Home
News

Ookla நடத்திய ஸ்பீட் டெஸ்ட்.. 204Mbps-ல் டவுன்லோட்.. பிச்சிக்கிட்டு பறந்த இன்டர்நெட்! நம்ம ஊரும் தான் இருக்கே?

தற்போது உலகில் எந்த ஒரு மூலையில் இருக்கும் ஒருவரிடம் நினைத்த நேரத்தில் தொடர்பு கொண்டு பேசலாம். அதுவும் நேரில் பேசுவது மாதிரியே பேசலாம். இதற்கு மிகவும் உதவியாக இருப்பது இன்டர்நெட் தான். குறிப்பாக இன்டர்நெட் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் புதிய புதிய தொழில்நுட்பங்கள் கூட வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உலக அளவில் இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed)-இல் முதலிடம் பிடித்தது எந்த நாடு என்பது தெரியவந்துள்ளது. இப்போது இந்த தகவலைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஒரு காலத்தில் வெறும் மணல் குவியலாக இருந்த நகரம் தான் தற்போது டெக்னாலஜியில் பல உலக நாடுகளுக்குச் சாவல் விட்டுக் கொண்டிருக்கிறது.

Ookla ஸ்பீட் டெஸ்ட்.. 204Mbps-ல் டவுன்லோட்.. நம்ம ஊரும் தான் இருக்கே?

அதாவது டெக்னாலஜியில் பல உலக நாடுகளுக்குச் சாவல் விட்டு கொண்டிருப்பது அமீரகம் தான். குறிப்பாக அமீரகம் பல அர்ப்பணிப்புகளைத் தினந்தோறும் அளித்துவருகிறது. குறிப்பாக பல்வேறு வகையான சாதனையை நிகழ்த்தி வரும் அமீரகம் தற்போது மீண்டு ஒரு அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதாவது Ookla என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் நடந்த கணக்கெடுப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை பின்னுக்குத் தள்ளி இணையதள ஸ்பீடில் (இன்டர்நெட் ஸ்பீட்-இல்) அமீரகம் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமீரகத்தைப் பொருத்தவரை இந்த முதல் இடத்தை பிடிக்கக் காரணமாக இருந்தது, அங்கு உள்ள இன்டர்நெட் மூலம் கிடைக்கும் டவுன்லோட் ஸ்பீட் தான்.

அமீரகத்தில் டவுன்லோட் ஸ்பீட் 204.24 Mbps ஆகவும் அப்லோட் ஸ்பீட் சுமார் 22.72 Mbpsம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Ookla நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே மற்றும் ஜூன் மாதங்களில் அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது. பின்பு கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் இரண்டாம் இடம் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவில் Fixed Broadband ஸ்பீட் பொருத்தவரை சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் வேகம் சுமார் 247.29 Mbps ஆகும். பின்பு Fixed Broadband ஸ்பீடில் அமீரகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமீரகத்தில் Fixed Broadband வேகம் 239.2 Mbps ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவில் இன்டர்நெட் வேகம் ஓரளவுக்குத் தான் கிடைக்கிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கி ஓரளவு இணைய வேகத்தைத் தான் கொடுக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ஜியோ நிறுவனம்.

Ookla ஸ்பீட் டெஸ்ட்.. 204Mbps-ல் டவுன்லோட்.. நம்ம ஊரும் தான் இருக்கே?

ஆனாலும் ஜியோ நிறுவனம் அதிவேக இணையச் சேவையை வழங்குவதில்லை என வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பின்பு ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கவிட்டாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு தான் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know which country ranks first in internet speed? What speed? Here is full details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X