அடேங்கப்பா என சொல்ல வைக்கும் ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக்கின் சம்பளம்.!
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ டிம் குக்கின் இந்த ஆண்டு வருமான குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஸ்டீவ் ஜாப் மறைவிற்குப் பின்னர் 2011-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக டிம் குக் பொறுப்பேற்றார். மேலும் 10 ஆண்டுகள் இவர் இந்தப் பணியில் இருப்பார் என ஒப்பந்தம் போடப்பட்டது.

குறிப்பாக இப்போது வெளிவந்த தகவலின்படி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு இந்த ஆண்டு 750 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5,518 கோடிரூபாய்) ஊதியமாக வழங்கப்பட உள்ளது. சுருக்கமாக ஒவ்வொரு ஆண்டிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பிற்கேற்ப இவருக்கும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி கடைசி ஆண்டான 2021-ல் இவருக்கு 750 மில்லியன் டாலர் ஊதியமாகவழங்கப்பட உள்ளது. குறிப்பாக டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்ற இந்த 10 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 1200 மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல் இந்தியாவில் பல செல்போன் நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்பு ஸ்மார்ட்போன்களை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

அதாவது தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான மென்பொருள் வசதி, சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. எனவே மக்கள் ஐபோன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஐபோன்கள் விற்பனை இந்தியாவில் இருமடங்கு உயர்ந்துள்ளதாக சமீபத்தில் டிம் குக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஐபோன் 13 மாடல்கள் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மேக்ருமர்ஸின் அறிக்கை, வெட்புஷின் டேனியல் ஐவ்ஸின் முதலீட்டாளர் குறிப்பை மேற்கோள் காட்டியுள்ளது. இதன் படி, குபெர்டினோ தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 சீரிஸை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் அறிமுகம் செய்யக்கூடும் என்று அந்த தகவல் குறிப்பிடுகிறது. இருப்பினும், சாதனத்தின் சரியான வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.குறிப்பாக ஐபோன் 13 மாடல்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications