Buy New 5G Smartphone: Jio Phone 5G listed in BIS, Might Launching Soon in India?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X