உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?
உலகளவிலான டிஜிட்டல் நாட்டிற்கான போட்டியின் ரேங்கிங் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து நாக்கும் ரேங்கிங் முன்னிலையில் வந்துள்ளது. எந்தெந்த நாடுகள் என்னென்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம்.

உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியல்
உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 48வது இடத்திலிருந்துள்ளது. இந்த ஆண்டிற்கான முடிவுகளின் படி இந்தியா நான்கு இடங்கள் முன்னிலையில் வந்து 44வது இடத்தை பிடித்துள்ளது.

தொலைத்தொடர்பு முதலீட்டு
தொலைத்தொடர்பு முதலீட்டில் அதிகளவில் இந்தியா பங்கெடுத்து முதல் இடத்தைப் பிடித்து முன்னேறியுள்ளது. அதேபோல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரிவின் கீழ் பல மாற்றங்களை மேற்கொண்டு கடந்த ஆண்டை காட்டிலும் நான்கு இடங்கள் முன்னிலையில் முன்னேறி வெற்றியடைந்துள்ளது.

டிஜிட்டல் துறை
குறிப்பாக நாட்டின் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால தயார்நிலை போன்ற சேவைகளின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் துறையில் உலக நாடுகளின் பங்கேற்பை ஆராய்ந்து இந்த ரேங்கிங் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் இடம் பிடித்தது யார்?
உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் இடம்பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications