நிலாவுக்கு ஆபத்து- நிலவில் மோதப் போகும் ராக்கெட் சீனாவுக்கு சொந்தமானதா?- கொதித்தெழுந்து சீனா சொன்ன பதில்!

|

ஏழாண்டுகளுக்கு முன்பு வெடித்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி தான் இந்த வழிகெட்ட பொருள் என வானியலாளர்கள் ஆரம்பத்தில் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 4 ஆம் தேதி நிலவில் மோதும் ராக்கெட் தங்களுடையது அல்ல என சீனா தெரிவித்துள்ளது.

சந்திர ஆய்வுத் திட்டம்

சந்திர ஆய்வுத் திட்டம்

பெய்ஜிங்கின் சந்திர ஆய்வுத் திட்டத்தில் இருந்து விண்வெளி குப்பைத் துண்டுகள் வந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியதை அடுத்து, திங்களன்று, சந்திரனில் ராக்கெட் ஒன்று விழுந்ததற்கான பொறுப்பை சீனா மறுத்துள்ளது. ஏழாண்டுகளுக்கு முன்பு வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் ஒரு துண்டானது, அதன் பணியை முடித்துவிட்டு விண்வெளியில் கைவிடப்பட்டது என்று வானியலாளர்கள் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் அது தற்போது சீன விண்வெளி ஏஜென்சியின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக -ல் ஏவப்பட்ட Chang'e 5-T1-க்கான பொருளாக இருக்கும் என கூறப்படுகிறது.

நிலவில் மோதும் ராக்கெட்

நிலவில் மோதும் ராக்கெட்

இந்த ராக்கெட் மார்ச் 4-ம் தேதி நிலவின் தொலைவில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன விண்வெளி ஏஜென்சியின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக -ல் ஏவப்பட்ட Chang'e 5-T1-க்கான பொருளாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த தங்களுடைய பொருள் அல்ல என நிராகரிப்பு செய்தது. பெய்ஜிங் "விண்வெளியில் நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையை மனசாட்சியுடன் நிலைநிறுத்துகிறது" என சீன செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். சீனா விண்வெளி வல்லரசாக மாறுவதற்கான நோக்கத்தை கொண்டு செயல்படுகிறது. கடந்த ஆண்டு தனது புதிய விண்வெளி நிலையத்திற்கான பணியை சீனா அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒரு மிகப் பெரிய இலக்கை முன்வைத்தது என குறிப்பிட்டார்.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ராக்கெட் என தகவல்

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ராக்கெட் என தகவல்

முன்னதாக வெளியான தகவல் குறித்து பார்க்கையில், எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் 2015 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட் ஆனது வானிலை தொடர்பான ஆய்வுக்கான செயற்கைக்கோள் உடன் அனுப்பிவைக்கப்பட்டது. பால்கன் 9 ராக்கெட் ஆனது வானிலை தொடர்பான செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டு தனியாக பிரிந்து சென்றது. பிரந்து சென்ற ராக்கெட் ஆனது ஜனவரி மாதம் சந்திரனுக்கு மிக அருகில் சென்று சுற்றுப்பாதையை மாற்றியது என கூறப்பட்டது.

ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

இதுகுறித்து நிபுணர்களின் தகவல் படி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு கடினமான பகுதி அதன் பணியை முடித்த பின் விண்வெளியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது ராக்கெட் செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டு பூமிக்கு திரும்ப எரிபொருள் இல்லாத காரணத்தால் விண்வெளியிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ராக்கெட் குழப்பான சுற்றுப்பாதையில் மிதந்து வருகிறது. அதாவது இந்த ராக்கெட் கைவிடப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகளாக நிலவு, சூரியன், பூமி ஆகிய வெவ்வேறு ஈர்ப்பு விசை காரணமாக அங்கும் இங்கும் ஈர்க்கப்பட்டு குழப்பமான நிலையில் மிதந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

விண்வெளி குப்பை

விண்வெளி குப்பை

இந்த நிலையில் விண்வெளி குப்பையில் ஒன்று நேரடியாக சந்திரனில் மோத வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது. எலான் மஸ்க்கால் கைவிடப்பட்டு நிலைக்குழைந்து சுற்றும் ராக்கெட் வருகிற மார்ச் 4 ஆம் தேதி நிலவில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்தனர். ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய பால்கன் 9 ராக்கெட் ஆனது நான்கு டன் எடை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ராக்கெட் ஆனது 5000 மைல் வேகத்தில் நிலவில் மோத இருப்பதாக கணிக்கப்படுகிறது. 5000 மைல் வேகத்தில் பயணித்து நிலவில் மோதினாலும் நிலவுக்கு பாதிப்பு என்று பார்க்கையில், அது மிக சிறிய அளவில் மட்டுமே இருக்கும் என கணித்து தெரிவிக்கப்படுகிறது. கணிக்கும்படி இந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நிலவில் மோதும் பட்சத்தில் நிலவில் மோதிய முதல் ராக்கெட் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனின் இருண்ட பக்கத்தில் இது மோதலாம் என கணிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Does the rocket to hit the moon belong to China?- China Answers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X