பிஎஸ்என்எல் ரூ 298 மற்றும் ரூ 299 திட்டங்கள்: இரண்டு ரீசார்ஜ் திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மற்ற தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்நிறுவனம் ரூ.298 மற்றும் ரூ.299 விலைகளில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்த திட்டங்களில் 1 ரூபாய் மட்டுமே வித்தியாசம் உள்ளது, ஆனால் அவற்றின் பலன்களில் பெரிய வித்தியாசம் உள்ளது, இது உங்களை ஆச்சரியப்படுத்தலாம். இப்போது இந்த திட்டங்களுக்குள் என்ன வித்தியாசம், என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று விரவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள்.

இரண்டு திட்டங்களுக்கும் வித்தியாசம் என்ன
அதாவது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் சற்று குறைவான டேட்டாவை வழங்கினாலும் EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது, எனவே இந்த ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. மேலும் இப்போது சிறந்த சலுகைகளை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களைப்பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தனிசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 100ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இதில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி, பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும். குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.இதுதவிர BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில்பெறமுடியும்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications