டிரம்ப் பதவியேற்பு விழா.. சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் பயன்படுத்தி வரும் போன்களை பாருங்களேன்! எந்த மாடல்?
சமீபத்தில் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். குறிப்பாக பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களோடு அவர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் (Sundar Pichai), டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (Elon Musk) ஆகிய இருவரும் விழா நடக்கும் வேளையில் சீரியஸாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வந்தது மட்டும் அல்லாமல் இருவரும் பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் எலான் மஸ்க் மற்றும் சுந்தர் பிச்சை கையில் என்ன ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தற்போது அதிக வைரலாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது தற்போது பட்ஜெட் விலை போன்களை விட ப்ரீமியம் போன்களை வாங்கத் தான் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதாவது ப்ரீமியம் போன்கள் மேம்பட்ட புதிய அம்சங்கள் மற்றும் தரமான கேமரா வசதி மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் வசதியுடன் வருகின்றன. எனவே அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு மக்கள் இந்த ப்ரீமியம் போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் தங்களது போன்களை பயன்படுத்துவதில் பிஸியாக இருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.
அதன்படி எலான் மஸ்க் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ (Apple iPhone 16 Pro) ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார். குறிப்பாக இது ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மையான ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஐபோன் தற்போது ரூ.1,12,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மேம்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 16 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் எலான் மஸ்க் போல் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துவதில்லை. அதாவது அவர் தனது சொந்த நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார். அதுவும் அதிநவீன கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL) ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார் சுந்தர் பிச்சை. குறிப்பாக இந்த கூகுள் பிக்சல் போன் ஆனது மேம்பட்ட ஏஐ அம்சங்களைக் கொண்டுள்ளது.
குறிப்பாக கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,24,999-ஆக உள்ளது. 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 42எம்பி செல்பி கேமரா, 5060எம்ஏஎச் பேட்டரி, 6.8-இன்ச் டிஸ்பிளே, கூகுள் டென்சர் ஜி4 பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சொந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் நிலையில், எலான் மஸ்க் ஆப்பிள் நிறுவன்தின் போனை பயன்படுத்து வருகிறார். ஆனாலும் மஸ்க் விரைவில் சொந்த பிராண்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அதை விளம்பரப்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் சமீபத்தில் 2025-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பணியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அதுவும் 2025-ல் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி (Gemini) ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த புதிய ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு.
கடந்த சில மாதங்களாகப் பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு அதிக வரவேற்பு உள்ளது. இருப்பினும் 2025-ல் இடைவெளியைச் சரி செய்வதற்கும், முதலிடத்தைத் தக்க வைப்பதற்கும் சில வேலைகளை நாம் செய்து முடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








