செல்ஃபி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் கோவா கடற்கரையில் பலி.!

|

அந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவா கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயன்று பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெண் மருத்துவர் ரம்யா

பெண் மருத்துவர் ரம்யா

கிருஷ்ணா மாவட்டத்தின் ஜககாயப்பேடா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் மருத்துவர் ரம்யா, நண்பர்களுடன் கொலோம்புசென்றுள்ளனர். நோ செல்ஃபி ஜோன்(no selfie zone) பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்று ராட்சச அலை தாக்கி கடலுக்குள் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.

மீனவர்கள் உதவி

மீனவர்கள் உதவி

கடல் கரையை ஒட்டியுள்ள பாறையின் மேல் ஏறி ரம்யாவும் அவரது நண்பரும் புகைப்படம் எடுத்துள்ளனர், எதிர்பாராமல் அலைக்குள் சிக்கி இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அருகிலிருந்த மீனவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

மீட்கப்பட்ட ரம்யாவின் நண்பர்

மீட்கப்பட்ட ரம்யாவின் நண்பர்

ரம்யாவின் நண்பரை உடனே காப்பாற்றிவிட்டனர், ஆனால் ரம்யாவின் உடல் சிறிது நேரம் கழித்தே மீனவர்களின் கண்களுக்குத் தென்பட்டுள்ளது. ரம்யாவை மீனவர்கள் மீட்கும்பொழுது அவருக்கு உயிர் இல்லை என்று அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நோ செல்ஃபி ஜோன்களில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்

நோ செல்ஃபி ஜோன்களில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்

ரம்யாவும் அவரது நண்பர்களும் தனிமைப்படுத்தப்பட்ட கடல் பகுதியிலிருந்ததினால் லைப் கார்ட் உதவியும் கிடைக்காமல் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பாபவர்கள் கவனமாக இருப்பது மிக அவசியம் என்றும் நோ செல்ஃபி ஜோன்களில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
doctor andhra pradesh drowns goa while attempting take selfie beach : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X