உள்நாட்டு விமான பயணம்: தமிழகத்தில் இ-பாஸ் வாங்குவது கட்டாயம்., எப்படி பெறுவது தெரியுமா?

|

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டு விமான பயணத்திற்கு தமிழகத்தில் உள் நுழைய இபாஸ் பெறுவது எப்படி என்ற காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

உலகின் 212 நாடுகளில் தாக்கம்

உலகின் 212 நாடுகளில் தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊரடங்கு அமல்

ஊரடங்கு அமல்

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழையும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு மே 31 ஆம் தேதியோடு முடியவுள்ள நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது. இதி் 64 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்ளனர் என்றாலும் பலி எண்ணிக்கை 4337 ஆக அதிகரித்து வருகிறது. அதேபோல் தற்போது வரை 83 ஆயிரத்து 4 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் முதல் இடத்தை மகாராஷ்டிரா மாநிலமும் இரண்டாவது இடத்தை தமிழகமும் இருந்து வருகிறது.

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களால் அதிகரிப்பு

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களால் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணம் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் வரும் தமிழர்களால் தான் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் தமிழகத்தில் இதுநாள் வரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டு விமான பயணங்களுக்கு அனுமதி

உள்நாட்டு விமான பயணங்களுக்கு அனுமதி

இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதிமுதல் உள்நாட்டு விமான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையில் மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதுகுறித்து பார்க்கலாம், இபாஸ் பெறுவதற்கு முதலில் https://tnepass.tnega.org என்ற வலைதளத்திற்கு உள்நுழைய வேண்டும்.

தனிநபர் இ பாஸ்

தனிநபர் இ பாஸ்

தனிநபர் இ பாஸ் பெறுவதற்கு திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கித் தவித்தல் போன்ற சில காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுகிறார்கள் என்பது இதில் கவனிக்கத்தக்க விஷயம்.

தொலைபேசி எண் பதிவிட வேண்டும்

தொலைபேசி எண் பதிவிட வேண்டும்

அதில் தொலைபேசி எண் கேட்கும் அதை பதிவிட வேண்டும்., அதன் பின் பதிவிட்ட தொலைபேசி எண்ணிக்கிற்கு ஓடிபி வரும் அதை பதிவிட வேண்டும். அதன்பின் தனி நபர் அல்லது குழு, தொழில்நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்நுழைதல், தமிழ்நாட்டிற்குள் விமான பயணம் என காண்பிக்கும் இதில் தேவையானவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்நுழைதல்

தமிழ்நாட்டில் உள்நுழைதல்

ரயில் சர்வதேச விமான சேவை ஆகியவைகளை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் உள்நுழைதல் என்ற சேவையை கிளிக் செய்ய வேண்டும். அதில் சில விவரங்கள் கேட்கும்., பெயர், பாலினம், அடையாளச் சான்று உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.

2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்? காரணம் என்ன?2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்? காரணம் என்ன?

அனைத்து விவரங்களும் பதிவிட வேண்டும்

அனைத்து விவரங்களும் பதிவிட வேண்டும்

அனைத்து விவரங்கள் பதிவிட்ட பிறகு தமிழ்நாட்டிற்கு எங்கு இருந்து வருகிறோம்., எங்கே செல்ல விரும்புகிறோம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இது அனைத்தும் முடிவடைந்த பிறகு தங்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால் இ பாஸ் வழங்கப்படும்.

source: newindianexpress.com

Best Mobiles in India

English summary
Domestic airlines: how to get tamilnadu e-pass

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X