Home
News

முகேஷ் அம்பானியின் Antilla வீட்டின் ஒரு மாத கரண்ட் பில்.. கேட்கவே தலை சுத்துது போங்க..

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) உலகளவில் மிகப்பெரிய வணிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் மலிவு விலையில் இணைய சேவை வழங்கியதோடு அனைத்து தரப்பினரும் 4ஜி, 5ஜி இணைய வேகத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதேபோல் இவர் அடையாத உயரம் இல்லை, இவர் பெறாத அதிர்ஷ்டம் இல்லை.

அதாவது பணம், புகழ், அதிகாரம், வியாபார வல்லமை ஆகியவற்றில் முகேஷ் அம்பானி உலகளாவிய அளவில் நற்பெயரைப் பெற்றுள்ளார். மேலும் கடந்த பல ஆண்டுகளாக அம்பானியின் ரிலையன்ஸ் (Reliance) மிகப்பெரிய சாதனை லாபத்தைப் பெற்று வருகிறது. அதேசமயம் சமுதாயத்திற்குப் பல நன்மைகளையும் செய்து வருகிறது.

முகேஷ் அம்பானியின் Antilla வீட்டின் ஒரு மாத கரண்ட் பில்..

அதேபோல் உலகளவில் மிகவும் விலையுயர்ந்த தனியார் இல்லம் என்றால் அது அண்டிலியா (antilla) தான். இந்த மாளிகையானது முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. அதுவும் இந்த 27 மாடி கொண்ட வானளாவிய கட்டிடம் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி. ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா, பிருத்வி மற்றும் வேதா அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தினரின் வசிப்பிடமாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டிலியா இல்லம் ஆனது தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் 4,532 சதுர மீட்டர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. அதுவும் இந்த ஆடம்பரமான மாளிகையில் உடற்பயிற்சி கூடம், மினி தியேட்டர், மொட்டை மாடி தோட்டம், நீச்சல் குளம், ஸ்பா, கோவில், என இந்த மாளிகையில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறப்படுகிறது.

அண்டிலியா மாளிகையின் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் சிகாகோவை தளமாகக் கொண்ட கட்டிடக் கலைஞர்களான பெர்கின்ஸ் மற்றும் வில் ஆகியோரால் அண்டிலியா கட்டப்பட்டது. குறிப்பாக இந்த பிரம்மாண்டமான இல்லத்தை பராமரிக்க உதவியாக 600 ஊழியர்கள் உள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள்/ காவலர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறை உள்ளது என்று கூறப்படுகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது அனைத்துமே ஆடம்பரமாக இருக்கும் இந்த அண்டிலியா மாளிகையில் மின்சார கட்டணமும் சற்று அதிகமாக தான் வருகிறது. அதாவது மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அண்டிலியா ஒவ்வொரு மாதமும் சுமார் 6,37,240 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் அண்டிலியா ஒரு மாத மின்சாரக் கட்டணம் சராசரியாக ரூ. 70 லட்சம் ஆகும், மேலும் பண்டிகைக் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகேஷ் அம்பானியின் Antilla வீட்டின் ஒரு மாத கரண்ட் பில்..

மேலும் இந்த அண்டிலியா கட்டிடத்தின் ஆறு மாடிகள் 168 கார்கள் நிறுத்துமளவிற்கு பார்க்கிங் பகுதிக்கெனவே அர்ப்பணிக்கப்பட்டன. அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாக செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அன்டிலியா மாளிகையின் கூறையில் 3 ஹெலிபேட்கள் உள்ளன. பின்பு ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக சொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது. அதேபோல் முகேஷ் அம்பானி ஒரு டீடோட்டலர் ஆவார். அம்பானி அவரின் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவைத்தது இல்லையாம். மேலும் அவர் ஒரு சுத்தமான சைவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

photo credit: gqindia

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know the electricity bill of Mukesh Ambani s Antilla house: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X