Home
News

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாய்! மீண்டு வந்து கண்ணீரை துடைத்த சுவாரஸ்யம்.!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்பது நம்மை பல கட்டங்கள் முன்னோக்கி அழைத்து வருகிறது. வளர்ந்து வரும் கேட்ஜெட்கள் மனிதர்களின் உயிரை காப்பாற்றிய பல நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. அதன்படிதான் தற்போதும் ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. செல்லமாக வளர்த்த நாயை பரிகொடுத்த பெண்ணுக்கு Apple AirTag என்ற சாதனம் அதை கண்டுபிடிக்க பேருதவியாக இருந்திருக்கிறது.

உயிரை காப்பாற்றும் ஆப்பிள்

உயிரை காப்பாற்றும் ஆப்பிள்

உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் ஐபோன், ஆபத்தில் சிக்கி இருந்த நபரை சரியான நேரத்தில் காப்பாற்ற உதவிய ஆப்பிள் வாட்ச் என பல நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம். தற்போது இந்த வரிசையில் ஆப்பிள் ஏர்டேக் இணைந்திருக்கிறது.

செல்லப்பிராணிகளை கண்காணிக்க ஏர்டேக்கை பயன்படுத்தும் படி ஆப்பிள் பரிந்துரைக்கவில்லை. இருப்பினும் மக்கள் ஏர்டேக்கை செல்லப்பிராணிகளை கண்காணிக்க பயன்படுத்துகின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தக்க விஷயம்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சீமஸ்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சீமஸ்

இதுகுறித்து ஏபிசி செய்தி வெளியிட்ட தகவலின்படி, எமிலி பிரில் என்ற பெண் தனது செல்லப்பிராணியான சீமஸ் என்ற நாய் உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்து பிரிந்த சீமஸ், கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டுப் படுகையின் விளிம்புப் பகுதிக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எமிலி பிரில் கூறுகையில், "என்னுடன் நடந்து வந்த சீமஸ், திடீரென என்னைவிட்டு விலகி சென்று தண்ணீர் ஓடும் பகுதியை நோக்கி சென்றது. தண்ணீருக்குள் ஒரு பாதத்தை மட்டும் தான் சீமஸ் வைத்தது, வெள்ளப் பெருக்கு அதிகமாக இருந்த காரணத்தால் சீமஸ் நீருடன் அடித்துச் சென்றது" என கூறினார்.

களமிறங்கிய மீட்புக் குழு

களமிறங்கிய மீட்புக் குழு

சீமஸ் நீரில் அடித்துச் சென்றதும் எமிலி உடனடியாக அவசர சேவை எண்ணுக்கு டயல் செய்திருக்கிறார். தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சீமஸ் என்ற நாயை மீட்க மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிள் ஏர்டேக்

ஆப்பிள் ஏர்டேக்

அதிர்ஷ்டவசமாக நாயின் கழுத்தில் ஆப்பிள் ஏர்டேக் இருந்திருக்கிறது. இதையடுத்து நீரில் அடித்து செல்லப்பட்ட நாய் எங்கிருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த பகுதியை நோக்கி மீட்புப் படையினர் சென்ற போது நாய் குரைக்கும் சத்தம் மட்டும் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பகுதியை மீட்புப் படையினர் உற்று கவனித்த போது நீரில் மூழ்கியபடி இருந்த சீமஸ் தலையை மட்டும் தூக்கி பார்த்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட சீமஸ் நாய்

பாதுகாப்பாக மீட்கப்பட்ட சீமஸ் நாய்

தீயணைப்பு வீரர்கள் விரைவாக நாயை அணுகி, பாதுகாப்பாக ஏணியின் மூலம் மேலே கொண்டு வந்தனர். நாய் எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் சீமஸ் என்ற நாய் பாதுகாப்பாக அதன் உரிமையாளரான எமிலி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏர்டேக் இல்லை என்றால் சீமஸ் என்ற செல்லப் பிராணியை கண்டுபிடிப்பது என்பது மிக சிரமமாக இருந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிள் விடுத்த அறிவுரை

ஆப்பிள் விடுத்த அறிவுரை

ஆப்பிள் ஏர்டேக் ஆனது மக்களுக்கு மிகவும் பயனுள்ள கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நபர்களை பின்தொடர ஏர்டேக் பல முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மக்கள் இந்த சாதனைத்தை தொலைந்து போன பொருட்களையும் செல்லப்பிராணிகளையும் கூட கண்டுபிடிக்க பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ஆப்பிள் இதுகுறித்து கூறுகையில், மக்கள் அல்லது செல்லப்பிராணிகளை கண்காணிக்க ஏர்டேக்கை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. முக்கியமான நேரத்தில் இதை பயன்படுத்தி அசம்பாவிதம் எதுவும் நடந்தால் அதற்கு ஆப்பிள் பொறுப்பேற்க விரும்பவில்லை என்பதே ஆப்பிள் இப்படி அறிவுறுத்தியதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆர்வம் காட்டும் மக்கள்

ஆர்வம் காட்டும் மக்கள்

நாய்களை கண்காணிப்பதற்கு என ஜிபிஎஸ் கருவிகள் விற்பனைக்கு கிடைக்கிறது. இருப்பினும் ஜிபிஎஸ் கருவிகளை விட ஏர்டேக் மிகவும் மலிவானதாக இருக்கிறது. எனவே மக்கள் இதுபோன்ற பயன்பாடுகளுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்துவதை விட ஏர்டேக்கை பயன்படுத்தவே ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏர்டேக் என்றால் என்ன?

ஏர்டேக் என்றால் என்ன?

ஆப்பிள் வழங்கும் ஃபைண்ட் மை என்ற அம்சத்தை பயன்படுத்தி தொலைந்து போகும் பொருட்களை கண்டறிவதற்கு என ஏர்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. இது சிறிய வட்ட வடிவில் ஒரு பட்டன் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இந்த ஏர்டெக் சாதனத்தை மக்கள் சாவி, பர்ஸ் போன்றவற்றில் பொதுவாக பயன்படுத்துகின்றனர். ஏணைய கார்களின் சாவிகளை பார்த்தால் அதில் கீச்செயினாக இந்த ஏர்டேக் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

File images

More from GizBot

Best Mobiles in India

English summary
Dog Swept Away in Floods Found Safe with the Help of Apple AirTag
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X