Home
News

கூகுள் பே மூலம் தனிநபர் கடன் வாங்க போறீங்களா? இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியாவில் உள்ள மக்கள் தற்போது யுபிஐ செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதாவது சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை இந்த யுபிஐ சேவையை சுலபமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடிகிறது. அதுவும் போன்பே (PhonePe), பேஎடிம் (Paytm) செயலிகளை விட கூகுள் பே (Google Pay) செயலியை தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த கூகுள் பே செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பின்பு இந்த செயலியை பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறது எனவே தான் கூகுள் பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த கூகுள் பே செயலியில் லோன் வசதியும் உள்ளது. அதாவது அவசரக்கால தேவைகளுக்குக் கூகுள் பே செயலி மூலம் எளிதாகக் கடன் பெரும் வசதியும் உள்ளது.

கூகுள் பே மூலம் தனிநபர் கடன் வாங்க போறீங்களா?

குறிப்பாக கூகுள் பே தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.10,00,000 வரை கடன் தொகைகளை வழங்குகிறது. அதுவும் அவசர காலங்களில் பயனர்களுக்குக் காகித வேலைகள் இல்லாமல் அல்லது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் நிதியை விரைவாக அணுக உதவுவதற்காக இந்த சேவை.

ஆனால் வாடிக்கையாளர்களுக்குக் கடன்களை வழங்கப் பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கூகுள் பே. அதன்படி பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவைகளை நேரடியாக செயலியில் வழங்கியுள்ளது கூகுள் பே. தகுதியுள்ள பயனர்கள் அவர்களின் நிதி சுயவிவரத்தைப் பொறுத்து ரூ.10,00,000 வரையிலான கடன் தொகைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதுவும் இந்தக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11.25% இல் தொடங்குகின்றன, ஆனால் இறுதி விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து மாறுபடலாம். அதுவும் கடன் வாங்குபவர்கள், கடன் தொகைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலங்களைத் தேர்வு செய்யலாம். அதன்படி 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது கூகுள் பே.

குறிப்பாக கடன் வாங்கிய தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தைப் பொறுத்து, மாதத்திற்கு ரூ.2,000 முதல் தொடங்கும் வகையில் EMIகள் உள்ளன. பின்பு கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இந்த செயலி தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறது, இதனால் கடன் வாங்குபவர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்கிறது.

மேலும் இந்த கூகுள் பே வழங்கும் தனிநபர் கடனுக்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதுடையவர்களாகவும், வேலைவாய்ப்பு அல்லது வணிகம் மூலம் வழக்கமான வருமான ஆதாரத்தைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் அந்த விண்ணப்பதாரர்கள் கூகுள் பே செயலியுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை கொண்டிருக்க வேண்டும்.

கூகுள் பே மூலம் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

வழிமுறை-1: முதலில் கூகுள் பே செயலியைத் திறக்கவும். அடுத்து Mange your Money என்பதைத் தேர்வு செய்யவும்.

வழிமுறை-2: அதன்பின்பு சிறிது ஸ்க்ரோல் செய்து Personal Loan எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அடுத்து
விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, வருமானம் போன் முக்கிய விவரங்களை நிரப்ப வேண்டும், பின்னர்
KYC ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் மற்றும் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட வேண்டும்.

வழிமுறை-3: அடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்டதும். கடன் தொகை நேரடியாக பயனரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you want to take out a personal loan through Google Pay? Here are some things to consider
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X