புதுசா வருது.. இனி கிரெடிட் கார்டு இல்ல.. விர்ச்சுவல் கார்டுதான்.. ஆப் மூலம் பரிவர்த்தனை.. என்னென்ன மாறும்?
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் காலம்காலமாக பயன்படுத்திய முறை ஒட்டுமொத்தமாக மாறும்படியாக விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் களமிறங்கி இருக்கின்றன. யுபிஐ ஆப் மூலம் கையில் கார்டு இல்லாமலேயே இனி பணப்பரிவர்த்தனைகள் நடக்கப்போகின்றன. இந்த விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் முக்கிய வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அமலுக்குவருகிறது.
கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவத்தனைகள் செய்வது, இப்போது முற்றிலும் மாறிவிட்டது. யுபிஐ ஆப்களில் (UPI Apps) உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து இணைத்துவிட்டால் போதும், டிஜிட்டல் முறையிலேயே பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடிகிறது. இதனால், கையில் கார்டுகள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது கிடையாது.

ஆகவே, கிரெடிட் கார்டுகளை விர்ச்சுவலாக கொடுக்க வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இப்போது, அது நடைமுறைக்கும் வரப்போகிறது. முதலில் யெஸ் வங்கி வாடிக்கையாளர்களில் இருந்து இந்த விர்ச்சுவல் கிரெடிட் கார்டு (Virtual Credit Card) சேவை தொடங்கி இருக்கிறது.
இதற்காக ஏஎன்கியூ (ANQ) நிறுவனத்துடன் யெஸ் வங்கி கைகோர்த்துள்ளது. யெஸ் வங்கி ஏஎன்கியூ பிஐ கிரெடிட் கார்டு (YES Bank ANQ Pi Credit Card) மற்றும் யெஸ் வங்கி ஏஎன்கியூ பிஎச்ஐ கிரெடிட் கார்டு (YES Bank ANQ Phi Credit Card) என்று 2 புதிய கிரெடிட் கார்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில் பிஐ கார்டானது, ரூபே கார்டு (RuPay Card) சேவைகளையும், பிஎச்ஐ கார்டானது, மாஸ்டர்கார்டு (Mastercard) சேவைகளையும் கொடுக்க இருக்கின்றன. முன்னதாக கிரெடிட் கார்டு பரிவர்த்தனையின் போது, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ரிவார்ட் பாயிண்ட்கள் (Reward Points) இந்த விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகளுக்கும் கொடுக்கப்படுகின்றன.
யெஸ் வங்கி ஏஎன்கியூ பிஐ கிரெடிட் கார்டு எப்படி? இது விர்ச்சுவல் ரூபே கிரெடிட் கார்டு (Virtual RuPay Credit Card) சேவைகளை வழங்கும். கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் இந்த கார்டை பயன்படுத்தலாம். ரூ.200-க்கு மேல் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 8 ரிவார்டு பாயிண்ட்கள் பெற்று கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் 2 ரிவார்டு பாயிண்ட்கள் கொடுக்கப்படும். மொத்தமாக மாதத்துக்கு 5000 ரிவார்டு பாயிண்ட்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விர்ச்சுவல் ரூபே கிரிடெட் கார்டை பெறுவதற்கோ அல்லது பராமரிப்புக்கான வருடாந்திர கட்டணத்தையோ (Annual Fee) செலுத்த வேண்டியது கிடையாது.
யெஸ் வங்கி ஏஎன்கியூ பிஎச்ஐ கிரெடிட் கார்டு எப்படி? இந்த கிரெடிட் கார்டு மாஸ்டர்கார்டு நெட்வொர்க் (Mastercard Network) மூலம் சேவைகளை வழங்குகிறது. இந்த கார்டை பயன்படுத்தி சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மளிகை பொருட்களை வாங்கும்போது, ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்கும்.
அதாவது, ரூ.200 அல்லது அதற்கும் மேலான பரிவர்த்தனைக்கு 24 ரிவார்டு பாயிண்ட்கள் கொடுக்கப்படுகிறது. அதேபோல விமானங்கள் மற்றும் ஹோட்டல்கள் முன்பதிவின் போதும், ரூ.200 மதிப்பிலான பரிவர்த்தனைக்கும் 24 ரிவார்டு பாயிண்ட்கள் வழங்கப்படுகிறது. இதர பரிவர்த்தனைகளுக்கு 2 ரிவார்ட் பாயிண்ட்கள் கொடுக்கப்படுகிறது.
முந்தைய ஏஎன்கியூ பிஐ கிரெடிட் கார்டை போலல்லாமல், இந்த கார்டுக்கு மாதாந்திர ரிவார்டு பாயிண்ட்கள் வரையறை கிடையாது. எவ்வளவு பாயிண்ட்கள் வேண்டுமானாலும், வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல இந்த கார்டுக்கும் சேவை கட்டணம், பராமரிப்பு கட்டணம் என்று எதுவும் வசூலிக்கப்படாது. வரும் நாட்களில் மற்ற வங்கிகளிலும் இந்த சேவை வரலாம்.


Click it and Unblock the Notifications








