Home
News

அடுத்து இதுதான்.. UPI பேமெண்ட்.. QR கோட் ஸ்கேனிங்.. கஸ்டமர்களுக்கு NPCI வெச்ச புதிய பேமெண்ட் அனுமதி!

இந்தியர்களின் கோடிக்கணக்கான பணம் யுபிஐ (UPI) மூலம் நாள்தோறும் பரிமாற்றப்படுகிறது. கிட்டத்தட்ட அத்தியாவசிய தேவைப்போல மாறிவிட்ட இந்த யுபிஐ சேவையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India - NPCI) முக்கிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த மாற்றமானது, கியூஆர் கோட் பேஸ்டு யுபிஐ பேமெண்ட்களில் (QR Code-Based UPI Payments) நேரடி மாற்றத்தை செய்ய இருக்கிறது. இதுகுறித்த இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் முழு விவரங்கள் இதோ.

யுபிஐ சேவைகள் பற்றி யாருக்கும் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் முதல் அந்தந்த வங்கிகளின் மொபைல் ஆப்கள் வரையில் இந்த சேவையை எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். பொட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் இந்த யுபிஐ சேவை வந்துவிட்டது.

அடுத்து வந்தாச்சு புதுசா.. UPI பேமெண்ட்.. QR கோட் ஸ்கேனிங்ல வருது!

நொடியில் பணத்தை பரிமாற்றி கொள்ளலாம். கையில் பணம் எடுத்து செல்ல வேண்டியது கிடையாது. ஆகவே, ரூ.10 செலவுக்கு கூட யுபிஐ ஆப் பயன்படுத்தும் வழக்கமும் வந்துவிட்டது. இப்படிப்பட்ட சேவையை இந்தியாவில் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலும் கொடுக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே, நோபால், சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், பூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யுபிஐ சேவைகள் கிடைக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 20 நாடுகளில் யுபிஐ சேவைகளை கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது, இந்தியர்கள் அதிகமாக சென்றுவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் - யுஏஇ (United Arab Emirates - UAE) யுபிஐ சேவைகள் களமிறங்கி இருக்கிறது.

இதற்காக, இந்தியாவின் என்பிசிஐ இன்டர்நேஷனல் (NPCI International) நிறுவனமானது, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் டிஜிட்டல் வர்த்தக சேவையை வழங்கிவரும் நிறுவனமான நெட்வொர்க் இன்டர்நேஷனல் (Network International) உடன் கைக்கோர்த்துள்ளது. ஆகவே, துபாய், அபு தாபி, ஷார்ஜா போன்ற இந்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சேவை கிடைக்கும்.

அடுத்து வந்தாச்சு புதுசா.. UPI பேமெண்ட்.. QR கோட் ஸ்கேனிங்ல வருது!

அதேபோல இந்திய பயணிகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். சொல்லப்போனால், இந்திய பயணிகளின் வருகையை இந்த சேவை மூலம் யுஏஐ அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்தியர்களுக்கும் மிகவும் பாதுகாப்பான பரிவர்த்தனைகள் அரபு அமீரகத்தில் உறுதி செய்யப்படும்.

இந்த சேவை எப்படி கிடைக்கிறது? துபாய், அபு தாபி, ஷார்ஜா உள்ளிட்ட அரபு அமீரகத்தின் அனைத்து நகரங்களிலும் பிஓஎஸ் மெஷின்களில் (PoS Machines) கியூஆர் கோட் மூலம் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆகவே, பிரபலான மால்கள் முதல் சூப்பர் மார்கெட்டுகள் வரையில் பிஓஎஸ் மெஷின்கள் மூலம் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

சொல்லப்போனால், அரபு அமீரகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பிஓஎஸ் மெஷின் சேவைகள் வழக்கமானதுதான். மீதமுள்ள பகுதிகளிலும் இந்திய பயணிகளின் வருகையை அதிகரிக்க இந்த பிஓஎஸ் மெஷின்கள் கொண்டுவரப்பட்டாலும் ஆச்சர்யப்படுவற்கில்லை. அரபு அமீகரத்தை சேர்ந்து இப்போது 7 நாடுகளில் யுபிஐ சேவைகள் (UPI Services) கிடைக்கின்றன.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபால், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும், நட்பு நாடுகளான சிங்கப்பூர், மொரிஷியஸ், பிரான்ஸ் மற்றும் இப்போது அரபு அமீரகத்திலும் சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும் நாட்களில் உலகளவில் மேலும் பல்வேறு நாடுகளில் யுபிஐ சேவைகள் பரவலாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know NPCI Allows QR Code-Based UPI Payments in UAE Via Point of Sale Machines How Its Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X