ரூ.2000/- தாள்களில் ஜிபிஎஸ் சிப் : உண்மையா, பேய் கதையா.??
மத்திய அரசின் புதிய ரூ.2000/- நோட்டு அறிமுகம், இதைத் தொடர்ந்து பரவும் புரளிகளை நம்பலாமா, வேண்டாமா.? உண்மை இது தான்..
ரூ.500 மற்றும் ரூ.1000/- தாள்கள் இன்று முதல் செல்லாது என்ற அறிவிப்பு மூலம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் புதிய அறிவிப்புக் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரைக் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்துடன் புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ரூ.2000/- தாள் குறித்துப் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அப்படியாகப் புதிய ரூ.2000/- தாள்களில் ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையா, இப்படியெல்லாம் செய்ய முடியுமா.??

ஜிபிஎஸ்
வாட்ஸ்ஆப்பில் வேகமாகப் பரவி வரும் தகவல்களில் புதிய ரூ.2000/- நோட்டுகளில் ஜிபிஎஸ் சிம் பொருத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை எளிதாகக் கண்டறிய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் ரிஃப்ளெக்டர்
இணையத்தில் பரவி வரும் தகவல்களில் NGC வகைச் சிப்கள் இருப்பதாகவும் இவை சிக்னல் ரிஃப்ளெக்டர் போன்று செயல்பட்டு செயற்கைக்கோள்களின் உதவியுடன் ரூபாய் நோட்டுகள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் என்றும் நோட்டுகள் பூமியின் கீழ் 120 அடி ஆழத்தில் இருந்தாலும் கண்டறிய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாத்தியம்
பணத்தை ஒரே இடத்தில் பதுக்கி வைக்கப்படும் போது அவற்றை டிராக் செய்து அதிகாரிகள் மூலம் முறையான நடவிட்க்கை எடுக்கக் கோரும் விதமாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளக்கம்
சமீபத்தில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் சிப் பொருத்தப்பட்டிருப்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதனால் பணம் இருக்கும் இடத்தை டிராக் செய்ய முடியும் எனப் பரவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

சாத்தியமற்றது
தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற தொழில்நுட்பங்களை ரூபாய் நோட்டுகளில் பொருத்துவது சாத்தியமற்றது ஆகும். எதிர்காலத்தில் இது போன்ற விடயம் உண்மையில் சாத்தியம் தானா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications