புது ரூல்ஸ்.. அக்.1-க்கு அப்புறம்.. ரூ.125 கட்டணம்.. ஓல்டு முடிஞ்சு.. புது Aadhaar சார்ஜ்.. எவ்வளவு வருது?
ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர இருப்பதாக தெரிகிறது. ஆதார் சென்டர்களுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தே மொபைல் நம்பர், பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யும்படி ஆதார் ஆப் கொண்டுவரப்பட இருக்கிறது. இதனாலேயே இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும், யுஐடிஏஐ (UIDAI) என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது என்ன சொல்கிறது?
ஆதார் கட்டணத்தை பொறுத்தவரை பயோமெட்ரிக் அப்டேட் (Biometric Update), டீமேகிராபிக் அப்டேட் (Demographic Update) மற்றும் டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) மூன்றாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயோமெட்ரிக்கில் உங்களது போட்டோ (Photo), ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprint) மற்றும் கருவிழிகள் (Iris) போன்ற அப்டேட்டை செய்து கொள்ளலாம்.

அதேபோல டீமேகிராபிக் அப்டேட்டில் உங்களது பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் போன்ற அடையாளங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். டாக்குமெண்ட் அப்டேட் வழக்கம்போல உங்களது அடையாளங்களுக்கான டாக்குமெண்ட்களை அப்டேட் செய்யும் சேவையை கொடுக்கிறது. இதற்கு கட்டணங்கள் இருக்கின்றன.
ஆகவே, பிங்கர்பிரிண்ட், போட்டோ போன்றவற்றில் அப்டேட் செய்ய வேண்டுமானால், ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆதார் சென்டர்களில் மட்டுமே செய்ய முடியும். ஆனால், 5 முதல் 7 வரையில் வயதுடையவர்களுக்கு இது இலவசமாக அப்டேட் செய்து கொடுக்கப்படுகிறது. அதேபோல 15 முதல் 17 வரையில் வயதுடையவர்களுக்கு இலசமாக அப்டேட் செய்யப்படுகிறது.
ஏனென்றால், இந்த இலவச அப்டேட் 7 வயதுக்கு பிறகு 15 வயதில் பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்பட வேண்டும். இதனாலேயே இந்த சேவை இலவசமாக கொடுக்கப்படுகிறது. அடுத்து மொபைல் நம்பர், பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றில் அப்டேட் செய்ய ரூ.50 கட்டணமாக இருக்கிறது. இதை பயோமெட்ரிக் அப்டேட்டின் போதே செய்தால், ரூ.100 மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.
ஆகவே, தனியாக அப்டேட் செய்யும்போது, ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த பயோமெட்ரிக் மற்றும் டீமேகிராபிக் அப்டேட்கள் ஆதார் சென்டர்களில் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால், டாக்குமெண்ட் அப்டேட்டை பொறுத்தவரையில், ஆதார் சென்டர் மட்டுமல்லாமல், மொபைல் அல்லது லேப்டாப் மூலம் ஆதார் கார்டு வைத்திருப்பவர்களே செய்யலாம்.
ஆதார் வெப்சைட் மூலம் இதை செய்து கொள்ளலாம். உங்களது அடையாளங்களை உறுதிப்படுத்த அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும். இதில் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை போன்ற ஆவணங்கள் ஏற்றக்கொள்ளப்படுகின்றன. இந்த கட்டணங்கள் மட்டும் அப்டேட் முறைகளே இப்போது நடைமுறையில் இருக்கின்றன.
இந்த கட்டணங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் உயர இருப்பதாக தெரிகிறது. ஆகவே, பயோமெட்ரிக் அப்டேட் கட்டணம் ரூ.100 விலையில் இருந்து ரூ.125ஆக உயருகிறது. அதேபோல டீமேகிராபிக் அப்டேட் ரூ.50 விலையில் இருந்து ரூ.75ஆக உயருகிறது. இப்படி தகவல்கள் வருகின்றன. ஆதார் ஆப் ஓரிரு மாதங்களில் வெளியாக இருப்பதால், இது கவனம் பெற்றுள்ளது.
ஏனென்றால், ஆதார் ஆப் மூலம் மொபைல் மூலமே பெயர், முகவரி, மொபைல் நம்பர், ஈமெயில் போன்றவற்றை அப்டேட் செய்யும் சேவை கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கான வெரிபிகேஷன்களை அதிகமாக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவெடுத்துள்ளது. ஆகவே, மொபைலில் கிடைக்க இருப்பதால், கட்டணம் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், அது ஆதார் ஆப் வந்த பிறகே உயர வாய்ப்புள்ளது. இப்போது, உயருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஏனென்றால், அக்டோபர் 1ஆம் தேதி நெருங்கிவிட்டது. ஆனால், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது எந்தவொரு கட்டண உயர்வையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அக்டோபர் 29ஆம் தேதி ஆனது 16ஆவது ஆதார் நாளாக இருக்கிறது. இதில் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications