ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ பரக் அகர்வால் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்.!

|

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியரான பரக் அகர்வாலின் சம்பளம் குறித்து தேடிய செய்தி சமூகவலைத்தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக விரிவான தகவலைப் பார்ப்போம்.

பராக் அகர்வால்

பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் சி.இ.ஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி ராஜினாமா செய்தார். குறிப்பாக அவருக்கு பதிலாக ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பரக் அகர்வால் என்பவர் பொறுப்பேற்கிறார்.

ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!

 இதுகுறித்து ஜாக் டோர்ச்சி தனது

அதேபோல் இதுகுறித்து ஜாக் டோர்ச்சி தனது ஊழியர்களுக்கு ஏழுதியுள்ள கடிதத்தில், கடந்த 16 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் இணை நிறுவனர் முதல் தலைமை நிர்வாக அதிகாரி வரை, நிர்வாகத் தலைவர், இடைக்கல சிஇஓ எனப் பல பொறுப்புகளில் பணியாற்றிய பிறகு இது நான் வெளியேறுவதற்கான நேரம் என முடிவு செயதுள்ளேன். குறிப்பாக ட்விட்டர் அதன் நிறுவனர்களிடம் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராக உள்ளது என நம்புவதால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

வெளியான விவரக்குறிப்புகள்: ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள், விலை என்ன?வெளியான விவரக்குறிப்புகள்: ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள், விலை என்ன?

 இப்போது ட்விட்டரின்

மேலும் இப்போது ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பரக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கான அகர்வால் அவரின் தலைமை செயல் அதிகாரி பணிக்காக எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பது பற்றி அதிகமாக அதிகமாக தேடப்பட்டுள்ளது.

வந்துருச்சு.,அறிமுகமான ரெட்மி நோட் 11டி 5ஜி- 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா என எல்லாமே வேறலெவல்-விலை இன்னும் குறைவுவந்துருச்சு.,அறிமுகமான ரெட்மி நோட் 11டி 5ஜி- 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா என எல்லாமே வேறலெவல்-விலை இன்னும் குறைவு

தகவலின்படி, ட்விட்டர் நிறுவ

வெளிவந்த தகவலின்படி, ட்விட்டர் நிறுவனம் அவருக்கு அளித்துள்ள பணி ஆணையில் ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் ஊதியம் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பரக் அகர்வாலுக்கு ஊக்கத் தொகையாக அவரின் ஆண்டு வருமானத்தில் 150 சதவிகிதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராண்ட் டேட் ஃபேஸ் வேல்யூவின் கீழ் 12.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது தவிர பிற அனைத்து சலுகைகளும் அவருக்கும் கிடைக்கும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வா தலைவா., வா தலைவா: மின்சார கார் தயாரிக்கும் சியோமி., ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்- விலை குறைவாகதான் இருக்கும்!வா தலைவா., வா தலைவா: மின்சார கார் தயாரிக்கும் சியோமி., ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்- விலை குறைவாகதான் இருக்கும்!

சுமார் 10 ஆண்டுகளாக ட்விட்ட

பரக் அகர்வால் சுமார் 10 ஆண்டுகளாக ட்விட்டரில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக அவரின் உழைப்பிற்கு கிடைத்தசன்மானம் தான் இப்போதைய புதிய தலைமை செயல் அதிகாரி பதவி ஆகும். அதேபோல் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவுக்கு பிறகுஇந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொருவர் முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக
அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அவர்களை புறக்கணிப்போம்: பிஎஸ்என்எல்லே துணை- ஜியோ, ஏர்டெல், விஐ விலை உயர்வு விவகாரம்: அணல் பறக்கும் மீம்ஸ்கள்!அவர்களை புறக்கணிப்போம்: பிஎஸ்என்எல்லே துணை- ஜியோ, ஏர்டெல், விஐ விலை உயர்வு விவகாரம்: அணல் பறக்கும் மீம்ஸ்கள்!

இன்று ட்விட்டர் நிறுவனம் சா

அதேபோல் இன்று ட்விட்டர் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின்படி, தனிநபர் விவரங்களை, அவரது ஒப்புதலின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனிநபர் உரிமைகளை காப்பது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்சியாக தான் ஒருவரின் புகைப்படம், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண்கள் உள்ளிட்ட அடையாளங்களை அவரது ஒப்புதல் இன்றி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Do you know the salary of Parag Agrawal, the new CEO of Twitter? Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X