SIM கார்டு ரூல்ஸ்.. ஆதார்ல சிம் வாங்குன கஸ்டமர்கள்.. உடனே இதை செய்துடுங்க.. பழசு, புதுசு கணக்கு.. என்ன வருது?
ஆதார் கார்டு மூலம் சிம் கார்டு வங்கிய கஸ்டமர்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சிம் கார்டு விதிகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆதார் கார்டு மூலம் வாங்கப்படும் ஒவ்வொரு சிம் கார்டும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, இப்போது அதற்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய சிம் கார்டுகள் இப்போது, எங்களிடம் இல்லை என்று பலர் இந்த விதிகளை கவனிக்காமல் இருக்கின்றனர். இவர்கள் இதை செய்து முடிக்கவில்லை என்றால், வரும் நாட்களில் அவ்வளவுதான். இதுகுறித்த விவரம் இதோ.
இப்போதெல்லாம் அத்தியவசிய தேவைப்போல மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கூட சிம் கார்டு இல்லையென்றால், இன்டர்நெட் தொடர்பான சேவைகள் மட்டுமல்லாமல், வங்கி சேவை, மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை கூட பெற்றுவிட முடியாது. ஆகவே, சிம் கார்டுகள் (SIM Cards) தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டன. ஆனால், அது தொடர்பான விதிகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

சிம் கார்டுகள் வாங்கிவிட்டால் போதும், ரீசார்ஜ் செய்தால் பயன்படுத்தலாம், இல்லையென்றால் அப்படியே வைத்துவிடலாம் என்று பல கஸ்டமர்கள் இருக்கின்றனர். இப்படி பல சிம் கார்டுகளை பயன்படுத்துவது, புதுப்புது நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்குவது நம்மில் பலருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இப்படி கணக்கில்லாமல் சிம் கார்டு வாங்கியவர்களுக்கு இப்போது கதிகலங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதம் அமல் செய்யப்பட்ட தொலைத்தொடர்புத் துறையின் சிம் கார்டு விதிகளின்படி (SIM Card Rules) ஒருவர் 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால், முதல் முறை ரூ.50000 அபதாரம் விதிக்கப்படும். இதன் பிறகும் சிம் கார்டுகள் வாங்கினால், ரூ.200000-ஆக அபராதம் அதிகரிக்கப்படும். இப்படி புதிய சிம் கார்டு விதிகள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும், இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல், பழைய சிம் கார்டுகளை ரீசார்ஜ் செய்யவில்லை. அது அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு பலர் இருக்கின்றனர். இவர்கள் முதலில் தங்களது ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் (Multiple SIM Card Under Aadhaar Card) இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்வரும்படிகளை பின்பற்றுங்கள்.
எப்படி செக் செய்வது? மத்திய தொலைத்தொடர்பு துறையின் சஞ்சார் சாதி (Sanchar Saathi) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். முகப்பு பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள். இப்போது, சிட்டிசன் சென்டரிங் சர்வீசஸ் (Citizen Centric Services) தலைப்பின் கீழ் பல்வேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் மொபைல் இணைப்பை அறிக (Know Your Mobile Connection) ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
இப்போது, உங்களது 10 இலக்க மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதோடு கேப்ச்சா கோட் வெரிபிகேஷன் இருக்கும். இதை முடித்துவிட்டால், உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டும். இந்த ஓடிபியை கொடுத்தால், அடுத்த பக்கம் தோன்றும். அதில் உங்களது ஆதாரில் எத்தனை நம்பர் இணைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றின் முழு பட்டியல் தோன்றும்.
இதில் நீங்கள் பயன்படுத்ததாத சிம் கார்டு எண் இருந்தால், தேவையில்லை (Not Required) என்னும் ரிக்குவஸ்ட் கொடுத்துவிடுங்கள். அதேபோல உங்களுக்கு தெரியாத நம்பர் இணைக்கப்பட்டிருந்தால், இது என்னுடை நம்பர் இல்லை (Not My Number) என்னும் ரிக்குவஸ்ட் கொடுக்க வேண்டும். இந்த 2 ஆப்ஷன்களுக்கு அடுத்தப்படியான தேவை (Required) என்னும் ஆப்ஷனும் இடம் பெற்றிருக்கும்.
இதை நீங்கள் பயன்படுத்தும் எண் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்பதற்காக கொடுக்க வேண்டிய ரிக்குவஸ்ட் ஆப்ஷனாகும். இதில் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருந்தால் அதில் தேவையில்லாதவற்றை மேற்கூறிய ஆப்ஷனை பயன்படுத்தி குறைத்து விடுங்கள். இல்லையென்றால், வரும் நாட்களில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications