Google Pay, PhonePe-க்கு குறி.. ரூ.100 அனுப்ப கூட இதை பண்ணாதீங்க.. ஓடிபி.. கியூஆர் கோட்.. UPI-க்கு சிரமமாகும்!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytn) போன்ற எந்தவொரு யுபிஐ ஆப்களை (UPI Apps) நீங்கள் பயன்படுத்தினாலும், இந்த விஷயங்களை மட்டும் இனிமேல் செய்துவிடாதீர்கள். ஓடிபி, கியூஆர் கோட் மூலம் ரூ.100 பரிவர்த்தனை செய்யும்போது கூட இதை கட்டாயம் பின்பற்றுங்கள். இல்லையென்றால், உங்களது பரிவர்த்தனை சிரமத்தில் முடிந்துவிடும். இதனால் பதற்றம் அடைய தேவையில்லை. யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகள் செய்ய நேரிடும்போது, எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு போதுமானது.
இப்போதெல்லாமல், பணத்தை கையில் கொடுக்க வேண்டி அவசியம் கிடையாது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் நொடியில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். ஆனால், பேங்க் கஸ்டமர்கள் புதிதாக யுபிஐ ஆப்களை பயன்படுத்தும்போது, அதில் ஏற்படும் மோசடிகளுக்கு ஆளாகி பணத்தை இழக்கின்றனர். வெறும் ரூ.100 பரிவர்த்தனை செய்தால்கூட அதில் கவனம் வேண்டும்.

அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும் யூசர்கள் பின்வரும் சம்பவங்கள் உங்களுக்கு நடந்தால், அதை தவிர்த்துவிடுங்கள். யுபிஐ பரிவர்த்தனையில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படும்போது, ஆன்லைன் புகார் அளிப்பீர்கள் அல்லது கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொள்வீர்கள். இப்படிப்பட்ட யூசர்களை மோசடி கும்பல் கண்டறிந்து அவர்களுக்கு லிங்குகளை அனுப்புகின்றன.
சில விவரங்களை பதிவு செய்ய சொல்கின்றன. இதை யூசர்கள் செய்யும்போது, அவர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. இதை ஃபிஷிங் லிங்குகள் என்று சொல்வார்கள். இதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த லிங்குகளிலும் உங்களது மொபைல் நம்பர், டெபிட் கார்டு நம்பர், பின் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கட்டாயம் கொடுக்கக் கூடாது. இதேபோல போலி எஸ்எம்எஸ்கள் வரும்.
உங்களது அக்கவுண்ட்டில் ரூ.5,000 அல்லது ரூ.15,000 பணம் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது என்று எஸ்எம்எஸ்கள் வரும். அதோடு உங்களது விவரங்களை கொடுத்து பணத்தை பெற்று கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இதையும் தவிர்த்துவிடுங்கள். ஒருவேளை உண்மையாகவே பணம் கிரெடிட் செய்யப்பட்டு, அது தவறுதலாக வந்துவிட்டது என்று உங்களுக்கு யாரேனும் கால் செய்தால்?
அதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களுக்கு கியூஆர் கோட் அனுப்பி அதில் செலுத்துங்கள் என்று சொல்லி பணத்தை பறிக்க முடியும். ஆகவே, அவர்களது மொபைல் நம்பர், யுபிஐ ஐடி போன்றவற்றை ஆராய்ந்து, வழக்கமாக நீங்கள் அனுப்பும்படி மட்டுமே அனுப்ப வேண்டும். அதேபோல பேங்க் ஊழியர்கள் போல கால் செய்து உங்களது பெயர், மொபைல் நம்பர் போன்ற விவரங்களை கேட்டாலும்,
அவர்களிடம் பாஸ்வேர்ட், யூசர் ஐடி, ஓடிபி போன்ற விவரங்களை பகிராதீர்கள். சொல்லப்போனால், ஓடிபி விவரங்களை யார் கேட்டாலும் கொடுக்கக்கூடாது. அதேபோல பணத்தை பெறுவதற்கு கியூஆர் கோட் ஸ்கேன் செய்ய வேண்டாம். அனுப்புவதற்கு மட்டுமே அது பயன்படுகிறது. மேலும், உங்களது அக்கவுண்ட் நம்பர் முடக்கப்படுகிறது, உங்களது பணத்தை வேறு கணக்குக்கு மாற்றுங்கள் என்று சொன்னாலும்
அல்லது அபராதம் செலுத்த வேண்டும் என்று யாரேனும் உங்களை தொடர்புகொண்டாலும் அவர்களை தவிர்த்துவிடுங்கள். மேற்கண்டவற்றை ரூ.100 பரிவர்த்தனைக்கும் பின்பற்றுங்கள். சிலர் ரூ.100 தானே என்று எளிதாக எண்ணி பணத்தை இழக்கின்றனர். ஆகவே, இதில் கவனமுடன் இருங்கள். முன்னதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) புதிய யுபிஐ விதிகளை கொண்டு வந்தது.
இந்த விதிகள் மூலம் யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்களில் சிறப்பு எழுத்துக்கள் (Special Characters) இடம்பெறும்பட்சத்தில், அந்த பரிவர்த்தனைகள் நிகாரிக்கப்படுகிறது. எழுத்துகள் மற்றும் நம்பர்கள் மட்டுமே அடங்கிய எண்ணெழுத்து (Alphanumeric) மூலம் மட்டுமே யுபிஐ பரிவர்த்தனை ஐடி அனுமதிக்கப்படுகின்றன. இந்த புதிய விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அமலாகிவிட்டது.


Click it and Unblock the Notifications