குற்றம் குற்றமே., துணிச்சல் புகார்: ரூ.14-க்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழந்த டோமினோஸ்!

|

டோமினோஸ் என்பது பீட்சாவை விற்கும் அமெரிக்க நிறுவனமாகும். இந்த நிறுவனத் தலைமையகம் மிச்சிகனில் உள்ளது. பீட்சா உள்ளிட்ட உணவுகளை அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து தராதபட்சத்தில் இலவசமாக வழங்குகின்றனர்.

விதவிதமான உணவுகள் விற்பனை

விதவிதமான உணவுகள் விற்பனை

விற்குமிடத்திற்கு ஏற்ப டாமினோசில் விதவிதமான உணவுகள் தயாரித்து விற்கப்படுகின்றன. இத்தாலிய உணவான பீட்சாவை முதன்மைப் பொருளாக விற்றாலும், கோழிக்கறியில் செய்யப்பட்ட உணவுகளும், பாஸ்டா, சாண்டுவிச்சு போன்றவற்றையும் விற்கப்படுகின்றன.

டோமினோஸ் வகை உணவு பொருள்

டோமினோஸ் வகை உணவு பொருள்

டோமினோஸ் வகை உணவு பொருட்களுக்கு ஜொமாட்டோ, ஸ்விகி போன்ற ஆன்லைன் உணவு ஆர்டர் தளங்களில் பல்வேறு வகை சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் பீட்சா என்றால் டோமினோஸ்-க்கு தனி மதிப்பு உண்டு.

உணவு ஆர்டர் செய்த வழக்கறிஞர்

உணவு ஆர்டர் செய்த வழக்கறிஞர்

இந்த நிலையில், உலகம் முழுவதிலும் பல ஆயிரம் கிளைகளை பீட்சா நிறுவனமாக டோமினோஸ் திகழ்ந்து வருகிறது. இது ஜூபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகமாகும். இந்த உணவகங்களில் பீட்சாக்களை அட்டையில் அடைத்து நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் பங்கஜ் எனும் வழக்கறிஞர் சண்டிகரில் உள்ள டோமினோஸ் உணவகத்தில் பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார்.

பலே திட்டம்: CAA ஆதரவுக்கு ஒரே மிஸ்டு கால்., ஆதரவு திரட்டும் பாஜக- இதுதான் அந்த எண்...பலே திட்டம்: CAA ஆதரவுக்கு ஒரே மிஸ்டு கால்., ஆதரவு திரட்டும் பாஜக- இதுதான் அந்த எண்...

14 ரூபாய் கட்டணம் வசூல்

14 ரூபாய் கட்டணம் வசூல்

பீட்சா டெலிவரியின் போது பைக்கு 14 ரூபாய் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வழக்கறிஞர் பங்கஜ் கடை மேலாளரிடம் எழுப்பியுள்ளார். அப்போது முறையான பதில் கிடைக்காமல் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. பின்னர், இது தொடர்பாக நுகர்வோர் ஆணையத்திடம் தனது தரப்பு குற்றச்சாட்டையும் வாதத்தையும் பங்கஜ் முன்வைத்துள்ளார்.

மொத்தமாக ரூ.5 லட்சம் அபராதம்

மொத்தமாக ரூ.5 லட்சம் அபராதம்

இது தொடர்பாக நுகர்வோர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில், மனரீதியாக வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு 100 ரூபாயும், நீதிமன்ற செலவுகளுக்கு 500 ரூபாயும், நுகர்வோர் ஆணையத்துக்கு 10ஆயிரம் ரூபாயும், அரசின் பிஜிஐ நோயாளிகள் நல நிதிக்கு 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் அபராத தொகையாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Pic courtesy: Social media

Best Mobiles in India

English summary
Dominos fined rs 5 lakh for 14rs charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X