Home
News

மருத்துவம் சார்ந்த செயலிகளை நம்பாதீங்க மருத்துவர்கள் எச்சரிக்கை.!!

By Meganathan

நம்ம வாழ்க்கை முறையை எளிமையானதாக மாற்றி, உட்கார்ந்த இடத்தில் அனைத்தையும் செய்து முடிக்க உதவும் கண்டுபிடிப்பாக மொபைல் போன் செயலிகள் இருக்கின்றது. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் செயலிகளின் பயன்பாடுகளும் கனிசமான அளவு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மருத்தும் சார்ந்து உடல் நலத்தை மேம்படுத்த உதவும் செயலிகளும் கிடைக்கின்றன. மருத்துவர் ஆலோசனையின்றி உடல் நலத்தை உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்களை கொண்டு சீராக வைத்து கொள்ள உதவும் இது போன்ற செயலிகள் நமக்கு பேராபத்தை விளைவிக்கும் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

உடல் நலத்தை கண்காணிக்க தொழில்நுட்பங்களை அதிகளவு நம்புவது பேராபத்துகளுக்கு காரணமாக அமையலாம் என்பதால் அவைகளை நம்ப வேண்டாம் என இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

தவறு

தவறு

பெரும்பாலான சமயங்களில் இது போன்ற செயலிகள் தவறான தகவல்களை வழங்குவதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வீண் பிரச்சனைகளுக்கு வழி செய்யும்.

வருமானம்

வருமானம்

சந்தையில் இது போன்று கிடைக்கும் பெரும்பாலான செயலிகள் வருமானத்தை ஈட்டி கொள்ளும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது.

ரத்தம்

ரத்தம்

கட்டை விரல் ரேகையை ஸ்கேன் செய்து ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் செயலிகள் பெரும்பாலும் பொய்யான தகவல்களையே வழங்கும் என முன்னணி நீரிழிவு நிபுணர் தெரிவித்துள்ளார். தற்சமயம் பயன்படுத்தும் வழிமுறைகளை போன்று இல்லாமல் இந்த செயலிகள் வழங்கும் தகவல்கள் முற்றிலும் வித்தியாசமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ப்ரீசெட்

ப்ரீசெட்

உடலில் நாள் ஒன்றிற்கு எரிக்கப்பட்ட கலோரிகளை கணக்கிடும் செயலிகளை மக்கள் நம்பி வருகின்றனர், ஆனால் இவை முன்பே பதிவு செய்யப்படும் என கேட்ஜ் தெரிவித்துள்ளார்.

செயலிகள்

செயலிகள்

தற்சமயம் மட்டும் சுமார் 50,000 மருத்துவம் சார்ந்த செயலிகள் சந்தையில் கிடைப்பதாகவும் இந்த எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதோடு உலகம் முழுக்க சுமார் 500 மில்லியன் மக்கள் இது போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வேகம்

வேகம்

வேகமான தீர்வை எதிர்நோக்கி உடலை பாதுகாப்பதாக கருதி மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தவறான வழிமுறைகளை மக்கள் தைரியமாக பின்பற்றுகின்றனர் என தில்லியை சேர்ந்த நீரிழிவு நிபுணர் சுதிர் குமார் தெரிவித்துள்ளார்.

வேறுபாடு

வேறுபாடு

உடல் நலம் சார்ந்த வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் முற்றிலும் வேறுபடும் என்பதை மக்கள் உணர வேண்டும். இதனால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய அபாயமும் இருக்கின்றது.

கவனம்

கவனம்

மக்கள் தங்களது உடலை சீராக வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பது நல்ல விஷயமே, ஆனால் எளிமையான, மற்றும் தவறான வழிமுறைகளை நம்பி உடலை கெடுத்து கொள்ள கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
doctors warn not to follow mobile health apps Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X