Home
News

ரயில் பெட்டிகளில் இந்த மஞ்சள் நிற கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு என்ன அர்த்தம்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் இந்தியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் பேருந்துகளுக்கு அடுத்தபடியாக ரயில் (train) பயணங்களைத் தான் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது. பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. இப்படிப் பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்திய ரயில் பெட்டிகளின் மீது மஞ்சள், வெள்ளை, பச்சை கோடுகள் இருப்பதற்குத் தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரயில் பெட்டிகளில் இந்த மஞ்சள் நிற கோடுகள் ஏன் இருக்கிறது?

அதாவது இந்தியாவில் இயக்கப்படும் அதிவிரைவு வண்டிகள், விரைவு வண்டிகள் நீல நிறங்களில் இருக்கும். இந்த நீலநிற ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளைக் கோடு இருந்தால் முன்பதிவு இல்லாத (unreserved coach) பெட்டிகள் என்று அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரயில் பெட்டிகளில் மஞ்சள் நிற கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நலம் முடியாதவர்களுக்குச் சிறப்பு பெட்டி என்று அர்த்தம். இதுதவிர பச்சை மற்றும் கிரே நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மகளிருக்கான சிறப்பு பெட்டிகள் ஆகும். பயணிகள் வசதிக்காக இந்திய ரயில்வே இதுபோன்ற அடையாளங்களை ரயில் பெட்டிகள் பயன்படுத்துகின்றன.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே அமைப்பு சூப்பர் ஆப் (Super App) என்ற மொபைல் ஆப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படும் பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

ரயில் பெட்டிகளில் இந்த மஞ்சள் நிற கோடுகள் ஏன் இருக்கிறது?

அதாவது தற்போது டிக்கெட் ரத்து செய்யப்படும்பட்சத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு மூன்று நாள்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சூப்பர் ஆப் வந்தால் 23 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறமுடியும். அதேபோல் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் IRCTC Rail Connect ஆப் வசதியை 100 மில்லியனுக்கும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்த IRCTC Rail Connect ஆப் ஆனது ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவிற்கான ஒரே தளமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 10 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட UTS ஆப்பில், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ரயில் பெட்டிகளில் இந்த மஞ்சள் நிற கோடுகள் ஏன் இருக்கிறது?

இப்படித் தனித்திருக்கும் ஆப்களின் செயல்பாடுகளை பொதுவாக ஒரே தளத்தில் கொண்டுவரும் முயற்சியாகத் தான் இந்த சூப்பர் ஆப் வடிவமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இது 100 நாள் திட்டமாக முதலில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் புதிய சூப்பர் ஆப்பின் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்குப் பல கோடிகள் செலவாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் பதவியேற்கும் புதிய அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய சூப்பர் ஆப் ஆனது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know the secrets behind the white, yellow and gray stripes on train carriages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X