Home
News

உங்க வீட்டில் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸர் யூஸ் பண்ணுறீங்களா? இது தெரியாம ஆபத்தில் சிக்காதீர்.. கவனம் மக்களே..

குளிர் காலம் (Winter) துவங்கிவிட்டது, இந்தியாவின் பல இடங்களில் இப்போதே குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த குளிர் காலத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் கடக்க ஒவ்வொரு வீடுகளிலும் சூடு தண்ணீர் தேடப்படுகிறது. இதை சில நிமிடங்களில் உருவாக்க எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்கள் (water heater) மற்றும் கீஸர்களை (geyser) மக்கள் இப்போது அதிகமாக பயன்படுத்துகிறார்கள். என்ன தான் மக்கள் அதிகமாக எலக்ட்ரிக் கீச்சர்களை (electric geyser) பயன்படுத்தினாலும், இன்னும் பல இடங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களும், விபத்துகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

அதனால் தான், வாட்டர் ஹீட்டர் மற்றும் எலக்ட்ரிக் கீச்சர்களை எப்படி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை உங்களுக்கு இந்த பதிவின் மூலம் கற்றுத்தரப்போகிறோம். உங்கள் வீட்டில் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸர் போன்ற சாதனங்கள் இருக்கிறதென்றால், நீங்கள் எந்தெந்த செயல்களை செய்யவே கூடாது (What actions should you never do while using geyser), எந்தெந்த செயல்களை கவனமாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

உங்க வீட்டில் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸர் யூஸ் பண்ணுறீங்களா? கவனம்..

உங்க வீட்டில் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸர் யூஸ் பண்ணுறீங்களா? கவனம் மக்களே:

உங்கள் வீட்டில் (home) அல்லது ஹாஸ்டல் ரூம் (hostel room) அல்லது எந்தவிதமான இடமாக இருந்தாலும், நீங்கள் ஒரு கீஸர் சாதனத்தை பயன்படுத்த நேரிடும் பொழுது குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். அது என்ன என்பது கீழே..

1. உங்கள் வீட்டில் நம்பகமான ஒரு பிராண்டின் வாட்டர் ஹீட்டர் (branded water heater) அல்லது கீஸரை (branded geyser) வாங்கி பயன்படுத்துவது பாதுகாப்பானது.

2. மலிவான மற்றும் சான்றளிக்கப்படாத (avoid non certified geysers) எதோ ஒரு கீஸர் சாதனத்தை பயன்படுத்துவது ஆபத்தை நீங்களே வீட்டிற்குள் அழைப்பதற்கு சமம்.

3. நீண்ட நேரம் கீசர் பயன்படுத்தும் பழக்கத்தை உடனே கைவிடவும்.

4. நீண்ட நேரம் ஆன் (On) செய்யப்பட்டு அப்படியே ON இல் விடப்படும் கீசர்கள் சில நேரங்களில் வெடிப்பிற்கு (explosion) உண்டாகலாம்.

5. குளிக்கும் பொழுது உங்கள் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸர் சாதனத்தை ON இல் வைக்கவே கூடாது.

6. உங்களுக்கு தேவையான வெதுவெதுப்பான சூடு நீர் (hot water) கிடைத்தவுடன் கீஸரை OFF செய்வது பாதுகாப்பானது.

7. இது மின்சார பயன்பாட்டையும் (reduce electricity usage) குறைக்க உதவும்.

8. பாத்ரூமில் கீஸர் (bathroom geyser) இருப்பதனால், நீருடன் மின்சார கசிவு (electric leakage) எதுவும் ஏற்படாத வகையில் கீஸரை சரியான இடம் பார்த்து பொறுத்த வேண்டும்.

9. ஒவ்வொரு குளிர் காலம் துவங்கும் முன், கீஸரை சர்வீஸ் (water heater and geyser service) செய்வது அவசியம் மற்றும் பாதுகாப்பானது.

10. இதன் மூலம், கீஸரில் இருக்கும் கோளாறுகள் துவக்கநிலையில் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்ய வசதியாக இருக்கும்.

11. பழுதான, அல்லது சிறிய கோளாறு உடைய எலக்ட்ரிக் கீஸர் (repair electric geyser) மற்றும் வாட்டர் ஹீட்டர் சாதனங்களை பயன்படுத்தவே கூடாது.

12. இவை ஆபத்தானது (danger) மற்றும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எதிர்பாராத விபத்தை ஏற்படுத்த கூடியவையாகும்.

13. சர்வீஸ் செய்யும் பொழுது உங்கள் கீஸரில் இருந்து உருவாக்கப்படும் சூடு நீர் 45-50 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்குள் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய மறக்காதீர்கள்.

14. வீட்டில் குழந்தைகள் (childeren) இருக்கிறார்கள் என்றால், கீஸர் ON மற்றும் OFF செய்ய அவர்களை பயன்படுத்தாதீர்கள்.

15. ஈரமான கையுடன் கீஸர் பாடி (geyser body) அல்லது கீஸர் ஸ்விட்ச் (geyser switch) போன்றவற்றை தொடாதீர்கள்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் சூடான நீரை பாதுகாப்பாக பெறுவதுடன், விபத்து இல்லாத குளிர்காலத்தை நீங்கள் பாதுகாப்புடன் கடக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Do you use a water heater or geyser in your home? Attention people dont get in danger
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X