ஆதார் அட்டை உடன் புதிய மொபைல் நம்பரை இணைக்க வேண்டுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

|

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் அட்டை என்பது இன்றைய சூழ்நிலையில், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தேவைப்படும் ஒரு மிக முக்கியமான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்த அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் என்ற அடையாளம் மிக முக்கியமானது. இப்படி முக்கியமான ஆவணத்தை எப்போதும் அப்டேட்டில் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம்.

உங்கள் ஆதார் எண்ணில் மாற்றம் செய்ய முடியாது.. ஆனால் இவற்றை மாற்றலாம்

உங்கள் ஆதார் எண்ணில் மாற்றம் செய்ய முடியாது.. ஆனால் இவற்றை மாற்றலாம்

இந்த தகவல் எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆனால், இந்த ஆவணத்தில் உள்ள தகவல்களை நீங்கள் ஏன் எப்போதும் அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் ஆடையில் உள்ள ஆதார் எண் நிரந்தரமானது, அதில் உங்களால் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவோ அல்லது மாற்றம் செய்ய வலியுறுத்தவோ உங்களால் முடியாது. இந்த எண் இறுதி வரை நிலையானது. ஆனால், சில ஆதார் அட்டை பயனர்களின் முகவரி, புகைப்படம், முக்கியமாக மொபைல் எண் போன்ற தகவலை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆதார் அட்டையில் தொடர்ந்து மாற்றம் செய்யப்படும் இரண்டு விஷயங்கள் இவை தான்

ஆதார் அட்டையில் தொடர்ந்து மாற்றம் செய்யப்படும் இரண்டு விஷயங்கள் இவை தான்

குறிப்பாக வாடகை வீட்டில் வசிக்கும் ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டை மாற்றம் செய்யும் போது, அவர்களின் எதிர்கால தேவைக்காக அவர்களுடைய ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இது பெரும்பாலும் குறைந்தளவில் மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வாக இருக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை பயனர்களின் மொபைல் எண்கள் தான் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆதார் பதிவு செய்யும் நேரத்தில் வழங்கப்பட்ட பழைய மொபைல் எண்களை இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.

ஆதார் மொபைல் எண்களை மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஆதார் மொபைல் எண்களை மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

மக்களின் தேவையை அறிந்த ஆதார் ஆணையம், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. இதை நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து மாற்றலாம். அல்லது, எளிமையாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக உங்களுடைய மொபைல் எண் மாற்றத்திற்காக விண்ணப்பிக்கவும் வழி உள்ளது. சரி, இப்போது எப்படி உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள பழைய மொபைல் எண்ணை புதிய மொபைல் எண்ணிற்கு மாற்றம் செய்வது என்று பார்க்கலாம்.

மொபைல் எண் மாற்றத்திற்கான அனுமதி விண்ணப்பத்தை ஆன்லைனில் பெறலாமா?

மொபைல் எண் மாற்றத்திற்கான அனுமதி விண்ணப்பத்தை ஆன்லைனில் பெறலாமா?

முன்பே சொன்னது போல, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்ய நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால், இதற்கான அனுமதி விண்ணப்பத்தை நீங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம். அதாவது, நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் சென்று மொபைல் எண்ணை மாற்றம் செய்வதற்கான நேரடி அனுமதியை முன்கூட்டியே முன்பதிவு செய்து நேரில் சென்று, காத்திருக்காமல் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறைகள்

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறைகள்

 • முதலில் https://uidai.gov.in இல் உள்ள அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் சந்திப்பு போர்ட்டலுக்குச் செல்லவும்.
 • அல்லது URL பெட்டியில் https://appointments.uidai.gov.in/bookappointment.aspx என்ற URL ஐ உள்ளிடவும்.
 • உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, ஆதார் சேவா கேந்திராவில் 'அபாயின்ட்மென்ட்டை முன்பதிவு செய்' என்பதை கிளிக் செய்யவும்.
 • ஆதார் புதுப்பிப்பு / திருத்தம் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து விவரங்களை உள்ளிடவும்.
 • எப்போது உங்கள் மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்?

  எப்போது உங்கள் மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்?

  • சந்திப்பு நேரத்தில் உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் ஆதார் நிர்வாகியிடம் படிவத்தை வழங்கவும்.
  • ஆதார் அட்டை மொபைல் எண் மாற்றும் சேவைக்குப் பணம் செலுத்துங்கள்.
  • நிர்வாகத்திடம் இருந்து URN உடன் ஒப்புகை சீட்டைப் பெறுவீர்கள்.
  • மொபைல் எண் மாற்றக் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்க URN ஐப் பயன்படுத்தவும்.
  • உங்கள் மொபைல் எண் 3 மாதங்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
  • ஆன்லைனில் புதிய மொபைல் நம்பரை இணைப்பதற்கான வழிமுறை

   ஆன்லைனில் புதிய மொபைல் நம்பரை இணைப்பதற்கான வழிமுறை

   • உங்கள் ஆதார் கார்டுடன் புதிய மொபைல் நம்பரை இணைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
   • முதலாவதாக UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ask.uidai.gov.in என்ற லிங்கில் உள்நுழைய வேண்டும்.
   • இப்போது தங்களின் மொபைல் எண்ணை உள்ளிட்டு கணக்கிற்குள் உள் நுழைய வேண்டும்.
   • இதையடுத்து ஆன்லைன் ஆதார் சர்வீஸ் பிரிவில் இருந்து "மொபைல் நம்பர்" விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
   • இப்போது தங்களின் ஆதார் பெயர் மற்றும் ஆதார் எண் விபரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
   • Edit விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்

    Edit விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்

    • பின்னர் கீழே வழங்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டைச் சரியாக நிரப்ப வேண்டும்.
    • இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தில் மொபைல் எண் அருகில் உள்ள edit விருப்பத்தை கிளிக் செய்து, உங்களின் புதிய எண்ணை உள்ளிடவும்.
    • நீங்கள் உள்ளிட்ட புதிய போன் நம்பருக்கு OTP எண் அனுப்பப்படும்.
    • அதனை அந்த தளத்தில் கொடுத்த பிறகு 'சேவ் அண்ட் ப்ரொசீட்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
    • அவ்வளவு தான் உங்கள் புதிய எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Do You Need To Link New Mobile Number With Your Aadhaar Card Follow These Simple Steps : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X