உங்கள் PAN கார்டில் உள்ள 10 இலக்க எண் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

|

ஒவ்வொரு பான் கார்டும், அந்த அட்டைதாரரைப் பற்றிய தகவலை உங்களுக்குச் சொல்கிறது என்று நாங்கள் சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள், அது தான் உண்மை. உங்களிடம் இருக்கும் பான் கார்டில் உள்ள 10 இலக்க எண்- எழுத்துக்களை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்த 10 இலக்க எண் வரிசை வெறும் உங்கள் பான் முகவரியைக் குறிக்கும் சாதாரண எண்கள் என்று தவறாகக் கருதிவிடாதீர்கள். உங்கள் பான் அட்டையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் உங்களைப் பற்றிய முக்கிய தகவலைக் குறிக்கிறது. இந்த விஷயம் தெரிந்தால், உங்கள் பான் எண்ணின் பின்னணியில் உள்ள அர்த்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

PAN அட்டையில் உள்ள 10 இலக்க எண்களை டிகோட் செய்வது எப்படி?

PAN அட்டையில் உள்ள 10 இலக்க எண்களை டிகோட் செய்வது எப்படி?

நம்மில் பலர் நம்முடைய நிரந்தர கணக்கு எண்களை (PAN) மனப்பாடம் செய்திருந்தாலும், அதற்குப் பின்னணியில் உள்ள அர்த்தம் பற்றி அறிந்திருக்கமாட்டோம். PAN அட்டையில் உள்ள 10 இலக்க எண்ணெழுத்து எண்ணுக்குப் பின்னால் உள்ள பேட்டர்னை டிகோட் செய்வது எப்படி என்று இன்னும் பலருக்குத் தெரியாது. இந்த எண் பான் அட்டைதாரரைப் பற்றிய சில முக்கிய தகவல்களைக் கொண்ட ஒரு குறியீட்டைத் தவிர வேறு எதையும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், இவை எதிர்ச்சியாக உங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

பான் எண்கள் சாதாரண எண்கள் போல் உருவாக்கப்படுவதில்லை

பான் எண்கள் சாதாரண எண்கள் போல் உருவாக்கப்படுவதில்லை

யுடிஐ மற்றும் என்எஸ்டிஎல் மூலம் பான் கார்டுகளை வழங்கும் வருமான வரித்துறை, பான் எண்ணுக்கு அர்த்தமுள்ள ஒரு பெயரிடும் முறையைப் பின்பற்றியுள்ளது. உங்கள் மொபைல் எண்ணைப் போல் எதிர்ச்சியாக இவை உருவாக்கப்படவில்லை. அதேபோல், PAN எண் ஆனது கணினியால் சீரற்ற முறையில் உருவாக்கப்படுவதில்லை. இது முற்றிலும் அட்டைதாரரின் தகவலின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இதனால் தான், வருமான வரித்துறையினருக்கு ஒரு PAN அட்டை அதன் பயனர் பற்றிய முழு தகவலையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

உங்கள் பான் அட்டையின் எண்கள் இந்த வரிசையில் தான் அமைக்கப்படுகிறதா?

உங்கள் பான் அட்டையின் எண்கள் இந்த வரிசையில் தான் அமைக்கப்படுகிறதா?

ஒவ்வொரு PAN எண்ணும் எழுத்துக்கள் மற்றும் எழுத்துக்களின் நிலையான கலவையில் 10 இலக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள முதல் 5 எழுத்துகள் எப்பொழுதும் எழுத்துக்களாக இருக்கும். அதைத் தொடர்ந்து வரும் அடுத்த 4 எண் இலக்கங்கள் மற்றும் மீண்டும் ஒரு எழுத்துடன் உங்கள் பான் அட்டையின் முழுமையான அடையாள எண் முடிவடையும். இதை நாம் அனைவரும் நிச்சயமாகக் கவனித்திருப்போம். ஆதார் அட்டையில் உள்ள எண் எப்படி ஒரு முறை உருவாக்கப்பட்டுவிட்டால் அதை மாற்றம் செய்ய முடியாதோ,

வித்தியாசத்தைக் கண்டறிய இதை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்

வித்தியாசத்தைக் கண்டறிய இதை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்

அதேபோல் தான் உங்களுடைய PAN எண்ணும் ஒரு முறை உருவாக்கப்பட்டுவிட்டால் அதில் மாற்றம் செய்ய முடியாது. சரி, உங்கள் பான் அட்டை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். சில பான் அட்டைதாரர்களின் PAN இல் 'O' என்ற எழுத்து அல்லது '0' (பூஜ்ஜியம்) என்ற எழுத்து இருந்தால், அது இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறியப் பயனர்களுக்குக் குழப்பம் ஏற்படுவது வழக்கம். PAN அட்டையில் உள்ள எண் மற்றும் இலக்கங்களை அமைக்கும் முறையைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் இந்த குழப்பத்தை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.

ஜியோவை விட அதிக பயன் வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.. இரவு முழுக்க இலவச டேட்டா.. ஆனால்?ஜியோவை விட அதிக பயன் வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.. இரவு முழுக்க இலவச டேட்டா.. ஆனால்?

நீங்கள் யார் என்பதை பான் கார்டின் நான்காவது எழுத்து சொல்கிறதா?

நீங்கள் யார் என்பதை பான் கார்டின் நான்காவது எழுத்து சொல்கிறதா?

  • உங்கள் PAN அட்டையில் உள்ள முதல் ஐந்து எழுத்துக்களில், முதல் மூன்று எழுத்துகள் AAA இலிருந்து ZZZ வரை இயங்கும் அகரவரிசைத் தொடரைக் குறிக்கின்றன.
  • வருமான வரித்துறையின் பார்வையில் நீங்கள் யார் என்பதை பான் கார்டின் நான்காவது எழுத்து சொல்கிறது.
  • அனைத்து தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கும், நான்காவது எழுத்து "P" ஆகும்.
  • உங்கள் பான் அட்டையில் உள்ள "P" என்ற எழுத்து ஒரு தனி நபரைக் குறிக்கிறது.
  • இந்த எழுத்துக்கள் எல்லாம் உங்கள் PAN அட்டையிலிருந்தால் இது தான் அர்த்தம்

    இந்த எழுத்துக்கள் எல்லாம் உங்கள் PAN அட்டையிலிருந்தால் இது தான் அர்த்தம்

    • அதேபோல், உங்கள் பான் அட்டையில் இந்த மாற்ற எழுத்துக்கள் காணப்பட்டால், அதற்கு என்ன பொருள் என்பதை இப்போது பார்க்கலாம்.
    • "C" என்பது நிறுவனத்தை (Company) குறிக்கிறது
    • "H" என்பது இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF - Hindu Undivided Family) என்பதை குறிக்கிறது.
    • "A" என்பது நபர்கள் சங்கம் (AOP - Association of Persons) என்பதை குறிக்கிறது.
    • "B" என்பது தனிநபர்களின் உடல் (BOI - Body of Individuals) என்பதை குறிக்கிறது.
    • LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..

      G, J, L, S, F, T என்று உங்கள் PAN அட்டையில் எழுத்துக்கள் இருந்தால் இது தான் அர்த்தம்

      G, J, L, S, F, T என்று உங்கள் PAN அட்டையில் எழுத்துக்கள் இருந்தால் இது தான் அர்த்தம்

      • "G" என்பது அரசு நிறுவனம் (Government Agency) என்பதைக் குறிக்கிறது.
      • "J" என்பது செயற்கை ஜூரிடிகல் நபரைக் (Artificial Juridical Person) குறிக்கிறது
      • "L" என்பது உள்ளூர் நிர்வாகத்தை (Local Authority) குறிக்கிறது.
      • "S" என்பது உள்ளூர் அதிகார சபையைக் குறிக்கிறது
      • "F" என்பது நிறுவனம்/ வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டுறவைக் (Firm/ Limited Liability Partnership) குறிக்கிறது
      • "T" என்பது டிரஸ்ட்டை (Trust) குறிக்கிறது
      • உங்கள் குடும்பப்பெயரின் தகவலைக் குறிக்கும் PAN விபரம்

        உங்கள் குடும்பப்பெயரின் தகவலைக் குறிக்கும் PAN விபரம்

        உங்கள் PAN இன் ஐந்தாவது எழுத்து உங்கள் குடும்பப்பெயரின் முதல் எழுத்தைக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, உங்களின் கடைசிப் பெயர் அல்லது குடும்பப்பெயர் சிங் என்றால் ஐந்தாவது எழுத்து "S" ஆக இருக்கும். தனிநபர் அல்லாத பான் கார்டு வைத்திருப்பவர்களில், ஐந்தாவது எழுத்து பான் வைத்திருப்பவரின் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கிறது.

        World Earth Day 2022: ச்ச! எப்படி இருந்த பூமி இப்படி ஆகிடுச்சு.. கூகிள் டூடுல் சொல்லும் முக்கியமான விஷயம்..World Earth Day 2022: ச்ச! எப்படி இருந்த பூமி இப்படி ஆகிடுச்சு.. கூகிள் டூடுல் சொல்லும் முக்கியமான விஷயம்..

        எப்போதும் PAN எண்ணின் இறுதி எழுத்து எழுத்துக்களாகவே இருக்கும்

        எப்போதும் PAN எண்ணின் இறுதி எழுத்து எழுத்துக்களாகவே இருக்கும்

        • அடுத்த நான்கு எழுத்துகள் 0001 முதல் 9999 வரை இயங்கும் வரிசை எண்களாகும்.
        • உங்கள் PAN இன் கடைசி எழுத்து எப்போதும் எழுத்துக்களாகவே இருக்கும்.
        • இந்த பெயரிடும் முறைப்படி தான், ஒவ்வொரு தனி நபரின் PAN அட்டை எண்களும் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு எண்ணெழுத்தும் அதற்கான தனித்தனி அர்த்தத்துடன் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. PAN எழுத்துக்களில் வரிசைப்படுத்தப்படுவதன் பின்னணியில் உள்ள தர்க்கத்தைப் புரிந்துகொள்வது உங்கள் PAN எண்ணை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

Best Mobiles in India

English summary
Do You Know What Your PAN Card 10 Digit Number Tells About You : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X