PAN 2.0: பழைய பான் கார்டை தூக்கிப் போடனுமா.. புதிய கார்டில் என்னென்ன வசதிகள் இருக்கு? இதோ முழு விவரம்..
நாட்டில் ஆதார் கார்டு போலேவ பான் கார்டும் (pan card) ஒரு முக்கிய அரசு ஆவணமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது பான் கார்டு. அதுவும் வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமின்றி, வங்கிகளில் குறிப்பிட்ட அளவில் மேல் பணம் எடுப்பதற்கு மற்றும் பண பரிமாற்றத்திற்கு என நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியம் தேவைப்படுகிறது.
அதேபோல் ஒரு நபர் ஒரு பான் மட்டும் வைத்திருக்க முடியும் என்ற நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய பான் 2.0 அட்டை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பான் 2.0 அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள பான் அட்டையில் கியூஆர் கோடு இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது நடைமுறையில் இருக்கும் பான் அட்டையில் எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு உள்ளது. இதனை கியூஆர் கோடாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான் 2.0 அட்டை மூலம் விரைவான சேவையைப் பெறமுடியும். மேலும் தரவுகளின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, செலவினம் குறைப்பு என பல்வேறு பயன்கள் இந்த புதிய பான் திட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.1435 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் பழைய பான் அட்டையை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பின்பு காகிதமின்றி முற்றிலும் ஆன்லைனில் பிரத்யேக இணையதளம் மூலம் இதனைச் செயல்படுத்த இருப்பதாகவும், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த மையமாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதேபோல் புதிய பான் அட்டை குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும், அதற்கான பதில்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய பான் அட்டைகள் வந்தாலும், நடைமுறையில் உள்ள பழைய பான் அட்டைகள் செல்லும். QR குறியீடுகள் இல்லாத பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய பான் கார்டுக்கு விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம். ஆனால் இது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை.
அதேபோல் பான் 2.0 திட்டத்தின் கீழ் QR குறியீடு அம்சத்துடன் கூடிய பான் கார்டுகள் வரி செலுத்துவோருக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்கு எந்த கட்டணமும் இல்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.

ஏற்கனவே பான் அட்டை வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல், மொபைல் எண், முகவரி, பெயரில் மாற்றம், பிறந்த தேதி போன்ற விவரங்களில் ஏதேனும் திருத்தம் அல்லது புதுப்பிக்க வேண்டுமெனில் பான் 2.0 திட்டம் தொடங்கிய பிறகு அவர் அதை இலவசமாகச் செய்யலாம். குறிப்பாக நவம்பர் 26-ல் அமைச்சரவை பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
மேலும் பான் கார்டைத் தவறாகப் பயன்படுத்துவதும், 2 பான் கார்டு பெறுவதும் மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே தெரியாமல் கூட போலி அல்லது ஒன்றுக்கும் மேற்பட பான் கார்டுகளை வைத்திருக்காதீர்கள். இப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், அதை உடனடியாக சமர்ப்பிப்பு செய்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications








