Google Pay-க்கு வச்சாச்சு.. இனி ரூ.15000-க்கு மேல் அனுப்ப.. ஒரு வங்கி கணக்கில் பல யூசர்கள்.. UPI-க்கு வந்தது!
கூகுள் பே (Google Pay) மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்துவரும் ஒவ்வொரு பேங்க் கஸ்டமர்களுக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் - என்பிசிஐ (National Payments Corporation of India (NPCI) விதிகளின்படி புதிய யுபிஐ சர்க்கிள் (UPI Circle) களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பீச்சர் மூலம் என்னென்ன மாறப் போகிறது? மாதத்துக்கு எவ்வளவு பணம் அனுப்ப முடியும்? ஒரே பேங்க் அக்கவுண்ட் வைத்து எத்தனை யுபிஐ ஐடிகளை ஓப்பன் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்?
இந்தியாவில் கோடிக்கணக்கான பேங்க் கஸ்டமர்கள் கூகுள் பே மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். பணம் அனுப்புவதும், பெறுவதும் மிகவும் எளிதாக இருப்பதால் நாளுக்கு நாள் அதை பயன்படுத்தும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் மத்திய அரசு, யுபிஐ ஆப்களுக்கு (UPI) புதிய விதிகளை கொண்டு வர தொடங்கிவிட்டது.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, இந்த விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இப்படியே யுபிஐ சர்க்கிள் பீச்சருக்கான விதிகளும் களமிறக்கப்பட்டன. அதாவது, இந்த யுபிஐ சர்க்கிள் பீச்சரை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களிலும் (UPI Apps) பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் அரசின் விதிகளை பின்பற்றியே இதில் பரிவர்த்தனைகள் நடக்கும்.
இப்படிப்பட்ட இந்த யுபிஐ சர்க்கிள் பீச்சரை, கூகுள் இந்தியா (Google India) நிறுவனம் யூசர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. புதிய அப்டேட் மூலம் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த பீச்சர் மூலம் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இதற்கான விதிகளை இப்போது பார்க்கலாம்.
யுபிஐ சர்க்கிள் ரூல்ஸ் (UPI Circle Rules): கூகுள் பே மூலம் புது யுபிஐ ஐடியை ஓப்பன் செய்யும்போது, ஒரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு ஒரு யுபிஐ ஐடிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பீச்சர் மூலம் அதிகபட்சம் 5 யுபிஐ ஐடிக்களை ஓப்பன் செய்து கொள்ள முடியும். இந்த அனைத்து ஐடிகளுக்கும் ஒரேவொரு பேங்க் அக்கவுண்ட் போதும்.

அதே நேரத்தில் பேங்க் அக்கவுண்ட்டில் இணைக்கப்பட்டிருக்கும் நம்பர் மூலம் ஓப்பன் செய்யப்பட்ட யுபிஐ ஐடியானது, பிரைமரி யூசராக எடுத்து கொள்ளப்படும். இதற்கு அடுத்து ஓப்பன் செய்யும் ஐடிக்கள் செகண்டரியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். ஆகவே, பிரைமரி யூசருக்கு பல்வேறு அதிகாரங்கள் கிடைக்கும். செகண்டரி யூசர் செலவழிக்கும் பணத்துக்கு லிமிட் வைக்கலாம்.
அதாவது, யுபிஐ சர்க்கிள் விதிகளின்படி செகண்டரி யூசர் மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.15,000 செலவு செய்து கொள்ளலாம். இல்லையென்றால், ரூ.5000 அல்லது ரூ.10000 வரையில் லிமிட் செய்து கொள்ளவும் பிரைமரி யூசருக்கு அனுமதி வழங்கப்படும். இதுபோக செகண்டரி யூசர் யுபிஐ பேமெண்ட்களை செய்யும்போது, பிரைமரி யூசரின் அனுமதி கேட்கப்படும்.
ஆகவே, பிரைமரி யூசரின் அனுமதிக்கு பிறகே செகண்டரி யூசர் எளிதாக பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் அதிகபட்சம் ரூ.15,000 மட்டுமே மாதத்துக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இந்த செகண்டரி யூசர்களை எப்போது வேண்டுமானாலும், நீக்கவும், சேர்க்கவும் பிரைமரி யூசருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், பிரைமரி யூசரின் யுபிஐ ஐடி மட்டுமே பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். செகண்டரி யூசர்களை இணைக்க விரும்பினால், அவர்களின் மொபைல் நம்பர் பிரைமரி யூசரின் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்க வேண்டும். இந்த செகண்டரி ஐடியை ஓப்பன் செய்த பிறகு அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளுக்கான பேமெண்ட் ரெக்கொஸ்ட் பிரைமரி யூசருக்கு அனுப்பப்படும்.
இதில் செகண்டரி யூசர் செலவு செய்ய விரும்பும் தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை பார்த்து உறுதி செய்ய பிறகு பணத்தை பேங்கில் இருந்து பரிமாற்ற பிரைமரி யூசர் அனுமதி வழங்கலாம். இந்த பீச்சர் முதலில் கூகுள் பே ஆப்பில் வருகிறது. போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களிள் அடுத்தடுத்து அப்டேட் மூலம் கொண்டு வரப்படும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








