உங்க Mobile-ல ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கா? அப்போ இந்த 5 ஆபத்தை தெரிஞ்சுக்கோங்க.. தெரியாவிட்டால் என்ன சிக்கலாகும்?
உங்கள் போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் (Mobile fast charging) அம்சம் இருக்கிறதா? அப்படியானால், இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக படித்து பயன்பெற வேண்டும் மக்களே. உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் (Smartphone) இருக்கிறது என்றாலோ, அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறதென்றலோ, கட்டாயமாக இந்த 5 விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன் வாங்கும் நமக்கு, அதற்கு பின்னால் நிகழும் மறைமுகமான பிரச்சனைகளை பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. இதனால் தான், இந்த தகவலை உங்கள் முன் கொண்டுவருகிறோம்.
உங்க Mobile-ல ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கா? அப்போ இந்த 5 ஆபத்தை தெரிஞ்சுக்கோங்க:
அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ஸ்மார்ட்போன்கள் இப்போது சந்தையை நிரப்பிவிட்டன. வேகமாக சார்ஜ் செய்ய அனுமதிக்கும் சாதனங்களை தான் மக்கள் இப்போது பெரிதும் விரும்பி வாங்குகிறார்கள். ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஒரு சிறந்த டைம் சேவிங் தொழில்நுட்பம் தான் என்றாலும், இதில் சில குறைபாடுகளும் மறைமுக ஆபத்துகளும் நிறைந்திருப்பதாக டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த 5 சிக்கல்களை ஆபத்துடன் சந்திக்க நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

1. ஹீட் அபாயம்:
- அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மூலம் ஒரு சாதனம் சார்ஜ் செய்யப்படும் பொழுது, அதில் கூடுதல் வெப்பம் உருவாக்கப்படுகிறது. குறைந்த நேரத்திற்குள் அதிக சார்ஜ்ஜை ஒரு பேட்டரிக்குள் நிரப்புவதனால், அங்கு வெப்பம் உருவாக்குவதாக கூறப்படுகிறது. இந்த வெப்பத்தை பயனர்கள் மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தலையணை மற்றும் காற்றோட்டம் இல்லாத இடத்தில் போனை வைக்கும் பொழுது இது ஓவர் ஹீட்டிங் நிலைக்கு சென்று போன் வெடிக்கும் நிலைக்கு கூட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
2. பேட்டரி ஆரோக்கியம் குறையும் அபாயம்:
ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இயங்கும் போனை அடிக்கடி சார்ஜ் செய்வது ஆரோக்கியமற்ற செயலாக பார்க்கப்படுகிறது. காரணம், அடிக்கடி ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் பொழுது சார்ஜிங் சைக்கிள் வேகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பேட்டரி ஆயுள் மிக வேகமாக குறைக்கப்படுகிறது. உங்கள் போனில் லித்தியம் அயன் பேட்டரி இருக்கிறதென்றால், பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜிங் சைக்கிள் காரணமாக அதன் திறன் குறைய அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. போன் 20% சார்ஜ் கீழ் செல்லும் பொது மட்டும் சார்ஜ் செய்ய அறிவுரைக்கப்படுகிறது.
3. கம்பெடிபிலிட்டி சிக்கல் மற்றும் ஆபத்து:
எல்லா ஸ்மார்ட்போன்களும் ஒரே அளவிலான ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதில்லை. இதனால், உங்கள் போனிற்கு உரிய ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜ்ர்களை மட்டுமே பயன்படுத்த அறிவுரைக்கப்படுகிறது. கூடுதல் பவர் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜ்ரை குறைந்த பவர் சாதனத்தில் பயன்படுத்துவது, அல்லது வேறேதேனும் ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவது, அந்த போனில் உள்ள முக்கியக்கூறுகளை பாதிப்படைய செய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
4. பவர் சர்ஜ் சிக்கல் மற்றும் ஆபத்து:
ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் திடீர் பவர் சர்ஜ் சிக்கல் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால், உங்கள் போனில் உள்ள மிகவும் நுணுக்கமான அல்லது சென்சிட்டிவான பாகங்கள் சேதமடைய அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. குறிப்பாக சார்ஜிங் போர்ட் மற்றும் பேட்டரி பழுதடைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
5. பேட்டரி ஆயுள் குறைபாடு சிக்கல்:
அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்துவதனால், உனகளில் பேட்டரி கெபாசிட்டியில் குறைபாடை சந்திக்க நேரிடும். உங்கள் போனில் பேட்டரி ஆயுளை வேகமாக குறைக்க ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஒரு காரணமாக அமைகிறது. உங்கள் பேட்டரி திறனை வேகமாக குறைப்பதோடு, அதன் ஆயுளையும் வேகமாக குறைக்கிறது. பழைய மாடல் போன்களில் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜ்ர்களை பயன்படுத்துவது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சார்ஜ்ரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த நுணுக்கமான விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று டேக் வலினார்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








