18 கோடி ஆர்டர்கள் விவரங்கள் ஹேக்: டாமினோஸ் ஒப்புக் கொண்ட உண்மை- உடனே இப்படி செக் பண்ணுங்க!
முன்னணி பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸின் இந்திய தளம் கடந்த ஏப்ரல் மாதம் ஹேக் செய்யப்பட்டது. அப்போது, சுமார் 18 கோடி பீட்சா ஆர்டர்களின் விவரங்கள் திருடப்பட்டது.

பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸ்
முன்னணி பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸின் இந்திய தளம் கடந்த ஏப்ரல் மாதம் ஹேக் செய்யப்பட்டது. அப்போது, சுமார் 18 கோடி பீட்சா ஆர்டர்களின் விவரங்கள் திருடப்பட்டது. இந்தநிலையில், டாமினோஸ் தளத்தில் இருந்து திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஹேக்கர்கள் தளத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டாமினோஸ் இந்தியா தளம்
டாமினோஸ் இந்தியா தளத்தில் இருந்து சுமார் 13 டிபி டேட்டா திருடப்பட்டு உள்ளதாகவும், வாடிக்கையாளகர்களின் கட்டண விவரங்கள் மற்றும் ஊழியர்களின் கோப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஹேக்கர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

https://slf2rrahypck3bwckpdohsnhpeqrb3nhvwznjmarmweofwnptowe4mad.onion.ly/ தளத்தில், தொலைபேசி எண் அல்லது மெயில் ஐடியை பதிவிட்டால், தங்களது விவரங்கள் திருடப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இந்த தளத்தில் தற்போது வரை 2,89,69,710 தேடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தளத்தில், வாடிக்கையாளர்களின் முகவரி, ஆர்டர் விவரங்கள் போன்றவை வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டு
இதனிடையே, வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டது உண்மைதான் என்று, இந்தியாவில் டாமினோஸ் பீட்சாவின் முதன்மை உரிமையை வைத்திருக்கும் ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளது.வாடிக்கையாளர்களின் நிதி தொடர்பான விவரங்களை சேமிப்பதில்லை என்றும், இதனால், கட்டண மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பீதி
கொரோனா வைரஸ் பீதி பொது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், இதன் மூலமாகவும் தகவல்கள் திருடும் பணியில் ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம் கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரலாம். பொதுவாக அந்த நேரத்தில் எந்த நிகழ்வு டிரெண்டாக உள்ளதோ அதன்பேரில் ஹேக்கர்கள் சிந்தித்து செயல்பட தொடங்குவார்கள். அதன்படி தற்போது கொரோனா பேரில் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, கொரோனா தடுப்பு முறைகள், கொரோனா மருந்து என, கொரோனா வைரஸ் போன்ற பல பெயரில் ஏணைய பி.டி.எப்., பைல்களை இணையதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

ஊடுருவும் மால்வேர்கள்
இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்தவுடன் சமயத்தில் ஏதாவது விஷயங்களோ, அல்லது ஒன்றும் இல்லாமல் கூட போகலாம். ஆனால் இதுபோன்ற பிடிஎப் பைல்கள் மால்வேர்களை கொண்டது. இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்ததும் மால்வேர்கள் ஊடுருவி தங்களது தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும். எனவே இணையத்தில் தகவலை தேடும் போதும், படிக்கும் போது கவனத்தோடு செயல்படவும்.

பண மோசடியில் ஈடுபடும் நபர்கள்
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பண மோசடி செய்து தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதல்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய கதையை நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக ஒருவர் போன் செய்தி இது உங்கள் பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செயல்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். இதே பாணியில் நூதன முறையை கையாண்டு இங்கே மோசடி இடம்பெற்றிருக்கிறது.
Source: indiatimes.com


Click it and Unblock the Notifications