இனிமே TV வாங்குனா இதை கேப்பீங்க.. டால்பி விஷன் 2 அறிமுகம்.. கன்டென்ட் இன்டலிஜென்ஸ்.. ஆதென்டிக் மோஷன் வருது!
எந்தவொரு ஸ்மார்ட் டிவி வாங்கினாலும் அதில் டால்பி விஷன் (Dolby Vision) இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு டிஸ்பிளே டெக்னாலஜியில் கொடிக்கட்டி பறந்து வருகிறது டால்பி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் வெர்ஷனான டால்பி விஷன் 2 (Dolby Vision 2) களமிறங்கி இருக்கிறது. அதோடு டால்பி விஷன் 2 மேக்ஸ் (Dolby Vision 2 Max) டெக்னாலஜியும் பிரீமியம் டிவிகளில் கிடைக்க இருக்கிறது. இந்த புதிய டிஸ்பிளே டெக்னாலஜி குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
டால்பி விஷன் என்றால் என்ன?
ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் என்னதான் டிஸ்பிளே மற்றும் ஆடியோவில் கவனம் செலுத்தினாலும், அதில் டால்பி நிறுவனம் கொடுக்கும் டால்பி விஷன் மற்றும் டால்பி ஆடியோ இருந்தால் மட்டுமே கஸ்டமர்களிடம் வரவேற்பு பெறுகிறது. அந்த அளவுக்கு அந்த டெக்னாலஜிகள் கஸ்டமர்களிடையே சென்று சேர்ந்துவிட்டன. இதில் டால்பி விஷனானது, டிஸ்பிளே அனுபவத்தை மாற்றியது.

இது எச்டிஆர் இமேஜிங் டெக்னாலஜி (HDR Imaging Technology) மூலம் டிஸ்பிளேவில் கிடைக்கும் கலர், கான்ட்ராஸ்ட் மற்றும் பிரைட்னஸ் ஆகியவற்றை மேம்படுத்தி நேர்ச்சுரல் மற்றும் பிரீமியம் அனுபவத்தை கொடுக்கிறது. ஆகவே, விலை அதிகமாக கொண்ட டிவி மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது. இப்போது, இது அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டது.
டால்பி விஷன் 2:
டால்பி விஷன் டெக்னாலஜியின் அடுத்த வெர்ஷனாக டால்பி விஷன் 2 களமிறங்கி இருக்கிறது. இது ஆர்ஜிபி-மினிஎல்இடி டிவி (RGB-MiniLED TV) போன்ற பிரீமியம் டிவிகளில் முதலில் கிடைக்க இருக்கிறது. அதன்பிறகு படிப்படியாக மற்ற டிவி மாடல்களிலும் கிடைக்க இருக்கிறது. இதில் என்னென்ன பீச்சர்கள் இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
* நெக்ஸ்ட்-டென் டால்பி இமேஜ் என்ஜின் (Next-Gen Dolby Image Engine)
* கன்டென்ட் இன்டலிஜென்ஸ் (Content Intelligence)
* ஆதென்டிக் மோஷன் (Authentic Motion)
நெக்ஸ்ட்-டென் டால்பி இமேஜ் என்ஜின்:
டால்பி விஷன் 2 டெக்னாலஜியில் இமேஜ் என்ஜின் கூடுதல் பவர்புல்லாக என்ஹான்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லைவ் ஸ்போர்ட்ஸ் பிராட்காஸ்ட் மற்றும் கேமிங் மட்டுமல்லாமல், வழக்கமான மூவிக்கள் மற்றும் ஷோக்களின் பிக்சல் குவாலிட்டியும் அடுத்த தரத்துக்கு உயர்த்தப்படுகிறது. இது டால்பி விஷன் மாடல்களிலும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
கன்டென்ட் இன்டலிஜென்ஸ்:
இது கிட்டத்தட்ட ஏஐ போலவே செயல்பட இருக்கிறது. அதாவது, டால்பி விஷன் 2 டெக்னாலஜி மூலம் நீங்கள் பார்க்கும் கன்டென்ட் மற்றும் உங்களது அறையில் எங்கிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதையும் டிடெக்ட் செய்து பிக்சர் குவாலிட்டியை கொடுக்கும். இது வியூவிங் அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்ப மாற்றி கொடுக்கும்படியான டெக்னாலஜியாக இருக்கிறது.
இதில் மேலும் பல்வேறு பீச்சர்கள் கிடைக்கின்றன. டிஸ்பிளேவில் பிரிசிஷன் பிளாக் டெக்னாலஜியை (Precision Black Technology) கொடுத்து, டார்க்னஸ் அதிகமாக இருக்கும் சீன்களை என்ஹான்ஸ் செய்து கொடுக்கும். இது டார்க் அதிகம் இருக்கும் சீன்களையும் கிரிஸ்டல் கிளியராக காட்டும். லைட் சென்ஸ் (Light Sense) மூலம் உங்களது ரூம்களில் இருக்கும் லைட்டுக்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கும்.
இதற்காக அட்வான்ஸ்டு ஆம்பியன்ட் லைட் டிடெக்சன் (Advanced Ambient Light Detection) கிடைக்கிறது. இதில் பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்டு அட்ஜஸ்ட் செய்யப்படும். லைவ் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தவும் இதில் பீச்சர் இருக்கிறது. மோஷன் கன்ட்ரோல் மற்றும் கலர் ஆப்டிமைசேஷன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
ஆதென்டிக் மோஷன்:
எச்டிஆர் மட்டுமல்லாமல், அதற்கு மேலும் டிஸ்பிளே அவுட்புட் கொடுக்க ஆதென்டிக் மோஷன் பீச்சரை கொடுக்கிறது. இந்த பீச்சர் மூலம் ஷாட்-பை-ஷாட் அடிப்படையில் ரியலிஸ்டிக் சினிமா அனுபவத்தை கொடுக்க இருக்கிறது. இதுபோன்ற பீச்சர்களுடன் டால்பி விஷன் 2 மற்றும் டால்பி விஷன் 2 மேக்ஸ் ஆகிய 2 வெர்ஷன்களில் கிடைக்க இருக்கிறது.
பிரீமியம் டிவிகளில் டால்பி விஷன் 2 மேக்ஸ் கிடைக்க இருக்கிறது. அதேபோல மெயின்ஸ்ட்ரீம் டிவி மாடல்களில் டால்பி விஷன் 2 கிடைக்க இருக்கிறது. ஹிசென்ஸ் டிவி மூலம் மார்கெட்டில் கிடைக்க இருக்கிறது. இந்த டிவி மீடியாடெக் பென்டோனிக் 800 (MediaTek Pentonic 800) சிப் மற்றும் மிரா விஷன் ப்ரோ பிகியூ என்ஜின் கொண்டதாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications