சூடு தாங்கல.. வெயில் காலத்தில் உங்க போன் ஓவர் ஹீட் ஆகிறதா? போனை எப்படி சரியான முறையில் கூல் ஆக்குவது?
வெயில் காலம் துவங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் இப்போதே படுமோசமாக நம்மை தாக்க துவங்கிவிட்டது. இன்னும் அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்டால், மக்களின் நிலை என்னவாக போகிறதென்றே தெரியவில்லை. வெயில் காலத்தில் நமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் வேகமாக ஓவர் ஹீட்டிங் சிக்கலை சந்திக்கின்றன.
வெயிலின் (Summer) வெப்பப்பிடியில் இப்போது மக்கள் சிக்கல் தவிப்பது போல, நம்முடன் சேர்ந்தே பயணிக்கும் ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் மொபைல் (mobile) சாதனங்களும் இப்போது வெப்பத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகின்றன. வெயில் காலத்தில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக இந்த ஓவர் ஹீட்டிங் பிரச்சனை (over heating issue) பார்க்கப்படுகிறது.

வெயில் காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஓவர் ஹீட் ஆகிறதா?
இதை சரியான முறையில், சரியான நேரத்தில் கையாளவில்லை என்றால், ஸ்மார்ட்போன் வெடிக்கும் அபாயம் (smartphone blast danger) இருப்பதனால், சில சரியான வழிமுறைகளை நாம் அனைவரும் பின்பற்றி ஸ்மார்ட்போனை குளிர்விக்க கூடிய (proper way to cool a over heating mobile phone) வித்தைகளை தெரிந்துகொள்வது பாதுகாப்பானது மற்றும் நல்லது. சரி, இந்த வெயில் காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் ஓவர் ஹீட் ஆவதை எப்படி கையாள்வது என்று பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் வழக்கமாக ஓவர் ஹீட்டிங் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதிக நேரம் அதிக பிரைட்னஸ் (high brightness) உடன் பயன்படுத்துவது, சார்ஜிங் (charging) உடன் போனை பயன்படுத்துவது, பேக் கிரௌண்ட்டில் தேவையில்லாத ஆப்ஸ்கள் (background apps) ரன் ஆவது போன்ற பல காரணங்களால் ஸ்மார்ட்போன் சூடாகிறது. வெயில் காலத்தில் சூரியனின் வெப்பம் (heat of the sun) ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறசூழல் வெப்பத்தின் காரணமாக போன்கள் விரைவாக ஓவர் ஹீட் (fast over heating issue) ஆகின்றன. இதை சமாளிக்க ஸ்மார்ட்போன் பயனர்கள், அவர்களுடைய போனை நேரடியாக சூரிய ஒளியில் படாமல் பார்த்து கொள்வது சிறப்பானது. போனை நீண்ட நேரம் சூரிய ஒளியில் பயன்படுத்தாமல் இருப்பது ஓவர் ஹீட்டிங் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.

வெயில் காலத்தில் உங்கள் போனை இப்படி சார்ஜ் செய்யாதீர்கள்:
ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென சூடாகிறது என்றால், உடனே உங்கள் போனிற்கு அணிந்திருக்கும் மொபைல் கவரை (mobile cover or case) திறந்து போனை வெளியில் எடுக்கவும். இதை செய்தால் போனின் சூடு குறையும். போன்களில் ஏற்படும் ஓவர் ஹீட்டிங் சிக்கலை கட்டுப்படுத்த இப்போது பல கூலிங் ஃபேன் கேட்ஜெட்ஸ்கள் (mobile coolingfan gadgets) சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை சில நூறு விலை முதல் வாங்க கிடைக்கிறது.
போனை அதிக பிரைட்னஸ் உடன் பயன்படுத்தும் பொழுது உங்கள் சாதனம் அதிகமான சார்ஜ்ஜை பயன்படுத்துகிறது. இதனால், ஓவர் ஹீட்டிங் சிக்கல் உருவாக்குகிறது. மிதமான பிரைட்னஸ் ஓவர் ஹீட்டிங் சிக்கலை கட்டுப்பாட்டில் வைக்க அனுமதிக்கும். அதேபோல், உங்கள் போனை முழுமையாக 100% வரை சார்ஜ் செய்வதும் ஓவர் ஹீட்டிங் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
சரியான மற்றும் பாதுகாப்பான சார்ஜிங் அளவு (safe mobile charging method) என்பது 80% வரை மட்டுமே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 80% அளவுக்கு பிறகு சார்ஜ்ஜரில் (mobile charger) இருந்து போனை நீக்குவது ஓவர் ஹீட்டிங்கை தவிர்க்க உதவும். அதேபோல், நீண்ட நேரம் வீடியோ கால் (video call) பேசுவது மற்றும் சார்ஜில் இருக்கும் போனில் சமூக ஊடகங்கள் மற்றும் கேம்ஸ்களை பயனப்டுத்துவதும் ஓவர் ஹீட்டிங் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
வெயில் காலத்தில் உங்கள் போனை மொபைல் கேஸ் இல்லாமல் சுலபமாக சுவாசிக்கும் படி பயன்படுத்துவது ஓவர் ஹீட்டிங் சிக்கலை குறைக்க உதவும். ஓவர் ஹீட் ஆகும் போன்களை தண்ணீர் (water) தொட்டு சுத்தம் செய்வது, மற்றும் பிரிட்ஜ்ஜிற்குள் வைப்பது, AC-க்கு நேராக காண்பிப்பது போன்ற செயல்களை தவிர்க்கவும். இது போனின் பாகங்களை சேதப்படுத்தக்கூடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








